Wednesday, June 29, 2016

நவீன திருதராஷ்டன்கள் : படித்த பிள்ளைகள்களின் படிக்காத பெற்றோர்கள்

மம்மி சொல்லு டாடி சொல்லுன்னு பெருமைப்பட ஆங்கில வழியில் படிக்க வைத்த பெற்றோர்களுக்கு அந்த ஆங்கிலத்தாலே கண்ணனிருந்தும் குருடர்களாக வாழும் நிலை இன்று ஏற்பட்டிருக்கின்றது. கைபேசி தொழில்நுட்பம் மிகப் பெரிய அசுர வளர்ச்சி அடைந்த இந்த நிலையில்  பருவ வயதினர்கள் இதை பயன்படுத்தும் எண்ணிக்கை பல மடங்கு பெருகி வருகின்றது. இந்தப் பருவயதினார்கள் பெரும்பாலானோர் ஆங்கில வழிக் கல்வி பயில்பவர்கள் தான், ஆனால் இவர்களின் பெற்றோர்கள் அனைவருமே ஆங்கிலத்தின் வாசனை கூட அறியாதவர்கள். இப்படி ஒரே வீட்டில் இரு மொழி புலமை கொண்டவர்கள் வாழ்வதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சிக்கல் குறித்து தான் இந்தப் பதிவு.


 படிக்காத பெற்றோர்களை நவீன திருதராட்டினன்கள் குறிப்பிடுவதற்கு முக்கியக் காரணமே தங்களின் வயது வந்த பிள்ளைகள் கைபேசியில் மற்றவர்களிடம்  ஆங்கிலத்தில் பரிமாறிக்  கொள்ளும் செய்திகளை இவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அதற்கான அர்த்தங்களை பெற்றோர்கள் கேட்டாலும் அவர்கள் உன்மையை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.


இன்னும் சில பெற்றோர்கள் இது போன்ற செயல்களை ஊக்குவிப்பது போல நடந்து கொள்வார்கள். எவ்வாறென்றால் முதல்  வரியில் சொன்னது போல டாடி மம்மினு கூப்பிடுவதை பெருமைப் பேசிக் கொண்டிருந்தவர்கள் இப்போது என் மகனுக்கோ அல்லது மகளுக்கோ என்னை விட அதிகம் கைபேசியை எப்படி இயக்குவது என்று தெரியும் என்று பெருமை அடித்துக் கொள்கின்றனர்.

இன்றைக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியரிடையே கூட வாட்ஸப் குரூப் உண்டு ,அவற்றில் படிப்பையும் தாண்டி மற்ற அரட்டைகள் தான் அதிகம் இருக்கின்றன . ஆனால் இந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் இதனை கண்டிக்காமல்  அதன் விபரீதம் உணராமல் இருப்பதனால் அந்த பிள்ளைகள் ஏதேனும் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றன.


சேலம் வினுப்ரியா தற்கொலையினைக் கூட இதனுடன் நாம் தொடர்பு படுத்திப் பார்க்கலாம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கைபேசியில் அதிக நேரம் செலவிட்டால்  அதனை கண்டிக்க வேண்டும். வளரும் வயதில் உள்ள பிள்ளைகளின் (Teen age ) மூளை வளர்ச்சி அதிகம் பக்குவபப்டுத்தி பார்க்கும் திறமை அற்றது .எதனையும் வெகுளியான மனப்பாண்மையுடன் தான் அணுகுவார்கள்.பெற்றோர்கள் தான் அவர்களுக்கு சரியான விழிப்புணர்வினை உண்டாக்க வேண்டும்.

செய்யவேண்டியவைகள்:

1.இரவு ஒன்பது மணிக்கு மேல் அவர்களை கைபேசி பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது . அவர்களின் தூக்கம் கெடுவதோடு மட்டுமன்றி கண்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.

2.வாட்சப் மற்றும் முகப்புத்தகத்தில் அவர்களின் படங்களை மற்றவர்களுக்கு அனுப்பக் கூடாது என்று சொல்வதோடு மட்டுமன்றி அதனால்  ஏற்படும் விளைவுகள் குறித்தும் அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

3. மிக முக்கிய பொறுப்பு பள்ளிகளுக்கு உள்ளது .இன்றைய நிலையில் பள்ளியில் கைபேசி மற்றும் முகப்புத்தகத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து முழுமையான ஒரு விழிப்புணர்வு வகுப்பு ஒன்றைக் கூட மாதம் ஒரு முறை நடத்தலாம்.

4. அதே போல காவல் துறையும் இணையக் குற்றங்களை மிக சாதாரணமான ஒன்றாக நினைக்காமல் அது குறித்த புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் .

இந்தப் பிரச்சனையின் மையப்புள்ளியே மொழிதான், காலப்போக்கில் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்றே நம்புகின்றேன். இருப்பினும் நம் ஆங்கில மோகம் சில சமயங்களில் இது போன்ற சங்கடங்களைத் தருகின்றது .மேற்குலக நாடுகளில் அங்கிருக்கும் அனைத்துத் தொழில்நுடபக் கருவிகளும் அந்தந்த மக்களின் மொழியில் தான் இருக்கிறன்றன .என்னுடன் பணிபுரிந்த ஜப்பானியரின் கணினி முழுக்க முழுக்க ஜப்பானிய மொழியில் தான் இருக்கும் .அது தான் அங்கு சமூக சம நிலையினை உண்டாக்கி இருக்கின்றது.அந்த நாடுகளில் நம் நாட்டில் நிகழ்வது போன்ற குற்றங்கள் நடப்பதும் இல்லை.இதனை நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.


