Pictures of Gourmet Food

Thursday, October 29, 2015

யுவராஜிடமிருந்து தப்பித்த ஜோதிகா

தன் சாதி மானம்  காக்க போராடிய வீரன் போல தன்னைக் காண்பித்துக் கொள்ளும்  யுவராஜ் உண்மையிலே வீரரா? தன சாதிப் பெண்களை பிறர் தூக்கி சென்று விடாமல் தடுப்பது தான் தன்னுடைய தலையாயப் பணி என்றால் இவர் சாதி சார்ந்த ஆண்கள் பிற சாதி, மதம் சார்ந்த பெண்ணைக் காதலித்து மணந்தால்  அனைத்து துவாரங்களையும் மூடி அமைதி காப்பது ஏனோ ?


ஜோதிகா கோயம்புத்தூர் மாப்பிள்ளையான சூர்யாவை திருமணம் செய்து கொண்டதிலிருந்தே தெரிய வந்திருக்கும் , யுவராஜ் வம்சம் சார்ந்தவராகத்தான் இருப்பபார் என்று, அதுவும் சூர்யா யுவராஜ் தொடர்புடைய சமூகம் சார்ந்தவர் என்பதனை அவர் தந்தை சிவக்குமார் தீரன் சின்னமலை குறித்து முகப் புத்தகத்தில் பதிவு எழுதி பிரச்சனைக்கு உள்ளானதில் இருந்து தெள்ளத் தெளிவாக உணர முடியும்.

நடுத்தரக் குடும்பம் சார்ந்த இரு வெவ்வேறு சாதியினர் காதலிக்கும் போது  அவர்களிடம் சென்று தன் வீரத்தைக் காண்பிக்கும் யுவராஜ் தன் குலக் கொழுந்துகளான சூர்யாவிடம் தகராறு செய்யும் தைரியம் இருக்கின்றதா ? அப்படி செய்தால் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே காவல் துறை நடவடிக்கை எடுத்திருக்கும் . நடுத்தரக் குடும்பங்களை குறிவைத்து அவர்களை தாக்கினால் காவல் துறை பல மாதங்கள் கழித்தும் பிடிக்க முடியவில்லை.தமிழகத்தின் அனைத்தத் தரப்பினருக்கும் பிடித்த ஒரு ஜோடி சூர்யா -ஜோதிகா இந்த இரு அழான உள்ளங்கள் இணைந்திருக்க சாதி தடையாக முதலில் இருந்தாலும் பின்னர் அவற்றை முறியடித்து தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். இதே போன்ற சுதந்திரம் அனைத்து தரப்பினருக்கும் வேண்டும் , அந்த சுதந்திரத்தில் இது போன்ற அல்லு சில்லுகள் நுழைவது தடுப்பது முதலில் அரசாங்கத்தின் கடமை , இரண்டாவது மக்களும் வெறுமென பெயருக்குப் பின் ஜாதிப் பெயரை எடுத்து விட்டதனால் மட்டும் மாற்றம் வந்து விடாது, தங்களின் மனத்திலிருந்தும் இந்த சாதிதீயை அகற்ற வேண்டும் .

 உயர் சாதி  ஆண் எந்த சாதி மதப் பெண்ணையும் இழுத்துக் கொண்டு வரலாம், அதையெல்லாம்  தங்கள் குலப் பெருமை ,மண்ணாங்கட்டி என்று வாழ்த்தும் இந்த சாதிவெறிக் கும்பல், தாழ்ந்த சாதி என்று முத்திரை குத்தப் பட்ட ஒருவன் , மற்ற சாதிப் பெண் மேல் ஆசைப்பட்டால்  அவர்களைத் துன்புறுத்துவது எந்த வகையில் நியாயம் ? 

பண்பட்ட தமிழ் சமூகம் இது போன்ற அறிவிலிகளை ஆதரிக்கவேக் கூடாது . சமூக முன்னேற்றத்திற்கு இது எள்ளவும் நன்மை பயக்காது நண்பர்களே , சிந்தித்து செயல்படுங்கள் .

நன்றி 
செங்கதிரோன் 

இந்தப் பதிவு தொடர்புடைய மற்றொரு விரிவானப் பதிவு விரைவில் வரவிருக்கின்றது .
கை கூடாத காதல் திருமணம் : நடிகர் திலகம் சிவாஜி முதல் இளவரசன் வரை  

Wednesday, October 28, 2015

சண்டி வீரன் தோல்வி -பஜ்ரங்கி பைஜான் வெற்றி :ஏன் ?

மண் மணம் சார்ந்து படம் எடுக்கக் கூடியவர்களின் பட்டியல் ஒன்று எடுத்தால் அதில்  இயக்குனர் சற்குனத்திற்கு ஒரு முக்கிய இடம் இருக்கும், அவரின் களவாணிப் படம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. வட  மாவட்டம் சார்ந்த எனக்கு அந்தப் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தயும் மிக எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடியும். 

