Pictures of Gourmet Food

Tuesday, March 20, 2018

ராம ராஜ்ஜியம் யாருக்காக ?

1. கரிகாலன் கட்டிய கல்லணை இன்றும் கம்பீரமாக இருக்கின்றது
2. ராஜராஜசோழன் கட்டிய பிரகதீஸ்வர்ர் ஆலயம் 1000ம் ஆண்டுகள் கழித்தும் இன்றும் பிரம்மாண்டமாக தமிழனின் கட்டிடக்கலையினை உலகுக்கு உணர்த்துகிறது 
3. பல்லவர்கள் கட்டிய குடைவரைக் கோவில்களின் கலை நுட்பத்தை உலகமே வியக்கின்றது
4.காமராஜர் கல்விக்கண் திறந்து உலகம் முழுக்க தமிழன் சென்று சாதனை படைக்க வழிவகை செய்தார் .

இவை அனைத்தையும் மறந்து விட்டு ராமரை மேற் சொன்ன அனைவரையும் விட உயர்ந்தவராக முன்னிறுத்துவதன் நோக்கம் என்ன ? 

தமிழனின் ராஜ்ஜியம் தான் தற்போதைய தேவை. ராம ராஜ்ஜியம் முன்னிறுத்துபவர்கள் முதலில் தங்கள் ஊரில் உள்ள குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறக்காமல் காக்க வழிவகை செய்யுங்கள். 
நன்றி

Monday, March 19, 2018

பிஸ்தா -எனக்கு எப்படி வேலை போச்சுன்னு தெரியுமா சார்?

கார்த்திக் நடிப்பில் வெளிவந்த பல்வேறு முழு நீள நகைச்சுவை படங்களில் பிஸ்தாவும் ஒன்று.  கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் , எப்படிப்பட்ட மனசோர்வையும் எளிதில் போக்கும் திரைகாவியம்.  ரவுடியான கார்த்தி அய்யப்பனுக்கு மாலை போட்டிருக்கும் பொது நல்லவனாக இருக்கையில் அவரை மௌளலியும் அவர் மகள் நக்மாவும் ஏமார்ந்து போவதால் வரும் வினைகள் தான் படத்தின் கதை.படத்தில் எனக்குப் பிடித்த காட்சிகள் மற்றும் சிறப்புகள்  1.நக்மா முதல் பாதியில் மார்டன் உடையிலும், பிற்பகுதியில் சேலையிலும் ஜொலிக்கிறார். 
2. கார்த்தி தலையில் மாட்டிய குண்டானை அக்கறை போராடும் காட்சி 
3.பிச்சைக்காரர்களை வீட்டுக்கு அழைத்து வந்து செய்யும் ரகளை
4. Factoryல் கார்த்திக்கு மாலை போட்டிருக்கும் போதும் , மலைக்குபோய் வந்த பிறகும் கிடைக்கும் வரவேற்பு 
5.கிளைமேக்ஸ் காட்சியில் மன்சூர் அலிகான் செய்யும் அடாவடிகள் 
மேலே  சொன்னது போல பல காட்சிகள் இந்தப் படத்தில் பல்வேறு காட்சிகள் பலருக்கும் பிடித்தமானவையாக இருக்கும்.

இந்தப் படைத்தேன் சிறப்பே மிக மிக simple ஆன கதை , அதனை நம்மை கொஞ்சம் கூட சோர்வடைய விடாமல் நகர்த்திய விதத்தினால் தான் பலருக்கும் இன்றும் என்றும் பிடித்த படமாக இருப்பதற்கு காரணம் . படம் முழுக்க கார்த்தி சொல்லும் ஒரு வசனம் எனக்கு எப்படி வேலை போச்சுன்னு தெரியுமா சார்  என்பது தான் ? இதற்கு உங்கள்யாருக்காவது விடை தெரியுமா ?

நன்றி 
செங்கதிரோன் 

Monday, March 5, 2018

பலூன் படத்தில் அஞ்சலியின் புலம்பல்
பலூன் படம் ஜெய் மற்றும் அஞ்சலி நடிப்பில் வெளிவந்து சுமாரான வெற்றி என்று படக்குழுவினரே அறிவித்து புதுமையை உண்டாக்கினர்.அது மட்டுமன்றி ஜெய் குடித்து விட்டு படப்பிடிப்புக்கு வந்தார் என்று படக்குழுவினர் புகார் பட்டியல் வாசித்தனர் . ஆனால் இந்தப் பதிவின் நோக்கம் , பலூன் படத்தில் அஞ்சலி சொன்ன முக்கிய ஒரு சமூக பிரச்சனை ,அது அதிகம் யாராலும் கவனிக்கப்படல்லை. 

நம் அம்மாக்கள் மகள்களிடம் , என்னை  போல நீயும் காசுக்காக கணவனையே நம்பியிருக்கும் நிலை வரக்கூடாது , படித்து வேலைக்கு சென்று உங்கள் கையில் காசு இருக்க வேண்டும் என்று சொல்லி வளர்த்தனர் . மத்திய தர வர்க்கத்தில் இது அதிகம் நடந்தது . பெண்களும் நன்கு படித்து நல்ல வேலைக்கு சென்று சம்பாதிக்கின்றனர் . 