நன்றி 
செங்கதிரோன் 


Tuesday, June 28, 2016

இசை உலகின் ரோமியோக்கள் :

பரந்து விரிந்து இருக்கும் இசை உலகில் இயங்கும் தேவதைகள் , பொறுக்கிகளை அடுத்து ரோமியோக்கள் பற்றியும் சில தகவல்களை அறிந்து கொள்ளலாம். அழகிய இசை தேவதைகளைப் போலவே இவர்களும் மிக அழகானவர்களாக மட்டுமல்லாமல் மிக மிக வசீகரமானக் குரல் வளத்தைக் கொண்டவர்கள். 
கார்த்திக்


நம்மூரிலும் இது போன்ற பல அழகான பாடகர்கள் இருந்தாலும் அவர்கள் திரைக்குப் பின்னே இயங்குவதானால் அதிகம் கவனிக்கப்பட்டதில்லை. ஆனால் வெளிநாடுகளில் தனிப் பாடகர்களாகவும் குழுவாகவும் இயங்கும் இவர்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கின்றது.


மைக்கேல் ஜாக்சனில் ஆரம்பித்து ஜஸ்டின் டிம்பேர்லக் என பலரும் இந்த ரோமியோக்கள் வகையில் அடங்குவர். இருப்பினும் நான் இந்த வரிசையில் அதிகம் அறியப்படாத ஆனால் மிக திறமை வாய்ந்த கலைஞர்களை குறித்து தனித்தனி பதிவாக எழுத உள்ளேன்.
மைக்கேல் ஜாக்சன்


இந்த ரோமியாக்களில் சிலர் நடனத் திறமை வாய்ந்தவர்களாக இருப்பதானால் கூடுதல் சிறப்பு ,ஏனென்றால் குழந்தைகளையும் கவர்ந்தவர்களாகவும் இருக்கின்றார்கள்.

நம் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த MK தியாகராஜ பாகவதர் நடிகர் மட்டுமன்றி சிறந்த பாடகரும் கூட , அவரைப் போலவே ஆங்கில இசை உலகைக் கலக்கிக் கொண்டிருந்த ஒருவர் எல்விஸ். அவர் இறந்து  இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் அவரின் இசை போற்றப்பட்டு வருகின்றது.
எல்விஸ்


எல்விஸின் மிகச் சிறந்த பாடலான Always on my mind பாடலைக் கேட்டுப் பாருங்கள் . பிறகு புரியும் ஏன் இன்றும் அவரின் இசை கொண்டாடப்பட்டு வருகிற்னறது என தெளிவாகும்.
நன்றி 
செங்கதிரோன் 

Saturday, June 25, 2016

இசை உலகின் தேவதைகள் : கிறிஸ்டினா பெர்ரி (Christina Perri )


ஒரே பாடலில் அதுவும் முதன் முதலாக வெளியான பாடலில் உலகப் புகழ் பெற்றவர்கள் சிலரே , அவர்களில் ஒருவர்தான் கிறிஸ்டினா. பென்சில்வேனியாவில் பிறந்த இவர், தன் சகோதரர்களைப் போல இசையில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. கிதார் மற்றும் பியானோ வாசிக்கக் கற்றுக் கொண்டார்.


21ம் வயதில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் வந்து தனது இசைப்பயணத்தினை ஆரம்பித்தார். அனைவரையும் போல இவருக்கும் ஆரம்பகாலம் மிக கடுமையான ஒன்றாக அமைந்தது. இருப்பினும் 2010ம் ஆண்டு அமெரிக்காவின் புகழ் பெற்ற நிகழ்ச்சியான so you think you can dance என்ற நிகழ்ச்சியில் இவரின் jar of hearts என்ற பாடல் இடம் பெற்றது. பாடலைக் கேட்ட அரங்கமே அதிர்ந்தது.அடுத்த சில நாட்களில் இந்தப் பாடல் உலகம் முழுதும் சென்றடைந்தது. பல மில்லியன் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. அப்பாடலைக் கேட்க நீங்களும் ஆர்வமாக இருப்பீர்கள் , உங்கள் குழாய் இணைப்பினைக்  கீழே கொடுத்துள்ளேன் கேட்டு பார்த்து மகிழுங்கள்.

அதற்கடுத்து இரண்டு இசைத்தொகுப்புகளை வெளியிட்டார். 2012ம் ஆண்டு அவரின் திறமையை நிரூபிக்க இன்னொரு வாய்ப்பு கிட்டியது. மிகப் பிரபலமான காதல் படமான Twilight saga; Breaking Dawn படத்தில் இவரின் A Thousand  years  பாடல் இடம் பெற்றது. இது முந்தைய jar of hearts ன் சாதனையை முறியடித்து தாறு மாறாக வெற்றி பெற்றது. எனக்கும் இந்தப் பாடலின் மூலம் தான் கிறிஸ்டினா பற்றித் தெரியும்.அந்தப் பாடலின் இணைப்பு கீழே உள்ளது.


