Monday, January 16, 2012

தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களைவிட துக்ளக் ஆண்டு விழா முக்கியமா அத்வானிக்கு ......



திராவிட இயக்கங்கள் தொடங்கியதே ஆதிக்க சக்திகளின் அட்டூழியங்களை ஒழித்துக் கட்டவும் தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்வதற்காகவும்தான்,அதன் ஒரு பகுதி தான் உலகப் பொதுமறை எழுதிய வள்ளுவருக்கு `கோட்டம்` கட்டப்பட்டதும்.


அத்தனை சிறப்பு வாய்ந்த இடத்தில் 10 ,000 பிரதிகள் கூட விற்பனையாகாத, தமிழர் விரோத கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வரும் "துக்ளக் " பத்திரிக்கைக்கு ஆண்டு விழா நடந்தேறி இருக்கின்றது. இதற்கான நிதி ஆதாரம் பற்றியோ அல்லது விழாவுக்கான அவசியம் பற்றியோ எந்த ஒரு பத்திரிக்கையும் கேள்வி கேட்பதில்லை. எல்லோருமே கூட்டுகளவாணிகள் என்பதனை மக்கள் நன்கு அறிவார்கள்.


விழா நடத்துவது அவர்களின் உரிமை அதை யாரும் தடுக்கவோ தலையிடவோ முடியாது என்றாலும் ,இதில் பங்கேற்ற முக்கிய விருந்தினர்களின் நோக்கம் என்னவென்றே புரியவில்லை.


தானே புயலால் தத்தம் வீடு வாசல் இழந்து ,தண்ணீர் மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளைக்கூட பொங்கல் அன்று கூட பெற முடியாமல் தவித்து கொண்டிருக்கும் எம்மக்களைப் பற்றி சிறிதும் கவலை படாமல் இது போன்ற விழாக்களில் கலந்து கொண்டு பூரிப்படையும் கல் நெஞ்சர்களை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு கொள்வது அவசியம்.


விழாவுக்கு கலந்து கொள்வதற்காக டெல்லியிலிருந்து சென்னை வந்த அத்வானிக்கு அங்கிருந்து 200 கி .மீ. தொலைவில் இருக்கும் மக்களை சென்று பார்த்து ஆறுதல் கூற மனமில்லாமல் போனது ஏன்? எங்கள் ஓட்டு வேண்டுமென்றால் சந்து போந்து கூட பார்க்காமல் பிச்சை கேட்டு வரும் உங்களுக்கு தவிக்கும் மக்களைப் பற்றிய அக்கறை சிறிதும் இல்லாமல் போனது ஏன்?