இரண்டு கிராமங்களுக்கு சாமி சிலையால் வரும் பகை, எருக்கம் பூவினைக் கொண்டு தேர்வில் வெற்றியா தோல்வியா என தீர்மானிப்பது , அம்பாசிடர் கார் நிறுத்துமிடம் , டியூஷன் சென்டர் என்று பல நிகழ்வுகள் வட மாவட்ட வாழ்க்கையை பிரதிபலிக்கக் கூடியவையாக இருந்தன. தமிழ் சினிமா  மதுரை போதையில் தத்தளித்துக் கொண்டிருக்க சற்குணத்தின் இந்தப் படம் ஒரு புதிய உலகை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது.


ஆனால் அடுத்து அவர்  கொடுத்த தோல்வி படங்களினால் சறுக்கல் குணமாக மாறிவிட்டார். நையாண்டியின் மோசமான தோல்விக்குப் பின்னரும் அவரின் திறமை மேல் நம்பிக்கை வைத்து,  இயக்குனர் பாலா  அவருக்குக் கொடுத்த வாய்ப்புதான் சண்டி வீரன் . இந்தப் படத்தின் ட்ரைலர் பார்த்த பொழுது அப்பாடா மீண்டும் மண் சார்ந்தக் கதை கண்டிப்பாக சிறப்பாக இருக்கும் என்றெண்ணினேன் .ஆனால் நடந்ததோ சற்று எதிர்மறை. ஏன் எதிர்மறை என்று ஆராயும் முன்னர் பஜ்ரங்கி பாய்ஜான் பட வெற்றிக் குறித்து பார்ப்போம் .

பஜ்ரங்கி பைஜான்(Bajrangi Bhaijaan)
வாய்பேச முடியாத ஒரு பாகிஸ்தான்  சிறுமி இந்தியாவில் தனித்து விடப்படுகின்றாள். அவள் தீவிர இந்துவான சல்மானிடம் தஞ்சம் அடைய அச்சிறுமியை பாகிஸ்தான் சென்று சேர்ப்பிக்க சல்மான் செய்யும் சாகசம் தான் பஜ்ரங்கி படத்தின் கதை. முதல் பாதி இந்துக்களுக்காகவும் , இரண்டாம் பாதி முஸ்லீம்களுக்கு  என்று மிக அருமையாக எடுக்கபட்டு மிகப் பெரும் வெற்றி அடைந்தது இந்தப் படம் . முதல் பாதியில் இந்துக் கோவில், ஆர்.ஸ் .ஸ்  என்று செல்லும் ,இரண்டாம் பாதியில் பாகிஸ்தானின் தர்க்கா , அம்மக்களின் இந்தியா குறித்த நெகிழ்ச்சி மிக்க உணர்வுகள் என்று நம்மைக் கலங்கடிக்க செய்யும் காட்சிகள் உள்ளன. இந்தப் படத்தினை இது வரைப் பார்க்காதவர்கள் உடனடியாகப் பாருங்கள் .இப்போது சண்டி வீரன், இரு கிராமங்களுக்கு இடையேயான குடிநீர் பிரச்சனை தான் படம் , அதில் உப்பு சப்பில்லாத  காதலை கலந்து வீணடித்து விட்டார்.இரு நாட்டுப் பிரச்சனை குறித்தே படம் எடுக்கும் போது , இரு மாநிலங்களுக்கிடையான காவேரிப் பிரச்சனையைக் கொண்டே திரைக்கதையை அமைத்திருக்கலாம்.  தென்னிந்தியாவில்  நமக்கும் கன்னடர்களுக்கும் தான் அதிக தொடர்பு இருக்கின்றது .பெங்களூரில் எண்ணற்ற  தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள்.

இந்த இரு மாநிலத்தையும் இணைக்கும் விடயங்கள் பல இருக்க சற்குணம் இதனைக் கொண்டே திரைக்கதை அமைத்திருக்கலாம் ,அதுவும் இந்தப் படத்தின் கதாநாயகனே கன்னடர் தான் ,எனவே அந்த மாநிலத்தவரும் எந்த ஒரு பிரச்சனையும் செய்திருக்க மாட்டார்கள் .இரு மாநிலத்திலும் காவேரிப் பிரச்சனையை பெரிது படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு மிகப் பெரும் பாடமாக அமைந்திருக்கும்.