புகழின் உச்சிக்கே சென்ற இவர் நான்காண்டு இடைவெளிக்குப் பின்னர் கடந்த மாதம் முதல் அடுத்த இசைத்தொகுப்பினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்.அவரின் பாடலைக் கேட்க உலகம் முழுதும் உள்ள அவரின் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். மேல உள்ள பாடல்களைக் கேட்ட பிறகு நீங்களும் கிறிஸ்டினாவின் ரசிகராக மாறிவிடுவீர்கள்.

நன்றி 
செங்கதிரோன் 

விஜயகாந்த் வழியில் விஷால்:

தென் மாவட்டத்தில் பிறந்த விஜயகாந்துக்கு அங்கே செலவாக்கு இல்லை எனவே வட மாவட்ட இளைஞர்களை தன் வசப்பபடுத்திக் கொண்டார். அதே போல தன் சொந்த மாநிலமான தெலுங்கு சினிமா விஷாலை  உள்ளெ வர தடுத்ததினால் தமிழ் சினிமாவில் தஞ்சம் புகுந்தார். ஆனாலும் இங்கு எந்த விதமான பிடிப்பும் கிடைக்கவில்லை . இப்படியே சென்றால் தன்னுடைய அண்னன்(விக்ரம் கிருஷ்ணா) மாதிரி தானும் சீக்கிரமே சினிமாவிலிருந்து காணாமல் போய்விடுவோம் என்று அஞ்சினார். மூன்றே படத்தில் தன்னுடைய மார்க்கெட்டை விஜய் மற்றும் அஜித்துக்கு அடுத்த நிலைக்கு எடுத்து சென்று விட்டார் சிவ கார்த்திகேயன். இதனால் விஜயகாந்த் எப்படி வட மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் உள்ள  வன்னியர்களை வளைத்து மிகப் பெரும் வெற்றி அடைந்தாரோ அதே வழியில் செல்ல நினைத்தார். இது போன்ற ஒரு சூழலில் தான் விஷாலுக்கு தெற்குப் பகுதியில் வாழும் தேவர் இன இளைஞர்களைக் குறிவைத்துப் படம் எடுத்தால் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று கனக்குப் போட்டார். வேறு யாரேனும் கூட இந்த யோசனையை வழங்கி இருக்கக் கூடும். 


முதன் முதலாக சுசீந்திரன் இயக்கத்தில் பாண்டிய நாடு என்று மதுரையை மையமாக வைத்து ஒரு படம் எடுத்து சோதனை முயற்சி செய்தார்.மதுரைக்காரன்டா என்ற வசனத்தை சொன்னதன் மூலம் மந்திரித்து விட்ட கோழியாக மதுரைக்காரர்கள் இவரின் ரசிகராக மாறினர். அதற்கடுத்து சாதிப் பெருமையை பேசும் படங்களை எடுப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த முத்தையாவின் இயக்கத்தில் மருது படம் நடித்து முழு நேர தேவர் அரிதாரம் பூசிக் கொண்டுள்ளார்.

கார்த்தி மற்றும் பிரபு இருவரும் தேவரினத்தை குஷிப்படுத்தும் வகையிலானப் பல படங்களை எடுத்து அவர்களை தங்கள் வசபப்டுத்தி வைத்து இருந்தனர். ஆனால் தற்போது அது போன்று யாரும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த தேவர் இளைஞர்களுக்கு விஷால் தான் இப்போது ஆறுதலாக இருக்கின்றார். பிரபு மற்றும் கார்த்தியின் வாரிசுகள் வளரும் வரை விஷாலுக்கு தென் மாவட்டத்தில் சிறந்த வரவேற்பு கிடைக்கும்.


திரையில் மட்டுமல்ல போது வெளியிலும் விஜயகாந்த் வழியினைப் பின்பற்றி பொதுத் தொண்டு செய்வது , ரசிகர் மன்றங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவது என அண்ணன் விஜயகாந்த் வழியில் சிறப்பாக சென்று கொண்டிருக்கின்றார். அது மட்டுமன்றி தமிழரல்லாதோர் பொறுப்புக்கு வருவதற்கு துவாக உள்ள அமைப்பான தென்னிந்திய திரைப்பட சங்கத்திலும் செயலாளராகி விட்டார். தெலுங்கு நடிகையான ரோகிணி பூவுலகு அமைப்பின் மூலம் விவசாயிகள் சங்கத்திற்கும் விஷாலை அழைத்து சென்று கவுரப்பப்டுத்தி  இருக்கின்றார்.


அடுத்து விஜகாந்த் வழியில் அரசியலை நோக்கி செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே எண்ணுகின்றேன். 

சாதிவெறியும் சினிமா வெறியும் தமிழனின் கண்ணை மறைத்தால் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற நிலை மாறி வந்தாரை ஆள வைக்கும் மாநிலம் என்ற சிறப்பு பெயர் பெற்று விளங்கும்

நன்றி 
செங்கதிரோன்


நடிகர் சங்க தேர்தல் குறித்த பதிவு 

இசை உலகின் தேவதைகள்: பெர்ஜி ( Fergie)


தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னாளில் மிகப்பெரிய பாடகியான பெர்ஜி பற்றி இந்தத் தொடரில் பார்ப்போம். ஆசிரிய பெற்றோருக்கு பிறந்த பெர்ஜி நடிப்பு மற்றும் பாட்டுத் திறமையில் சிறுவயதிலிருந்தே மிகுந்த ஆர்வமுடியவராக இருந்தார். இதனாலேயே தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. 


