Tuesday, February 17, 2015

வரலாறே இல்லாத வன்னியர்கள் .

தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான சாதிகளின் வாழ்வியல் முறைகள் பற்றி பல்வேறு படங்களும் புத்தகங்களும் வெளி வந்துள்ளன.ஆனால் தமிழ்கத்தில் பெரும்பான்மை சமூகமாக விளங்கும் வன்னியர்கள் குறித்து எந்த விதமான அழுத்தமான பதிவுகள் இல்லவே இல்லை.

வன்னியர்கள் குறித்த செய்திகள் தற்பொழுது பத்திரிக்கைகளில் வெளிவருவதற்கு முழுமுதற் காரணமாக இருப்பது பாட்டாளி மக்கள் கட்சி தான், ஆண்ட பரம்பரை என்று சொல்லும் இவர்கள் அதற்கான எந்த விதமான ஆதாரத்தினையும் முழுமையாக வெளிவிடவில்லை.இருப்பினும் அரசியலில் இயங்கும்   வன்னிய தலைவர்களுக்கு மட்டுமே தங்கள் ஊர் அடையாளத்துடன் இயங்குகின்றனர். (உ-ம் வீரபாண்டி ஆறுமுகம், செஞ்சி ராமசந்திரன், திண்டிவனம் ராமமூர்த்தி  என்று பல பேர்) . இது  ஓரளவுக்கு அவர்கள் ஆண்ட பரம்பரையின் நீட்சி எனபதனை உணர்த்துவதாக உள்ளது. இருப்பினும் தங்களை சோழ, பல்லவ வம்சம் என்று சொல்வதற்கான ஆதாரம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.



இதற்கான முக்கியக் காரணம் அந்த சமூகத்தின் பிரதிநிதிகள் பெருமளவு திறப்படத்துறையிலோ பத்திரிக்கைத்துறையிலோ இல்லாததும் இன்றும் பிற்பட்ட சமூக நிலையில் இருப்பதும் ஆகும்.திறமை வாய்ந்த படைப்பாளிகளான பாலா மற்றும் ரஞ்சித் ஆகியோர் தங்கள் சமூகம்  குறித்த பதிவுகளை அழகாக படங்களில் நுழைத்து விடுகின்றனர். அவன் இவன் படத்தில் highness தாங்கள் மனு நிதிச் சோழ பரம்பரை என்று தேவர் வம்சத்தின் பெருமை குறித்து வசனம் வைத்து இருப்பார். மெட்ராஸ் படத்தின் இறுதியில் கல்வி விளிம்புநிலை மக்களுக்கு அவசியம் என்பதனை தெளிவாக சொல்லி இருப்பார். இது போன்ற படைப்பாளிகள் யாரும் அச்சமூகத்தில் இருந்து திரைப்படத்துறையில் இருக்கின்றார்களா என்று கூட தெரிய வில்லை.

அச்சமூக மக்கள் ஆர்வம் காட்டா விட்டாலும் மற்ரவர்கள் முன்வந்து வன்னியர்கள் குறித்த பதிவுகளை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கலாம். பெரும்பான்மையாக வாழும் சமூகம் குறித்து பார்வைகள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அவர்களின் தற்பொழுதைய வாழ்வு குறித்து , வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் குறித்து உணமையானப் பதிவினை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்

Wednesday, February 4, 2015

அஜீத் -பாபிலானா-சிங்கம் புலி



இந்த மூன்று பேருக்கும் பல தொடர்புகள் உண்டு. அஜீத் நடித்த ரெட் படத்தின் மூலமாகத் தான் சிங்கம் புலி ராம் சத்யா என்ற பெயரில் இயக்குநராக அஅறிமுகமானார் .

பாபிலோனா தனக்கு மிகவும் பிடித்த நாயகன் அஜீத் என்றும் அவருடன் நடிப்பது தனது லட்சியம் என்றும் பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கின்றார்இவ்வாறு அஜீத்துடன் தொடர்புடைய இவ்விருவரின் வளர்ச்சி பற்றியும் அஜீத் தற்பொழுது அடைந்துள்ள உயரம் குறித்த அலசல் தான் இந்தப் பதிவு.