பஜ்ரங்கிப் படம் எவ்வாறு இந்த இரு நாட்டில் உள்ள நல்ல உள்ளங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டியதோ அவ்வாறே சண்டி வீரன் படமும் ஒரு வேளை காவேரியை மையைப் படுத்தி எடுத்து இருப்பின் தண்ணீர் இன்றி அவதிப்படும் விவசாயிகளின் நிலை இரு மாநில மக்களும் உணர்ந்து இருப்பர். மேலும் இரு மாநில மக்களும் ஒருவர் மீது ஒருவர் எந்தக் காழ்ப்புணர்வின்றி  வாழ்கின்றனர் என்ற உண் மையினையும்  எடுத்துக் கூறும்  வாய்ப்பு கிட்டி இருக்கும் 

சற்குணம் அவர்களே அடுத்த படத்தில் ஒரு வலுவான திரைக் கதையுடன்  வட மாவட்ட சிறப்புகளை உலகுக்கு உணர்த்துங்கள்.

நன்றி 
செங்கதிரோன்  

Sunday, October 25, 2015

இசை உலகின் பொறுக்கி :எமினம்

ரோமியோ ஜூலியட் படத்தில் அடியே இவளே பாடலில்  ஜெயம் ரவி அணிந்து வரும்  அணிந்து வரும் டி-சர்ட்டில் இருக்கும் புகைப்படத்தில் இருப்பவர் தான் எமினம். இவ்வாறு அமெரிக்க சென்று திரும்பிய இளைஞர்களில் பெரும்பாலோனோரும் இந்த எமினம் படம் போட்ட டி-சர்ட்டை அணிந்து இருப்பர். என்னிடமும் ஒன்று உண்டு. 


ஆப்பிரிக்கர்கள் அதிகம் ஆக்கிரமத்திருக்கும் ராப் உலகில் நுழைந்த இந்த வெள்ளைத் தோல் இளைஞர் மிகப் பெரும் உச்சத்தினை ராப் இசையில் அடைந்தார்.மிச்சிகனில் பிறந்த எமினமின் உண்மையானப் பெயர் Marshall Bruce Mathers III. 1996ல் ஆரம்பித்த இசைப் பயணம் இன்றுவரைக் கொடிக் கட்டிப் பறக்கின்றது.

இவருடைய slim shady என்ற வார்த்தையும் , கையின் நடு  விரலைக் காண்பிப்பது என்ற இரண்டும் இவருடைய தனி அடையாளமாக இசை ரசிகர்கள்.இது போன்ற டி -சர்ட் அணிவது, அவர் போல நடந்து கொள்வது மட்டுமல்லாமல் அவருடைய பாடல்களையும் கேட்டுக் கொண்டிருப்பர் .
அப்படி என்ன சிறப்பு என்ன இருக்கின்றது அவருடைய பாடல்களில் ? I am slim shady ,without me , stan ,my name is ,the way I am போன்ற  பல பிரபல பாடல்கள் உள்ளன.அவரே எழுதும் இந்த பாடல் வரிகளில் உள்ள அர்த்தங்கள் தான் இளைஞர்களை அதிகம் ஈர்க்கின்றன .

stan என்ற பாடல் ஒரு ரசிகனுக்கும் இசைக்கலைஞருக்கும் இடையே  நடக்கும்  கடித பரிமாற்றம் குறித்த் பாடல் தான் மிக நெகிழ்ச்சியான ஒன்று. தன கடிதத்திற்கு பதில் எழுதாதால் கோபமடைந்த ரசிகன் தன கர்ப்ப மனைவியுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்யும் அளவுக்கு செல்வவ்ர். அந்தப் பாடலின் காணொளியின் உங்கள் குழாய் இணைப்பு 

ஒரு பாடலில் தான் கஞ்சா புகைப்பதை விட தன் அம்மா புகைப்பார் என்று ஒரு பாடலில் வரி அமைத்து மிக சர்ச்சைக்குள்ளானார். பிறகு அவரின் அம்மா வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றார்.

அவருடைய மிகப் பிரபலமானப் பாடலான slim shady பாடலின் காணொளியைக் காணுங்கள். எமினம் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடகராக இருப்பார் என்று நம்புகின்றேன் .


நன்றி 
செங்கதிரோன் 

Saturday, October 24, 2015

பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+ -பாகம் :2

முதல் பாகத்தில் குறிப்பிட்டுள்ளது போல பாலியலின் மிக முக்கியமான கைப்பழக்கம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம் . கைப்பழக்கம் தமிழ்  சமூகத்தின் இளைஞர்களிடையே நிலவும் மோசமான மூடப்பழக்கம்.இந்த மூடப்பழக்கத்தினை தொடர்ந்து நிலைநிறுத்த மட்டுமே ஊடங்கங்களும் , திரைப்படத்துறையும் மற்றும் இந்த பரம்பரை வைத்தியர்களும் பாடுபடுகின்றனரே தவிர யாருமே இந்த பழக்கம் குறித்த அச்சதினைப் போக்க எந்த ஒரு முயற்சியினையும் எடுக்கவே இல்லை.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால் நமது முப்பாட்டன், பாட்டன் மற்றும் அப்பா ஆகியோருக்கு இந்தப் பழக்கம் இருந்ததாகவோ அல்லது அது குறித்த பயம் இருந்ததாக தெரியவில்லை. இல்லாமல் இருந்ததற்காக காரணங்கள்  இளவயது திருமணம், மிக கட்டுப்பாடான சமூக அமைப்பு , கூட்டுக் குடும்ப அமைப்பு முறைகள் என்று பல காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