இசைத் துறையில் நுழைய ஆர்வமுடன் இருந்த போது black eyed peas என்ற இசைக்குழுமம் இவரை தங்கள் அணியில் சேர்த்துக் கொண்டது. அந்த அணியின் மிகப்பெரிய வெற்றிக்கு இவரின் குரல் மிகப் பெரும் பலமாக அமைந்தது. எடுத்துக் காட்டாக கீழே உள்ள Pump it பாடலின் காணொளியைப் பாருங்கள், நிச்சயம் நீங்கள் மெய்மறந்து விடுவீர்கள்.


இந்த இசைக்க குழுமம் வெளியிட்ட இசைத்தொகுப்புகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. இடையில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் நடிக்கவும் செய்தார்.2006ல் தனது சொந்த ஆல்பமான dutchess வெளியிட்டார். பெண்களின் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்த தொகுப்புக்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றது . இதனால் அமெரிக்க இசைத் துறையின் அதிகம் விரும்பப்பட்ட  பெண் பாடகி (Favourite female artist ) விருது கிட்டியது. இந்த தொகுப்பின் சிறந்த மற்றும் எனக்குப் பிடித்த பாடலான Clumsyன் காணொளி இணைப்பைக் கொடுத்திருக்கின்றேன் கண்டு மகிழுங்கள்.எனக்குப் பிடித்த மற்ற பாடல்கள்.
1.My humps 
2.I gotta feeling 
3.Dont stop the party 

பெர்ஜியின் அழகில் மட்டுமல்ல குரலிலும் நீங்கள் மயங்கி இன்பமாக இந்த வார விடுமுறையைக் கொண்டாடுங்கள்.


நன்றி 
செங்கதிரோன் 

Friday, June 24, 2016

ராஜாவின் எடுப்பு சுப்ரமணியசாமியின் கொடுக்காக மாறியதன் பிண்ணனி:

வளர்த்த கடா மார்பில் பாய்வது நம்மில் பலருக்கும் நடந்திருக்கும். ஏழை பிராமணனை சோறு ஊட்டி வளர்த்து தன்னையுடைய எடுப்பாக எட்டாண்டுக்கும் மேலாக வைத்திருந்த ராஜாவுக்கு தெரியவில்லை , அந்த எடுப்பு தான் தன் அரசியல் வாழிவினை முடிக்க வந்த சூனியம் என்று , ஆமாம் அவர் தான்  ஆசிர்வாதம் ஆச்சாரி ,இவரை சமீப காலங்களில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் காண முடியும்.


பிராமணர்களின் அறிவுத் திறமையும் அப்பாவித் தனத்தையும் நம்பி அருகில் வைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு ராஜா மற்றும் ஆசிர்வாதம் ஆச்சாரி ஒரு சிறந்த உதாரணம். தலித் குடும்பத்தில் பிறந்து மிகவும் கடினப்பட்டு இந்த பதவிக்கு வந்த ராஜா ஊரார் பணத்திற்கு ஆசைப்பட்டதோடு அல்லாமல் , தன்னுடைய சமூகம் சார்ந்த ஒருவரை தன் அருகில் வைத்திராமல் , காலம் காலமாக நம்பப்படும் உயர்சாதியினர் அறிவாளிகள் என்று நம்பி ஆசிர்வாதத்தினை அருகில் வைத்தனால் ராஜாவின் அரசியல் வாழ்வு அஸ்தமனமானது. இப்படிப்பட்ட ஒருவரை திமுக என்றோ கட்சியை விட்டு நீக்கி இருக்க வேண்டும். இருப்பினும் சுயமரியாதைக் கட்சியின் இந்த சுயநலப் போக்கு ஒன்றும் ஆச்சரியத்துக்கு உரியதல்ல.


ஆசிர்வாதம் ஆச்சாரி என்ற அம்பி எப்படி அந்நியனாக மாறினார் என்று பார்ப்போம்.
இந்தியன் எக்ஸ்பிரஸில் இவர் சொன்ன செய்தி, சும்மா சுற்றித் திரிந்து கொண்டிருந்த எனக்கு பல நாள் சோறு போட்டு பின்னர் வேலையும் போட்டுக் கொடுத்த ராஜா அவர்களை நான் என்னுடைய மூத்த சகோதரர் போல எண்ணுகின்றேன்.
இந்தியன் எக்ஸ்பிரஸில் சொன்ன வாசகம் அப்படியே அடைப்புக்குறிக்குள் 
(Achary became emotional,saying,“Deep in my heart he (Raja) is still like my elder brother. I used to take food in his house many times. He was very fond of giving me food. Especially when I was a bachelor,he was very protective of me. I will never forget this.)”


ராஜா சுற்று சூழல் அமைச்சராக இருந்து தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த காலம் வரை அவரின் உதவியாளராக இவரை தான் வைத்திருந்தார்.ராஜாவை வசமாக சிபிஐயில் காட்டிக் கொடுத்த பின் இதையெல்லாம் சொல்கின்றார். இருப்பினும் இந்த யோக்கிய சிகாமணியின் மேலும் ஊழல் வழக்கு இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ஜெயலலிதா மேல இருக்கும் அதே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு இவர் மேலும் இருக்கின்றது. எனவே தான் ராம் ஜெத்மலானி  அவர்கள் இவரை குறுக்கு விசாரணை செய்கையில் 2009ல் இந்த வழக்கு நடந்து வருகையில் திடீரென்று இப்பொழுது அப்ரூவராக மாறியதற்கு சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தப்பிப்பதற்கா என்று கேட்டபோது இவரிடம் முறையான பதிலில்லை.