பலூன் படத்தில் வேலைக்கு சென்று விட்டு களைப்பாக வரும் அஞ்சலி , ஜெய்யிடம் சொல்லும் அந்த வசனம் நிகழ்காலத்தில் வேலைக்கு செல்லும் அனைத்துப் பெண்களின் குரலாகவே நான் பார்க்கின்றேன்.  படம் பார்த்தவர்க்ளுக்கு அந்தக் காட்சி ஞாபகம் இருக்கும் , ஜெய் இயக்குனர் ஆவதற்கான முயற்சியில்  திரைக்கதை எழுதிக் கொண்டிருப்பார், வேலைக்கு சென்று விட்டு திரும்பி வரும் அஞ்சலி அவரிடம் , நீ சீக்கிரம் இயக்குனராகி சம்பாரிக்க ஆரம்பி , நான் வேலையை விட்டு விட்டு குழ்ந்தை பெற்றுக் கொண்டு வீட்டில் ஓய்வு எடுக்க விரும்புகிறேன்  என்று கூறுவார். என்னை மிகவும் பாதித்த காட்சி . அஞ்சலியின் இந்தப் புலம்பல் ,வேலைக்கு செல்லும் பல்வேறு பெண்களின் குரல் . 


பெண்களுக்கு கம்ப்யுட்டர் வேலைகள் , கொடுக்கும் மன அழுத்தம் நீண்ட காலம் அவர்களால் சமாளிக்க முடியவில்லை. அதுவும் அரசாங்கம், தனியார் நிறுவனங்கள் குழந்தைப் பேறுகால விடுமுறையினை ஒரு வருடத்திற்கு மேல் சம்பளத்துடன் கூடிய விடுப்பாக வழங்க வேண்டும் .

ஆண்களால் உடல் மனம் சார்ந்த வேலைகளை பல மணி நேரம் செய்ய இயலும் , பெண்களால் அவ்வாறு செய்ய இயலாத. இது பிற்போக்குத்தனமான கருத்து அல்ல , இது மருத்துவ அடிப்படையில் நிருபிக்கப்பட்ட ஒன்று. இதை விட முக்கியமான ஒன்று வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டில் இருக்கும் பெண்களை பார்த்து பெருமூச்சு விடுகின்றனர் . ஆனால் முன்பெல்லாம் வேலைக்குப் போகும் பெண்களைப் பார்த்து   வீட்டில் இருக்கும் பெண்கள் தான் பெருமூச்சு விட்டனர் . 

தீர்வென்று பார்த்ததில் நிறுவனங்கள் பெண்களின் திறமையினை உடல் உழைப்பு சார்ந்து  அதிகம் பெறாமல் அவர்களுக்கு தகுந்த வேலையினை கொடுக்க வேண்டும் 

பலூன் பட இயக்குனருக்கு பாராட்டுக்கள், ஒரு நிமிடக் காட்சியாக இருந்தாலும் மிக அருமையாக தன்  சமுகப் பங்களிப்பினை செய்திருக்கின்றார்.

நன்றி 
செங்கதிரோன் 

Friday, March 2, 2018

கொலு பொம்மை-News 7 நெறியாளர் சுகிதாசுகி

News 7 நெறியாளர் சுகிதாசுகி மீண்டும் மீண்டும் விவாத நிகழ்ச்சி நடத்த தான் தகுதியான நபர் அல்ல என்பதை நிரூபிக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றார். அவரின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் . காலா குறித்த கேள்வி நேரம் நிகழ்ச்சியினை பார்த்தவர்களுக்கு நான் சொல்வது சரியென்று புரிந்து கொள்வார்கள் .
சமையல் நிகழ்ச்சியில் ஆரம்பித்த இவரது பயணத்தில் இன்று வரை பதுவிதமான சாதனையும் நிகழ்த்திடாமல் வெறும் கொலு பொம்மையாகவே தன் பயணத்தினை தொடர்கின்றார்.நன்றி 
செங்கதிரோன் 

Thursday, March 1, 2018

நெருப்புடா பாடல் உருவானது எப்படி?கபாலி படம் என்றாலே நினைவுக்கு வரக்கூடிய முக்கிய அம்சம் நெருப்புடா பாடல் . அந்தப்பாடல் எப்படி உருவானது என்ற ரகசியம் வெளிவந்திருக்கின்றது, இந்தப் பாடலை எழுதியவர் அருண்ராஜா காமராஜா . இவர் பன்முகத்திறைமை கொண்டவர் , அவற்றில் ஒன்று தான் நகைச்சுவை திறமை. கபாலி படத்திற்கான அறிமுகப்பாடலை எழுத ரஞ்சித் அவர்கள் அருண்ராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்தார் .

எவருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு , அதுவும் இதுவரை வைரமுத்து மட்டுமே செய்து வந்த அந்தப் பணி அருண்ராஜாவுக்குக் கிடைக்கின்றது . திருவிளையாடல் நாகேஷ் போல 'சொக்கா சொக்கா ' என்று புலம்பிக் கொண்டிருக்கின்றார் . அப்பொழுது மனதை அமைதிப்படுத்த  சுட்டி டிவியில் காமெடி பார்த்துக் கொண்டிருந்தார் . அப்பொழுது தான் அந்த வரலாற்று சம்பவம் நடந்தது. அருண் விஜய் நடித்த மாஞ்சா வேலு படத்தின் காமெடி காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தது . அதில் சந்தானத்திடம் , மனோகர் நான் "நெருப்புடா" என்று சவால் விடுவார். அருண்ராஜா துள்ளி குதிக்க ஆரம்பித்து விட்டார் ,புடிச்சிட்டேன் , புடிச்சிட்டேன் . மாஞ்சா வேலு வந்த ஆண்டு 2010. கபாலி வந்த ஆண்டு 2015. கூட்டி கழிச்சசி பார்த்தீங்கன்னா கணக்கு சரியா வரும் . கீழே அந்த படத்தின் காமெடி காட்சி பார்த்தல்  நான்  சொன்னது உண்மை என்று உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் .

நன்றி 
செங்கதிரோன்