உலக ரீதியாகப் பார்த்தாலும் இந்த அச்சத்தில் முதலிடத்தில் இருப்பதும் நம்மைப் போன்ற வளரும் நாடுகளில்தான் அதிகம்.இதற்கான காரணம் எழுத்தாளர் சாரு சொன்ன மாதிரி பாலியல் வறட்சி ஒரு முக்கியக் காரணம் இருந்தாலும் , அது தவிர பாலியல் குறித்த அறியாமையும் ஆகும்.

இந்த அறியாமையைப் போக்கவே இந்தப் பதிவு. ஆனாலும் இந்த அறியாமையைப் போக்க நவீன மருத்துவமான அலோபதி மருத்துவர்கள் எந்த முயற்சியையும் எடுக்கவே இல்லை. ஆங்கிலத்திலேயே இருக்கும் இந்தப் புத்தகங்களை படிக்கும் நம் நாட்டு மருத்துவர்கள் வெளி நாடுகளில் இருக்கும் நோய்கள் குறித்தே அதிகம் படித்து அந்தக் கோணத்திலேயே நோயினை அணுகுவார்கள்.வளர்ந்த நாடுகளில் கைப்பழக்கம் அதிக அளவில் இல்லை , எனவே அது குறித்து  அங்கு உள்ள மருத்துவர்களும் அதிக அளவில் அக்கறை கொளவதும் இல்லை, ஆராய்ச்சிகளும் நடைபெறவே இல்லை . ஆனால் இதே நடைமுறையை நம் நாட்டில் உள்ள மருத்துவர்களும் பின்பற்றுவதால் நம் நாட்டில் இளைய சமூகத்திடம் பீடித்துப் போயிருக்கும் கைப்பழக்கம் குறித்த அச்சம் போக்க எந்த முயற்சியினையும் இவர்கள் எந்த முயற்சியினையும் எடுக்காமல் இன்று வரை இருக்கின்றனர்.இருப்பினும் மருத்துவர் நாராயண ரெட்டி தான் இந்த சமூகத்தின் உண்மை நிலையினை உணர்ந்து அதற்கேற்ப இன்று வரை பாலியல் அறியாமையைப் போக்க பாடுபட்டு வருகின்றார்.

இவ்வாறு நவீன மருத்துவர்கள் அலட்சியமாக இருந்ததனால், பரம்பரை மருத்துவர்கள் அந்த இடத்தினை ஆக்கிரமித்து இளைய சமுதாயத்தை சீரழிவுப் பாதைக்குக் கொண்டு செல்கின்றனர். 

இந்தப் பழக்கம் குறித்த அச்சங்களும் அதற்கான விடைகளும் கீழே :

1. இந்தப் பழக்கத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் . சீரான ஒன்று , தீவிரமான ஒன்று . சீரான என்பது எபோழுதாவது வாரம், மாதம் ஒரு முறை என இருப்பது .இரண்டாவது தீவிரமான என்பது அடிக்கடி நிகழ்வது.தினமும் அல்லது வாரத்தில் பல முறை என்று இருப்பது. எனினும் இரண்டாலும் தாம்பத்திய உறவில் எண்டஹ் ஒரு சிக்கலும் வரவே வராது எனவே அச்சமே வேண்டாம். மிக தைரியமாக முதலிரவொ அல்லது முதல் அனுபவத்தில் தைரியமாக இருங்கள். இனி தமிழகத்தில் ஒருவரும் இந்த பயத்தினால் தூக்கில் தொங்கினார்கள் என்று செய்தியே வரவே கூடாது.

2. பலரும் கிண்டல் செய்வது போல கை ரேகைள் இந்தப் பழக்கத்தினால் அழியும் என்பது  மிக மிக முட்டாள் தனம். கைகளில் இருக்கும் ரேகைகள் என்பவை நாம் ஒரு பொருளை வலுவாகப் பிடிப்பதற்கான அமைப்பு .அது ஒவ்வொருவருக்கும் ஒரு வகையில் இருக்கும். இதனை அறிவியல் ரீதியாக நிருபித்திருக்கின்றனர் . எனவே இப்படி கிண்டல் செய்பவர்களுக்கு இந்த விளக்கம் அளியுங்கள் அல்லது அவர்களின் அறியாமைக் கண்டு பரிதாபம் கொள்ளுங்கள் .