இப்படிப்பட்ட ஊழல் பேர்வழியை, அரசியல் வாழ்வு அஸ்தமனமாகக் கூடிய நிலையில் இருந்த சுப்ரமணிய சாமி தன் வீட்டின் பின் வாசல் வழியாக தன் மனைவியின் மூலம் இந்த ஆசிர்வாதம் ஆச்சாரி ராஜாவின் அலுவலகத்தில் இருந்து திருடிக் கொண்டுவந்து கொடுத்த ஆவணங்களை வைத்து பூச்சாண்டி சாமியாக அவதாரமெடுத்தார். ஒரு ஏழை பிராமணனுக்கு வாழக்கை கொடுத்த ராசாவுக்கு அதற்கு பரிசாக மற்றோரு பிராமணர் தலித் சமூகத்திற்கு காலத்தால் அழியாத இழிவினை ஏற்படுத்தித் தந்தார். 2ஜியால் பலனடைந்து அம்பானி ,டாட்டா போன்ற்வர்களைப் பற்றி சிறிதும் வாய் திறக்காத இந்த சுப்ரமணிய சாமி ராஜாவை மிக மிக இழிவாகப் பலமுறைப் பேசினார். குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஆசிர்வாதம் ஆச்சாரி ஒரு நாள் கூட சிறையில் அடைக்கப்படாத மர்மம் என்னவேறு தெரியவில்லை.


2ஜியால் மிகப்பெரும் பலனடைந்த பிஜேபி ஆசீவாதம் ஆச்சாரிக்கு தன் கட்சியில்  தேசிய செயலாளர் பதவியும் , ரயில்வேயில் பயணிகள் வசதிக்கான துறையின் தலைமைப் பொறுப்பையும் வழங்கி கவுரவித்திருக்கின்றது. இப்பொழுது முழு நேர சுப்ரமணிய சாமியின் கொடுக்காக மாறி பல கருத்துக்களை தமிழ் ஊடகங்களில் தெரிவித்து வருகின்றார்.

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் விளைவித்த ஆசிர்வாதம் ஆச்சாரியின் இந்த செயலின் மூலம் நாமும் நம் வாழ்க்கையில் யாரையும் நம்பி ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருத்தல் மிக நல்லது.

'அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்'என்று சிலப்பதிகாரத்தில் வரும் சொற்றோடரினைப் பள்ளியில் படிக்கும் போது அர்த்தம் விளங்கவில்லை . இருப்பினும் எந்நேரமும் சிறுவயதில் அதை சொல்லிக் கொண்டேயிருப்பேன். ஆனால் அதன் அர்த்தம் புரிந்த பிறகு அந்த சொற்றோடரே அரசியல் பிழைத்தோருக்கு புறம் கூற்றாகும் என்று மாறிவிட்டது. நம் அன்றாட வாழ்க்கையிலும் இது போன்று  எண்ணற்ற ஆசிர்வாதம் இருக்கின்றார்கள் ,பிழைப்புவாதம் மட்டுமே அவர்களின் நோக்கம் . அவர்களிடம் இருந்து தப்பித்து வாழ்வது தான் சாதனை. 

நன்றி 
செங்கதிரோன் 
Tuesday, June 21, 2016

இசை உலகின் பொறுக்கிகள்: மொட்டை பொறுக்கி

நம்ம மொட்டை ராஜேந்திரன் போலவே எப்பொழுதும் மொட்டைத் தலையுடன் பவனி வரும் இந்த இசைப் பொறுக்கியின் பெயர் பிட்புல் (Pitbull ). அமெரிக்காவின் அழகிய கடற்கரை நகரமான மியாமியில் கியூபன் (Cuba )பெற்றோருக்குப் பிறந்த இவர் சிறுவயதிலேயே நம் பாரதியாரைப் போன்றே கியூபன் தேசியக் கவியின் பாடல்களை முழுக்க ஒப்புவிக்கும் திறமை பெற்றிருந்தார்.
பிட்புல்(pitbull) 

ஆர்மண்டோ (Armando Christian Pérez) என்ற தன் சொந்தப் பெயரினை மாற்றி பிட்புல்(pitbull) என்ற நாயினத்தின் ஒரு வகையினை வைத்துக் கொண்டதற்குக் காரணம் அந்த நாயின் போராட்ட குணமே என்று குறிப்பிட்டு இருக்கின்றார்.


இசை உலகில் 2002ம் ஆண்டு நுழைந்த ஆரம்பகாலத்திலேயே   Fast and furious படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரின் oye பாடல் இடம் பெற்று புகழ் வெளிச்சம் படத் தொடங்கியது. 