சிங்கம் புலி அவர்கள், கிரேஸி மோகன் போன்றே போன்றே பொறியியல் படித்து விட்டு சினிமாவுக்கு வந்தவர். நாம் திரையில் பார்ப்பது போன்றே மிகவும் வேடிக்கையான மனிதர். அஜீத்தின் சாக்லேட் பாய் இமேஜை உடைத்தெறிந்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. ரெட் படப்பிடிப்பில் அஜீத் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. மொட்டைத் தலையுடன், உருண்டு திரண்ட உடலுடன் மிரட்டலாக இருந்தார்.  இந்தளவுக்கு பல மெனக்கல்களுடன் இயக்கினாலும் அப்படம் வெற்றி பெறவில்லை .பின்னர் சூர்யாவை வைத்து மாயாவி என்றொரு படம் இயக்கினார், அது அவருக்குள் இருந்த நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் படமாக அமைந்திருந்தது. அதற்கடுத்து எந்த ஒரு தயக்கமும் இன்றி பாலாவிடம் மீண்டும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பாலா, கருணாசைப் போலவே இவரையும் நகைச்சுவை நடிகராக நான் கடவுள் படத்தில் அறிமுகம் செய்தார். அங்கு தொடங்கிய பயணம் இன்று வெற்றிகாரமாக சென்று கொண்டிருக்கின்றது.



பாபிலோனாவைப் பொருத்தவரை ஒரு நிலையான வளர்ச்சி அவருக்குக் கிடைக்கவே இல்லை. குறைந்த பட்ஜெட் படங்கள் முதல் மெகா பட்ஜெட் படங்கள் வரை நடித்திருந்தாலும் ஒரு சரியான இடம் கிடைக்கவே இல்லை. திரையில் மிக கவர்ச்சியாக நடித்து வந்தாலும் நிஜ உகில் மிக தைரியமான பெண் , மக்கள் முதல்வரை தைரியத்துக்கு புகழ்ந்து கொண்டிருக்கும் நாம் அவர் ஒரு  மேடைகளில் ஏற்கனவே தயார் செய்த உரையினை வாசிப்பதுதான் வழக்கம். ஆனால் பாபி லோனா தொலைக்காட்சி பேட்டிகளிலோ மொட்டு மேடையிலோ மிக தேவாகவும் நேர்த்தியாகவும் பேசுவார். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற  பாலியியல் இணையதளங்கள்  தொடர்பான  விவாத நிகழ்ச்சியில் மிக சிறப்பாக தான் கருத்துகளை எடுத்துரைத்தார்.பொது நிகழ்ச்சிகளிலேயே தலை காட்டாமல் வாழ்ந்து வரும் தல அவர்களின் முன்னால்  பொது விவாதங்களில் மிக தைரியமாகப் பங்கேற்று பேசி வரும் பாபிலோனாவே சிறப்பானாவராக தெரிகின்றார்.


முகப் புத்தகத்திலும் ,வார இதழ்களிலும்  அஜீத்தின் வள்ளல் தன்மை குறித்து  புகழ்ந்து தள்ளுகின்றனர். ஆனால்  எனக்கு திரையில் பார்க்கும் அஜீத் மட்டுமே பிடிக்கின்றது. அவரின் பிரியாணி சமைக்கும் திறமைக்காகவே , பத்திரிக்கையாளர்களுக்கு உதவி செய்வதற்காகவோ அவரை தலையில் வைத்துக் கொண்டாட முடியாது.திரை உலகின் ஜாம்பவான்களுக்கு மரியாதை செலுத்தும் விழாக்களில் கூட பங்கேற்பதில்லை ,அவருக்கு வழங்கப் படும் விருதையும் நேரடியாகப் பெற்றுக் கொள்வதில்லை.உழைப்பாளர் தினத்தில் பிறந்த அஜீத் அவர்கள் தன்னைப் போன்ற  கடின உழைப்பாளிகளுக்கு நேரில் மரியாதை செலுத்துவதுதான் சிறப்பாக இருக்கும். போதும் தலை மறைவு வாழ்க்கை , வெளியே வாருங்கள் தல . 
 