3. உடல் சக்தி வீணாகும், சோம்பல் வரும் எனப்தெல்லாம் ஒரு மன பயம் மட்டுமே இவை திட்டமிட்டு பரம்பரை மருத்துவர்களால் பணம் பறிக்க பயன்படுத்தும் வாசகங்கள் .இவற்றைப் பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் மேற்கண்டால் தான் உண்மை என்ன எனபது தெரிய வரும்.

4.குழந்தைப் பிறப்பிற்கும் அதாவது இனப்பெருக்கத்திற்கும் இதற்குமான தொடர்பு இல்லவே இல்லை. எனினும் முன்பே சொன்னது போல தீவிரமானப் பழக்கம் ஒரு  சில வேளைகளில் அணுக்களின் அளவினை குறைக்கலாம் , இருப்பினும் அணுக்கள் குறைவாக இருப்பதற்கு புகைப் பழக்கம் மற்றும் ஏராளமான காரணங்கள் இருப்பதால் இந்தப் பழக்கம் வெகு சிலவாகவே பாதிக்கும்.

5. இனப் பெருக்க உறுப்பின் அளவும் இந்தப் பழக்கத்தினால் எந்தளவும் படிக்கபடாது.

6. மிக முக்கியமாக வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தகுந்த மருத்துவரை அணுகுங்கள்.

அடுத்த பதிவில் சீக்கிரம் வெளியேறுதல் குறித்து பார்ப்போம் . 


Friday, October 23, 2015

பாக்யராஜின் ருத்ராவின் காப்பி தான் ருத்ரம்மா தேவி :

 ருத்ரம்மா தேவி படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது கதை மிகவும் நன்றாக இருக்கின்றதே என்று இணையத்தில் ருத்ரம்மா தேவி குறித்த வரலாற்றினைப் படித்துக் கொண்டிருந்தேன். ருத்ரம்மா குறித்து முன்பே யாரவது  படம் எடுத்திருக்கின்றார்களா என்று பார்த்தால் பாக்யராஜ் என்று சொன்னது இணையம் ,அந்தப் படம் ருத்ரா 1991ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான சூப்பர் ஹிட் படம். 

அது எப்படி என்று கேட்கின்றீர்களா விரிவான விளக்கம் படத்துடன் கீழே :

ருத்ரா -கவுதமி , ருத்ரம்மா அனுஷ்கா பெண்ணாகப் பிறந்தவர் ஆண்  வேடமிட்டு முன்னவர் பெற்றோரைக் கொன்றவர்களைப் பழிவாங்குவார் ,பின்னவர் நாட்டைக் காப்பாற்றுவார் 

ருத்ராவில்  பாக்யராஜ் திருடன், ருத்ரம்மா தேவியில் அல்லு அர்ஜூன் திருடன் ஆனால் இருவருமே ருத்ராவுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

சிவதேவ அய்யாவாக  பிரகாஷ்ராஜ்  ருத்ரம்மாவை, ருத்ரனாக மாற்றுவார், ருத்ராவில் காவல் துறை அதிகாரி லக்ஷ்மி பெண்ணை ஆணாக மாற்றுவார்.

மேல சொன்ன ஒப்புமைகள் போல இன்னும் நிறைய சொல்லலாம் . இந்த ஒப்பு நோக்கில் பாக்யராஜின் திறமையை நாம் உணர்ந்து  கொள்ள முடியும் , எப்படி ஒரு வரலாற்று சம்பவமான ருத்ரம்மா தேவியின் வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டு ஒரு அதிரடிப் படத்தினை உருவாக்கி வெற்றி அடைந்திருக்கின்றார் என்பது தான்.


இருப்பினும் இங்கே சொல்ல வந்த விடயம் வேறு என்பதனால் அதை நோக்கி பயணிப்போம். ஆந்திராவில் உள்ள ருத்ரம்மா தேவியின் சரித்திரம் கோயம்புத்தூரில் பிறந்த பாக்யரஜிக்கு தெரிந்த ரகசியம் என்னவென்றால் பாக்யராஜும் ஒரு தெலுங்கர் என்பதால் தான், ஆச்சரியமாக இருக்கின்றதா ஆந்திராவில்  நாயுடு சமூகத்தினர் தங்கள் சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களின் பட்டியலில் பாக்யராஜின் புகைப்படத்தினையும் வைத்து இருக்கின்றனர்.

