Pictures of Gourmet Food

Thursday, January 29, 2015

வெள்ளை நிற தாழ்த்தப்பட்டவர்கள்

தாழ்த்தப்பட்ட  மக்கள் என்றாலே கருப்பாக இருப்பவர்கள் என்று பதிந்து போன இந்திய மனதில் வெள்ளை நிறத்தில் எப்படி தாழ்த்தப்பட்டவர்கள் இருக்க முடியும் என்ற கேள்வி இயல்பானதே. ஆனாலும் இருக்கின்றார்கள் இந்தியாவில் அல்ல வெளிநாடுகளில் ,அதாவது அங்குள்ள பூர்வீகக் குடிமக்களை நம்மூரில் தாழ்த்தப்பட்ட மக்களை எவ்வாறு ஒதுக்கி வைக்கும் சூழ் நிலை இருக்கின்றதோ அதே நிலை தான் அவர்களுக்கும்.நிறத்தில் வெள்ளயாக இருந்தாலும் பூர்வீகக் குடிகள் என்பதாலேயே ஒதுக்கிவைக்கபப்ட்டுள்ளனர்  ,குறிப்பாக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அவர்கள் ஒரு தகுதியான இடம் பிடிக்க இயலவில்லை. காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த அவர்கள் இப்பொழுது இடம் பெயர்ந்து நகரங்களுக்கு வர தொடங்கி இருக்கின்றனர். ஆனால் ஆனால் இங்கு அவர்களை வெள்ளை நிற சமூகம் அவர்களை காட்டு மிராண்டிகளாகவும் தீயவர்களாகவும் பார்க்கின்றனர். சமூகத்தால் ஒடுக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர். 

தற்பொழுது பூர்வீகக் குடிமக்களின் தொடர் போராட்டம் காரணமாக ஏராளமான சலுகைகளை அரசாங்கங்கள் வழங்கி வந்தாலும் , அவற்றை சரிவரப் பயன்படுத்தி முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லும் தலைமை இல்லை. நம் ஊரில் இருப்பது போலவே அனைத்துத் தலைவர்களும் இந்தப் பணத்தினை பங்கு போட்டுக் கொண்டு அம்மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.அம்மக்களில் சிலர் அரசாங்கம் கொடுக்கும் பணத்தினை மட்டும் பெற்றுக் கொண்டு எந்த வேலையையும் செய்யாமல் பொழுதை கழிக்கின்றனர். அது மட்டுமன்றி காடுகளில் கீழங்குகளையும் இறைச்சிகளையும் உண்டு உடல் உறுதியுடன் வாழ்ந்தவர்கள் தற்பொழுது நகரங்களில் பல விதமான நொறுக்குத் தீனிகள் ஜங்க் உணவுகளை உண்டு ஆரோக்க்கிய மற்ற மனிதர்களாக பல்வேறு மருத்துவமனைகளில் பார்க்கும் போது மிகக் கவலையாக இருக்கின்றது.

இருப்பினும் தற்பொழுது நிலைமை சிறிது மாற்றம் அடைந்து வருகின்றது. குறிப்பாக கனடாவில் இம்மக்களுக்கு என்று தனியாக தொலைக்காட்சி நிறுவனம் பல்கலைக் கழகம் என்று இவர்களாகவே ஏற்படுத்தி தங்கள் சமூக மக்கள் முன்னேறப் பாடுபடுகின்றனர். இயற்கை 
வளங்களை பாதுகாப்பதில் இவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.பொது இடங்களிலும் ,தொழில் நிறுவன்ங்களிலும் இவர்களை வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்ப்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலகம் முழுக்கவே பூர்வீகக் குடிகளின் இடங்களை ஆக்கிரமித்த  அந்நியர்கள் அம்மக்களின் உரிமைகளைப் பறித்ததோடு மட்டுமன்றி அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக எண்ணும் போக்கு இருக்கின்றது.

இறுதியாக சொல்ல விரும்புவது இப்பூர்வீகக் குடிகளின் உரிமைகளை நிலை நாட்டுவது மட்டுமன்றி அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அவர்களையும் நம்மில் ஒருவராக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நன்றி 

செங்கதிரோன்

Thursday, January 22, 2015

ஐ ஷங்கரின் திறமைக்கு சான்று

சுஜாதாவின் பக்த கோடிகள் ஐ படம் சுஜாதா பங்களிப்பு இல்லாததால் சுவார்ஸ்யமாக இல்லை என்று கூவுகின்றனர். கமலுக்கு வெளிநாட்டு பட்ங்களைக் காப்பி அடிக்க கற்றுக்கொடுத்து அவரைக் குட்டிசுவராக்கிய பெருமை சுஜாதாவையே சேரும். அடுத்து ஷங்கரையும் அது போன்று கெடுத்து வைத்தானால் தான் அவரும் கீழ்த்தரமான எண்ணங்கள் கொண்ட படங்களை இயக்கினார். அதற்கு முக்கிய உதாரணம் தமிழ்நாடே காறி துப்பிய பாய்ஸ் திரைப்படம்.

சமீபத்தில் காபி வித் டிடியில் வசந்தபாலன் அவர்கள் ஷங்கரிடம் மிக அருமையான ஒரு திரைக்கதை இருப்பதாகவும் அதனை திரைப்படமாக எடுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். எனவே ஷங்கரின் சொந்தத் திறமையின் மேல் நம்பிக்கை வைத்த்திருக்கும் அவரின் ரசிகர்களில் நானும் ஒருவன். சுஜாதாவின் பாதிப்பே ஷங்கர் ஐ படத்தில் திருநங்கைகள் குறித்த காட்சி என்பதனை முழுமையாக நம்புகிறேன்.