Tuesday, February 3, 2015

நவாப் நாற்காலி -கருப்பு பணம் பற்றிய பழைய படம்

அந்தக் காலத்தில் விமானம் மட்டுமல்ல கருப்புப் பணமும் இருந்தது என்பதனை உணர்த்தும் படம் தான் நவாப் நாற்காலி. தமிழின் ஆகச்ச்சிறந்த நடிகர்கள் அனைவரும் நடித்திருந்த படம். புகழ் பெற்ற திரைக்கதை ஆசிரியரான கோமல் சுவாமிநாதன் அவர்களுடய நாடகம் ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்டது.

1.தன் முதலாளி கொடுத்த கருப்புப் பணம் இரண்டு லட்சத்தினை கல்கத்தாவில் பறிகொடுத்ததால் பைத்தியமாகிவிடுவார் வி.ஸ்.ராகவன்.அவரின் மகளான லட்சுமி அந்தப் பணத்தினை திருடியவனைக் கண்டுபிடிக்க முயலும் போதும் லட்சிய இளைஞான ஜெய் சங்கருடன் காதல் வயப்பட அவரும் லட்சுமியுடன் இணைந்து அந்தப் பணம் திருடியவனை கண்டுபிடிப்பார்.

2.பத்துக் குழந்தைகளுக்கு பெற்றோரான காந்திமதி சகஸ்ரநாமம் அவர்களின் மூத்த மகன் நாகேஷ். இவர்களின் குடும்ப சொத்தான நாவாப் நாற்காலியை கில்மா பிர்ஞ்ச் படம் பார்க்க நாகேஷ் எல்லாக் கடையில் விற்று விடுவார். இந்த நாற்காலியை குழந்தை பாக்கியம் அற்ற விகே ராமசாமி வாங்கி செல்ல அதனை மீட்க சகஸ்ரநாமம் போடும் திட்டம் இரண்டாம் பகுதி.

ஜெய் சங்கர் கருப்புப் பணத்தினை பதுக்கி வைப்பதாலே இது போன்ற குற்றங்கள் நடைபெறுகின்றது என்று கூறி அந்தக் காலத்திலேயே கருப்புப் பணத்தின் தீமை குறித்து எடுத்துக் கூறிய படம்.

வார இறுதியில் ஒரு இரண்டு மணி நேரம் சிரித்து மகிழ்ந்து செலவிட ஒரு அருமையான படம். பார்த்து மகிழுங்கள்.

Sunday, February 1, 2015

மான்ட்ரியல் முருகன் ஆலயம்



       கனடாவில் உள்ள பிரபலமான நகரில் ஒன்றான மான்ட்ரியலில் அமைந்துள்ளது திரு முருகன் ஆலயம். கியுபெக் மாநில சைவ தமிழ் சங்கத்தினரால் நிறுவப்பட்டு, தமிழர்களுக்கு முருகன் அருள் பாலித்து வருகின்றார்.

பனிகள் (snows) சூழ்ந்த ஆலய கோபுரம் 


குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதனை மெய்ப்பிக்கும் வகையில் Mount-Royal என்றழைக்கப்படும் இடத்தில் நம்முருகன் இருக்கின்றார்.

விநாயகர் அருணாச்சலேஸ்வர்ர், வெங்கடாசலபதி , ஆஞ்சநேயர் ,நடராஜர் ,பைரவர் ,துர்க்கை அம்மன் ஆகியோருக்கு சந்நிதியும் நவகிரக சந்நிதியும் கொண்ட பெரிய ஆலயமாக அமைந்துள்ளது. காலை 8.30 முதல் மதியம் 1.30 வரையிலும் , மாலை 5 முதல் 9 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும் .

வாய்ப்பு கிடைத்தால் தவறவிடாது இந்த அந்நிய தேசத்து முருகனைக் கண்டு வழிபடுங்கள். நமக்கு நல்வழி அருள் புரிவான் முருகப்பெருமான்.