பாக்யராஜும் தன் தாய்மொழிக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக ஆந்திராவைப் பூரிவீகமாகக் கொண்ட ருத்ரம்ம்மா தேவியின் வரலாற்றினை ருத்ராவாக எடுத்து தமிழர்களுக்கு அல்வா கொடுத்து இருக்கின்றார். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இதையெல்லாம் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கின்றது.
நன்றி 

செங்கதிரோன் மாறுவேடப் போட்டி முதல் போட்டியாளர்: பத்ரி -தலித் வேடம்

ஹிட்லர் எப்படிஇனவெறியாளராக மாறினார் என்ற கதையுடன் இந்தப் பதிவினை சொன்னால் இந்தத் தலைப்பின் அர்த்தம் நன்கு விளங்கும்,  ஜெர்மனியில் ஒரு பனிக்கால இரவில்  இலவசமாக வழங்கப்படும்  சூப்பினை வாங்க நின்றிருந்த ஹிட்லருக்கு அங்கே அதே வரிசையில் யூதர்களையும் கண்டவுடன் எரிச்சல் அதிகமானது, அது எப்படி நம் நாட்டில் இவர்கள் இப்படி சுக போகமாக வாழ்கின்றார்கள் என்று வளர்ந்த அந்தக் கோபம் உலகின் மிக மோசமான இன வெறியனாக அவரை உருவாக்கியது.

அதே போன்ற ஒரு சம்பவம் பத்ரி வாழ்விலும் நிகழ்ந்தது, அமேரிக்கா சென்று படித்து முடித்து விட்டு இந்தியா வந்தவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி , அதுவும் குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் பாது காப்பு சோதனைகளுக்கு காத்திருந்த போது  ஏராளமான பழுப்பு மற்றும்  கருப்பு முகங்கள், அவர்கள் கையில் விலையுயர்ந்த பைகள், ஆங்கில புத்தகங்கள் மற்றும் தமிழகத்தின் ஒவ்வொரு வட்டார வழக்கு பேச்சுகள் என்று அந்த இடமே  ஒரு குட்டி  தமிழ் நாடாக மாறியிருப்பதனை கண்டு சொல்லொனா துயரமுற்றார். முழுக்க முழுக்க வெள்ளை நிறத்தவர்களான தனது சொந்தங்களான உயர் சாதியினர் மட்டுமே ஆக்கிரமித்திருந்த இந்த விமான நிலையம் இப்படி மாறிவிட்டதே என்று எண்ணி தூக்கம் இல்லமல் தவித்தார்.இந்த சோகத்தில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக வெளியில் வந்தவர் கள நிலையினை ஆராய்ந்ததில் அனைத்து பிற்பட்ட வகுப்பு இளைஞர்களும் வெகு வேகமாக துடிப்போடு இயங்குகின்றார்கள் என்றும் அவர்கள் தங்களைப் போல  பாடத்திட்டத்தில் உள்ளவற்றை மட்டும் படிக்காமல் அதனோடு தொடர்புடையவற்றை தேடி தேடிப் படிப்பதனால் தான் இவ்வளவு சீக்கிரம் இந்த முன்னேற்றம் வர்களுக்கு சாத்தியமானது என்ற உணமையக் கண்டறிந்தார். இப்படியே இவர்கள் வளர்ந்தால் தமிழத்தின் தொன்மைக் களம் போல பல வள்ளுவர், தொல்காப்பியர் போன்றவர்களும் , மருத்துவ மேதைகளான பல சித்தர்களும் , கடல் தாண்டி  எகிப்து வரை சென்ற வாணிகர்களும் , சோழர், சேர , பாண்டியர் போன்ற வீரர்களும் உருவாகி விட்டால் தங்கள் உயர் சாதி என்னாவது  என்று எண்ணத் தொடங்கினார்.(இது ஒரு கற்பனை சம்பவம் -உணமையாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்)

இதனை முறியடிக்க என்ன செய்வது என்று யோசித்தபோது , இங்கே பிற்படுத்தப் பட்டவர்கள் எந்தளவுக்கு முன்னேறினாலும் சாதியால் பிளவு பட்டிருப்பதை பார்த்தவுடன் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, தன்னுடைய முன்னோர்கள் உருவாக்கி வர்ணசிரமத்தினை பாதுக்காக்கும் வகையில்  நடக்கும் இந்த சாதி சண்டையே இவர்களை வீழ்த்த சரியான உக்தி என்று கண்டறிந்து போட்ட  மாறுவேடம் தான் தலித்.

பிற்படுத்தப்பட்டவர்களின்  முன்னேற்றத்தினையும் தலித்துகளின் ஏழ்மை நிலையினையும் இணைத்து இவர்கள் இருவரிடமும் சண்டையை மூட்டி தன உயர் சாதி மக்கள் அதன் மூலம் முன்னேற்றம் அடைய இந்த மாறுவேடம் மிக சரியாகப் பொருந்தியது.ஆனாலும் அந்த வேடத்தினைக் கூட சரியாகப் போடாமல் காரியத்திலே கண்ணாக இருக்கும் இந்த ஆரியக் கூத்தாடி , தலித் தாக்கப்பட்டாலும் எரித்துக் கொல்லப்பட்டாலும் மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளை மென்று கொண்டிருக்கும் இவர் , ஒரே ஒரு அர்ச்சகர் தாக்கப்பட்ட விவகாரத்திற்காக அனைத்து வகையான ஊடகங்களிலும் தன் கண்டனத்தைப் பதிவு செய்கின்றார்.