2004ல் தன்னுடைய ஊரின் பெயரில் வெளியிட்ட மியாமி ஆல்பம் பெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து மற்ற இசைக்க கலைஞர்களுடன் கைகோர்த்து பல ஆல்பங்களை வெளியிட்டார். அவற்றில் இசை உலகின் ரோமியாவான கிறிஸ் பிரவுன் (Chris Brown)உடன் வெளியிட்ட International love பாடல் மிகப்பெரிய ஹிட்.அதன் காணொளியைப் பாருங்கள், இதைப் பார்த்த பின்பு நீங்களும் மொட்டைப் பொறுக்கியான பிட்புல்லின் ரசிகராக மாறி விடுவீர்கள். 

மற்ற சிறந்த பாடல்கள் 
1.Give me Everything
2.Hey Baby
3.Rain over me

2014 உலகக் கால்பந்துப் போட்டிக்காக பாடிய oye oye பாடலும் மிகப் பிரபலம் அதனையும் கீழே  கொடுக்கப்பட்ட உங்கள் குழாய் இணைப்பில் கண்டு மகிழுங்கள். 
நன்றி 
செங்கதிரோன் 

Sunday, June 19, 2016

எனக்கு இன்னொரு பேர் இருக்கு; சப்பை


ஆரம்பத்திலேயே சொல்லி விடுகின்றேன் நான் இந்தப் படத்தை இரண்டு முறை பார்த்து விட்டேன். ஆனால் படம் யாரை மையபப்டுத்தி எடுக்கப்பட்டதோ அவரை விட மற்றவர்கள் தான் அதிகம் மிளிர்கின்றார்கள். இருப்பினும் இனி ஜீவியின் படங்கள் என்றாலே அது ஆண்களுக்கான படம் என்றளவுக்கு முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே பார்க்கும் படமாக அமைந்திருக்கின்றது .


ஜிவி இந்தப் படத்தில் சிம்பு ,தனுஷ் , விஜய் ,டீ.ராஜேந்தர் என எல்லோரையும் இமிடேட் செய்து நடித்திருக்கின்றார்.மூன்றாவது படத்திலேயே காமரா பயம் துளியும் இன்றி தனக்கு என்ன வருகின்றதோ அதை செய்திருக்கின்றார். 

இவரின் கடந்த மூன்று படங்களிலும் இவரை விட அதிகம் கவனம் பெற்றது இவருடன் சேர்ந்து நடித்தவர்கள் தான் , இந்தப் படத்திலும் அது தான் நடந்திருக்கின்றது. யோகி பாபு , கருணாஸ் இல்லை என்றால் படம் அம்பேல் தான் , இவர்கள் வரும் காட்சி ஒவ்வொன்றும் அருமை.


கதாநாயகி கயலுக்கு சிறிதும் முக்கியத்துவம் இல்லை.ஊறுகாய் போல தான் பயன்படுத்தி இருக்கின்றார். இரண்டாம் பாதியில் வரும் வில்லன் பெயர் தெரிய வில்லை ,ஆனால் நன்றாகவே நடித்த்திருக்கின்றார்.


நைனாவாக வரும் சரவணன் பருத்தி வீரனுக்குப் பிறகு ஓரளவு மனதில் நிற்கும் பாத்திரம். நிரோஷா அம்மா கேரக்டரில் அசத்தல்.நைனாவாக வரும் சரவணன் பருத்தி வீரனுக்குப் பிறகு ஓரளவு மனதில் நிற்கும் பாத்திரம். நிரோஷா அம்மா கேரக்டரில் அசத்தல்.
இயக்குனர் சாம் ஆண்டன் 


இவ்வளவு பேர் சேர்ந்து இந்தப் படத்தை முன்னிறுத்தினாலும் ஜீவியின் திறமை படத்தில் சொலவ்து போல் சப்பை என்று தான் சொல்ல  வேண்டும்.

நன்றி 
செங்கதிரோன் 

Wednesday, June 15, 2016

அலுவலகத்தில் எலி, இணையத்தில் புலி :

வீட்ல எலி ,வெளியில புலி என்ற படத்தில் வீட்டில் எலியாக இருக்கும் கணவன் அலுவலகத்தில் புலியாக செயல்படுவதை நகைச்சுவையாக எடுத்துக் கூறியது. இன்றைய காலகட்டத்தில் அரசியல்,மதம் ,சாதி போன்றவை குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும் , ஆனால் அவற்றை பொது வெளியில் மிக எளிதாக பேச முடியாத சூழல் இருக்கின்றது. அதனையும் மீறி இது குறித்துப் பேசுபவர்களை அந்தக் கருத்துடன் ஒத்துப் போகாதவர்களுக்குக் கோபம் ஏற்படும்.இதனால் நாம் வேலை செய்யும் இடத்தில் கெட்ட பெயர் ஏற்படும், அது மறைமுகமாக நம் வளர்ச்சியையும் பாதிக்கும். இதற்குப் பயந்தே பலரும் பொது வெளியில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தத் தயங்குகின்றனர். 


இணையம் பரவலான பிறகு , தங்கள் மனதில் கொட்டிக் கிடக்கும் கருத்துகளை அங்கே எந்த தங்கு தடையுமின்றி கொட்ட ஆரம்பித்தனர். அலுவலகத்தில் மிக இயல்பாக அனைவரிடமும்(சாதி, மத பேதமின்றி) பேசிவிட்டு பிறகு  சிறிது நேரத்தில் இணையத்தில் சாதி ,மதம் சார்ந்த கருத்துகளைப் பதிவு செய்வார்கள். இன்னும் சிலர் மிக புத்திசாலித்தனமாக சொந்தமாகக் கருத்துகளை எழுதிப்  பதிவு செய்வதை விட்டு விட்டு பிறர் எழுதி வெளியிட்டவற்றில்  தனக்குப் பிடித்த  கருத்துகளை முகப்புத்தகத்தில்   விருப்பம் செய்வது மற்றும் அவற்றை பகிர்வது என்று நுணுக்கமாக தங்கள் நிலைப்பாட்டினை மற்றவர்களுக்கு தெரிவிப்பதுண்டு.