Snow covered temple

 கோவில் முகவரி :1611 Boul Saint Régis, Dollard-des-Ormeaux, QC

நன்றி 
செங்கதிரோன் 

பானு கோம்ஸ் -என்னமா இப்படிப் பண்றீங்களேம்மா ..

அரசியலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு சட்டத்தினைக் கொண்டு வந்த போது அதனை மாயாவதி ,முலாயம் மற்றும் லாலு ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர். அவர்கள் எதிர்த்தற்கான காரணம் இது சமூகத்தில் பின் தங்கிய பெண்களுக்கான குரல் ஒலிக்காமல் ,அங்கும் உயர் சாதிப் பெண்களே ஆதிக்கம் செய்வார்கள் என்பதனால் தான், அதனை மெய்பிக்கும் வகையில் செயல்படுவர்தான் பானு கோம்ஸ்.

ஏற்கனெவே அரசியலில் மம்தா மற்றும் நமது மக்கள் முதல்வர் ஆகிய உயர் சாதிப் பெண்களின் அரசியல் திறமைகளை நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இவர்களை முன் மாதிரியாகக் கொண்டு மற்ற பெண்களும் தங்கள் அரசியல் வாழ்வை தொடங்கினால் பெண்களின் பங்களிப்பு அரசியலில் கேலிக் கூத்தாகிவிடும்.

பானு கோம்ஸ் அன்னா  ஹசராவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் கேஜ்ரியோடு பணியாற்றி பின்னர் சமூக ஆர்வலர் என்ற அடையாளத்துடன் புதிய தலைமுறையில் நேர்பட பேசு மற்றும் புதுபுது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் அடிக்கடி தோன்றி பிஜேபியை பாராட்டியும் திராவிட இயக்கங்களை திட்டியும் வருபவர்.



மேலே உள்ள புகைப்படத்தில் கேஜ்ரிவாளுடன்  சிரித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் பனுகோம்ஸ் தற்பொழுது கேஜ்ரிவால் போபியா வந்தது போல் அவர் பெயரக் கண்டாலே அலறுகிறார்.

அது மட்டுமன்றி முகப் புத்தகத்தில் பொன் மொழிகள் குறிப்பிடுவதில் வல்லவர். உதாரணத்துக்கு அவரின் பொன் மொழி ''இட ஒதுக்கீடு மூலம் படித்த மருத்துவர்களிடம் மருத்துவம் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கின்றார்''.இட ஒதுக்கீடு மூலம் படித்து தமிழக்த்தில் தலை சிறந்த மருத்துவர்கள் ஏராளமான பேர் இருக்கின்றனர்.இந்தியாவில் முதல் முறையாக கல்லீரல் மாற்று (liver transplantation) செய்து சாதனை புரிந்த Dr.சுரேந்திரன் , மருத்துவ உலகின் ரஜினி என்று நான் குறிப்பிட்ட Dr.தெய்வ நாயகம் , இருதய நோய் நிபுணர் Dr.சிவ கடாட்சம் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இப்படி இட ஒதுக்கீடு மூலம் படித்தவர்களை கொச்சைப் படுத்துபவரை என்னமா இப்படி பண்றீங்களேம்மா என்று கேட்பது தானே சரியாக இருக்கும்.

இந்தப் பதிவின் நோக்கம் பானு கோம்ஸ் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்த மட்டுமன்றி, நாம் அனைவருமே தங்கள் மனைவி,தோழி ,சகோதரி மற்றும் தாயாரிடம் அரசியல் மற்றும் சமூக சூழல் குறித்து பேச வேண்டும்.ஆரம்பத்தில் அவர்களுக்கு போராடித்தாலும் பின்னர் காத்து கொடுத்து கேட்க ஆரம்பிப்பார்கள். அவர்களை தெளிவடைய வைத்தாலே போதும் பானு கோம்ஸ் போன்ற நேற்று முளைத்த காலங்களை நமது சமூக பெண்கள் எளிதில் ஒதுக்கி தள்ளி விடுவார்கள்.