இந்தப் பதிவின் நோக்கம் தனிப்பட்ட முறையில் பத்ரியை தாக்கும் எண்ணமல்ல,  நன்கு படித்த பிற்பட்ட சமூகம் சாதிப் பெருமைகளை புறம் தள்ளி , சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் இணைந்து வாழ்வதற்கான ஒரு நல்லதொரு சூழலினை தமிழகத்தில் உருவாக்குவதற்கான விழிப்புணர்வுக் கட்டுரை.

பின் குறிப்பு : பத்ரி எந்த ஒரு பாரம்பரியக் குடுமப்  பினபுலமும் இல்லாமல் தானாகவே தனக்கான இடத்தினை தமிழ் சமூகத்தில் உருவாகியது பாராட்டுக்குரியது .

அடுத்தப் பதிவில் 
இரண்டாவது போட்டியாளர் :கிஷோர் -முஸ்லிம் வேடம்

Friday, October 2, 2015

பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+

ராம் மற்றும் ஷங்கர் படத்தினை பாலியல் உணர்வுடன் ஒப்பிடுவதற்கான காரணம் என்னவெனில் ராம் இயல்பாக நடப்பதை படம் எடுப்பவர் , மாறாக ஷங்கர் இயல்பான ஒன்றை மிகைப்படுத்தி படம் எடுப்பவர்.இளைஞர்களில் பெரும்பாலானோர் மிகைப்படுத்தி எடுக்கபடும் இது போன்ற காணொளிகளைக் கண்டு மிரட்சி அடைவதாகத் தெரிகின்றது. இது போன்ற காணொளிகள் அதிகமாக ஹார்மோன் மற்றும் மருந்துகளை செலுத்தி எடுக்கப் படுபவை அவை இயல்பாக நடக்கக் கூடிய ஒன்றே அல்ல. அதனை நம்முடன் ஒப்பிட்டுக் கொள்ளும் பழக்கம் தவறானது. இந்த உண்மையினை அறிந்த பிறகு நீங்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்திருப்பிர்கள் என்று நம்புகிறேன்,

தற்பொழுது சேலம் சிவராஜ் போன்றவர்கள் சொல்லும் கட்டுக் கதைகள்  ஒவ்வொன்றையும் அது எவ்வகையில் அபத்தமானது என்று விளக்கமாக கூறுகின்றேன்.

 கூட்டுக் குடும்ப அமைப்பில் வாழ்ந்த நமது தாத்தாக்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் பத்துக்கும் மேல் தான்,அப்படி ஒரு வலுவான பாரபம்பரியத்தில் வந்த நாம் இப்படி அஞ்சுவது என்பது வருத்தத்துக்கு உரியது தான்."சொல்லித் தெரிவதில்லை காமக் கலை" என்று சொல்லியே நம் தலமுறைக்கு எதுவுமே  சொல்லாமல் அது பற்றிய பயத்தினை உண்டாக்கி விட்டனர்.முதலிரவுக்கு முன்னர் ம்ம்ம் ஜமாய் என்ற ஒரு வார்த்தையோடு முடித்துக் கொள்கின்றனர். ஆண்கள் நிலை இப்படி அல்லொல்பட்டுக் கிடக்க பெண்கள் இது பற்றி முழு விவரமும் தெரிந்து வைத்துக் கொண்டு ஒன்றும் அறியாதவர்கள் போல் இருப்பர் . இதை சொன்னது பிரபல மன நல மருத்துவர் ஷாலினி , அவர் நீயா நானாவில் பெண்கள் தங்களுக்குள் இது போன்ற பாலியல் சம்பந்தப்பட்ட ரகசியங்களை  சாதரணமாகப் பேசிக் கொள்வர் என்றார். அதற்கு அவர் உதாரணாமாக சொன்ன ஒன்று சென்னையின் மின்சார ரயிலின் பெண்கள் பெட்டியில் இந்த பாலியல் விஷயங்கள் குறித்து தான் அதிகம் விவாதித்துக் கொண்டிருப்பார்கள் என்றார். ஆனால் ஆண்களோ உலக செய்திகள் குறித்து விவாதம் செய்து கொண்டிருப்பார்கள் .அதுவும் முதலிரவுக்குப் பின்னர் மணப் பெண் இரவில் நடந்ததை தோழியிடம் சொல்ல கூச்சப் பட மாட்டார்கள். அனால் ஆண்கள் அது பற்றி  ஒரு வார்த்தை கூடப்  பரிமாறக் கொள்ள மாட்டார்கள்.