மிக மேலோட்டமாகப் பார்த்தால் இணையத்தில் மட்டும் புலியாக செயல்படுவது ஆரோக்கியமானப் போக்காகவேப் பார்க்கப்படும். ஏனென்றால் இந்த செயல்பாட்டால் நேரடியான வாய்த்தகராறோ அல்லது அடிதடியோ நடப்பத்தில்லை.எதிர் எதிர் கருத்தைக் கொண்ட இருவர் அலுவலகத்தில் நண்பர்களாகவும் ,இணையத்தில் தாங்கள் சார்ந்த கருத்தியலுக்கு ஆதரவானவர்களாக செயல்படுவதினால் சுமூகமான வேலைசூழல்  (Good work atmosphere) இருக்கும்இது நீண்டகாலம் சரியான திசையில் நோக்கி செல்லுமா என்று தெரியாது. இவர்கள இருவரில் ஒருவர் மிகவும் மதிக்கும் தலைவரை இழிவபடுத்தியோ அல்லது கிண்டலடித்தோ மற்றவர் தன்னுடைய கருத்தை இணையத்தில் பதிந்தால் நேரடியாகவே பிரச்சனை வெடிக்கும். இவ்வாறு இணையத்தில் மட்டும் புலியாக செயல்படுவோருக்கு இருக்கும் முக்கியப் பிரச்சனை தாங்கள் சார்ந்த அல்லது கருத்தியலை ஒட்டியப் பதிவுகளை மட்டுமே படிப்பது மற்றும் அவை குறித்து பதிவு செய்யும் பிரபலமானப் பதிவர்களை தெய்வத்திற்கு இணையாக மதிப்பது போன்ற மூட நம்பிக்கை பழக்கங்கள் மேலோங்கி இருக்கும். இதனால் சிந்திக்கும் ஆற்றல் அற்ற நிலைக்கு ஆளாக நேரிடும்.  மேற்சொன்ன இரண்டுமே இணையத்தில் மட்டுமே புலியாக செயல்படுவதினால் ஏற்படும் அபாயங்கள்.

இணையத்தில் சாதி சார்ந்த குழுக்கள் , மதம் சார்ந்த குழுக்கள் , கட்சி சார்ந்த குழுக்கள் மற்றும் தங்கள் அபிமான நட்சத்திரம் சார்ந்த குழுக்கள் என்று ஏகப்பட்டவை இருக்கின்றன. இவற்றில் நடக்கும் சண்டையில் மிக மிக அதிகமான ஆபாச வசவுகள் தான் அதிகம் தென்படும்.  நேரடியாக விவாதம் செய்யும் போது யாரும் இந்தளவுக்குக் கீழ்தரமான சொற்களைப் பயன்படுத்துவத்தில்லை. நீயா நானாவில் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் கலந்து கொண்ட விவாதத்தின் போது பலரும் தாங்கள் இது போன்ற வசவு சொற்களை இணையத்தில் பயன்படுத்தியதாகவும், அதனைப் பார்த்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதன் பிறகு இவர்களிடம் பேசுவதை நிறுத்தி விட்டதாக் கூறி தங்களின் செயலுக்கு மனம் வருந்தினர். 


ஒரு நகைச்சுவையான தலைப்பை வைத்து விட்டு மிக ஆழமாக எழுதவேண்டியதாகி விட்டது. ஏனென்றால் இங்கே தொழில்நுட்ப வசதிகள் நம்மை மேம்படுத்தப் பயன்படுத்தவேண்டுமே அன்றி அவற்றினைத் தவறாகப் பயன்படுத்தி நாம் சமூகத்தில் நம்மை சிறுமைப்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற உயரிய நோக்கத்திலே இந்தப் பதிவினை எழுதி இருக்கின்றேன்.

இது போன்று நடந்துகொள்ளும் ஒரு நபரை உதாரணமாகக் காட்ட வேண்டுமென்றால் வீட்ல எலி வெளியில புலி படத்தின் கதாநாயகன் எஸ்வி சேகரேயே சொல்லலாம். தமிழகத்தில் இரு துருவக் கட்சிகளான திமுக அதிமுக இரண்டு தலைமைகளிடமுமே சுமூகமானப் போக்கு தேசிய அளவிலும் காங்கிரஸ் மற்றும் பாஜகவிடமும் நல்ல நட்பு என்று என்று தனது அரசியலை செய்து கொண்டிருக்கின்றார். இவரின் போக்கு சந்தர்ப்பவாதமாக இருப்பினும் அதனையும் தாண்டி நாம் புரிந்து கொள்ள வேண்டியது எதிர்கருத்தாளர்களை நேரடியாகவே கருத்து ரீதியாக மோதுவது தான் சரியானப் போக்காக இருக்கும்.