இப்படி அறியாமை என்னும் இருளில் நாம் மட்டுமே மூழ்கிக் கிடக்கின்றோமே என்றெல்லாம் அச்சப்படவேண்டாம், அனைவருக்குமே இது போன்ற அச்சம் இருக்கும் சாதி , மத , மொழி , பணக்காரன் ,ஏழை படித்தவன் படிக்காதவன் என்ற எந்த வித்தியாசமும் இதற்கு இல்லை. அதுவும் திரையில் காலரைத் தூக்கி அலம்பல் பண்ணும்  நாயகர்கள் முதற்கொண்டு அறிவுரை சொல்லும் பெரியவர் வேடத்தில் நடிப்பவர்கள் வரை அனைவருமே சித்த மருத்துவமனைகளுக்கு  ரகசியமாக வந்து சிக்கிச்சை எடுப்பவர்களாகத் தான் இருக்கின்றனர்.எனவே நீங்கள் தனி ஆள் இல்லை, ஒரு கூட்டமே இப்படி அறியாமை இருளில் சிக்கி இருக்கின்றது.

சித்த மருத்துவத்தினை முறையாகக் கல்லூரியில் பயின்ற நான் ,பின்னர் சிறந்த மருத்துவர்களுடன் சில் காலம் பணியாற்றி இருக்கின்றேன், அதில் கிடைத்த அனுபவத்துடனும் , தற்பொழுது மருத்துவ ஆராய்ச்சியினை வெளிநாட்டில் மேற்கொண்டு வருவதனால் முழுக்க முழுக்க ஆய்வுகளுடனே  எழுதிருயிக்கின்றேன். 

1. நீளம் : முதல் குழப்பமே இதில் தான் ஆரம்பமாகின்றது , மேற்சொன்னவாறு ஷங்கர் படம் போன்று மிகைப்படுதிக் காண்பிக்கப்படும்  காணொளி பார்த்து பயந்து போய் இருப்பர். குழப்பத்திற்கான முதல் பதில் எந்தப் பெண்ணும் இந்த நீளம் குறித்து எந்த வித எதிர்ப்பார்ப்புடன் இருப்பதில்லை என்பதனை அறிவியல் ஆய்வுகள் அறுதியிட்டுக் கூறுகின்றன. இரண்டாவது சேலம் சிவராஜ் போன்றவர்கள் சொல்வது போல அது துவண்டு விட்டது என்பது முழுக்கப் பொய்யான பிரச்சாரம் , ஏனெனில் இயல்பு நிலையில் அது அப்படிதான் இருக்கும், யாருக்கும் விறைப்பு நிலையிலே 24 மணி நேரமும் இருக்காது , எப்பொழுது அதிகப் படியானரத்தம் அங்கு பாய்கின்றதோ அப்பொழுது தான் அது   வலுவாக இருக்கும். 12செமீ முதல் 16 செமீ வரை விறைப்பு நிலையில் இருந்தாலே போதுமானது.


2.கனவிற் கழிதல் : இதனை  தான் சொப்பன ஸ்கலிதம் என்று சொல்லி  ஒரு நோய் போல சித்தரிக்கின்றனர்.மருத்துவ ஆய்வுகள் அறுதியிட்டுக் கூருகின்றன்றன, இது பெண்களின் மாதவிடாய் போல ஆண்களுக்கு நடக்கும் ஒரு இயல்பான ஹார்மோன் செயல்பாடு.இது வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ நிகழலாம். அதிகமாக சுரந்திருப்பதனை வெளியேற்றும் ஒரு நிகழ்வுதான். இதனை ஆங்கிலத்தில nocturnal emmissions என்று அழைக்கின்றனர்.பருவ வயது இளைஞர்களுக்கு இது அடிக்கடி நிகழும். எனவே அவர்களுக்கு இந்த சந்தேகத்தினை அவர்கள் கேட்காமலே சொல்லி புரிய வைப்பது பெரியவர்களின் கடைமை. அதாவது எப்படி சின்ன வயதில் பால் பற்கள் விழுந்து புதிய பல் முளைக்கின்றதோ, உள்ளங்கைகளில் தோல் உரிந்து புதிய தோல் வருகின்றதோ அதே போல ஒரு இயல்பான ஒன்று தான் கனவிற் கழிதல் , எனவே இதனைப் பற்றி எந்தப் பயமும் இனி வேண்டவே வேண்டாம் நண்பர்களே.


மற்ற மிக முக்கிய அமசங்களான கைபழக்கம்,சீக்கிரம் வெளியேறுதல்  குறித்த அச்சங்கள்  பற்றி அடுத்தப் பதிவில் இதே தலைப்பில் பாகம் இரண்டாக எழுதுகின்றேன்.

நன்றி 
செங்கதிரோன்