நாம் சார்ந்த கருத்துக்கு நேர் எதிரான கருத்தியலை படிப்பதன் மூலமாக மட்டுமே மேன்மை அடைய இயலும். உதாரணத்திற்கு அதிமுக ஆதரவாளர்(கட்சி சாராத ) என்றால் திமுக தொடர்பானவர்களின் கருத்தையும் படியுங்கள்,நீங்கள் தேவர் சாதியா நாடார் மற்றும் தலித் குறித்தப் பதிவகளைப் படியங்கள். பெரியார் பிடிக்குமா தெய்வ நம்பிக்கை சார்ந்த கருத்துகளைப் படியுங்கள். இந்தப் பரந்த வாசிப்புப் பழக்கம் உங்களை பண்பட்ட மனிதனாக்க உதவும்.


நன்றி 
செங்கதிரோன் 

Sunday, June 12, 2016

36 வயதினிலே தமிழர்களுக்கு எதிரானப் படம்:

கலாபவண் மணி இறப்பு குறித்து தீவிர விசாரணை நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். முதலில் அதிக மது குடித்ததால் இறந்தார் என்று சொல்லப்பட்டு பின்பு அது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்குப்பட்டிருக்கின்றது. ஆனால் மலையாளப் பத்திரிக்கைகள் மது அருந்துவதற்கு முன்பு கலாபவன் மணி காய்கறி சாலட் சாப்பிட்டவதாகவும் அந்த காய்கறிகளில் (பூச்ச்சிக் கொல்லி தெள்ளித்தனால்)நச்சுத் தன்மை இருந்ததனால்தான் அவர் இறந்து விட்டதாகக் கூறி தமிழக விவசாயிகள் மீது அந்தப் பழியினை சுமத்த முயற்சித்தார்கள்.


மஞ்சுவாரியார் நடித்து வெளிவந்த how old are you படத்தின் அடிப்படையே காய்கறிகளில் நச்சுத்தன்மை கலந்திருப்பதால் தங்கள் வீட்டிலேயே காய்கறிகளை வளர்க்க வேண்டும் என்ற நேரடியான கருத்தையும் இதன் மூலம் தமிழக விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் வாங்காமல் அவர்கள் வயிற்றில் அடிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை  கொண்டதாகும். இது நான் போகிற போக்கில் இந்தக் குற்றசாட்டை சொல்ல வில்லை, நீங்களே உங்களுக்கு தெரிந்த கேரள நண்பர்களிடம் கேளுங்கள் இதனை ஒப்புக்கொள்வார்கள்.கேரள ஊடகங்கள் தமிழக காய்கறிகள் குறித்து மிக மோசமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன அதன் ஒரு வெளிப்பாடே இந்த how old are you படம்.

ஆனால் சென்னையில் இருக்கும் சூர்யா இந்த அரசியலை புரிந்து கொள்ளாமல் தமிழர்களுக்கு எதிரான ஒரு படத்தினை தன் மனைவி ஜோதிகாவை வைத்து தயாரித்து வெளியிட்டார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெறாததற்கு முக்கியக் காரணமே , படத்தின் அடிநாதமான காய்கறி நச்சுத்தன்மை பிரச்சனை நம் மாநிலத்தில் இல்லை. ஓவ்வொரு தெருக்களையுமே தேடி காய்கறி வண்டிகள் வருகின்றன.ஆகையால் நமக்கு மிக தரமானக் காய்கறிகள் நல்ல விலையில் கிடைக்கின்றன.அப்டி இருக்கும் சூழ்நிலையில் நம் மண்ணுக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு படத்தினை எடுத்ததோடு மட்டுமன்றி , கேரளப் படத்திற்கு இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது கேரளா நம் விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் மீது கூறும் குற்றசாட்டினை அங்கீகரிப்பது போலானதாகி விட்டது.

எனவே தமிழ் திரையுலகை சார்ந்தவர்கள் பிற மாநிலப் படங்களை மொழிமாற்றம் செய்யும் போது  அந்தபடத்திற்குள் ஒளிந்திருக்கும்  நுண்ணரசியலில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

அனைவருக்கும் தெரியும்  கணவன் மனைவி உறவில் கேரளாவுக்கும் தமிழகத்திற்கும் மிகப் பெரும் வேறுபாடுகள் உண்டு. பெண்களை அவர்கள் நடத்தும் விதம் மிக வித்தியாசமானது அதிக ஆணாதிக்கப் போக்கும் , அவர்களுக்கு வெளிநாடு  செல்வது குறித்து அதீத ஆர்வம் ஆண் பெண் இருவருக்குமே இருக்கும்.

இவ்வளவு  குடும்ப அளவில் முரண்பட்ட மற்றும் நம் விவசாயிகளை களங்கப்படுத்தும் பிறமொழிப் படங்களை ஆதரிக்கவே கூடாது.

நன்றி 
செங்கதிரோன்   

Saturday, June 11, 2016

இசை உலகின் பயில்வான் பொறுக்கி

இசை உலகில் மிகவும் குண்டாக இருப்பவர்களைக் காண முடியும். ஆனால் பயில்வானாக இருப்பவர்கள் மிகவும் குறைவு. ராப் இசைக் குழுவை சேர்ந்தவர்களை நான் செல்லமாக பொறுக்கிகள் என்று குறிப்பிடுவதுண்டு. அதன் காரணமாகவே இசை உலகின் பொறுக்கிகள் என்ற தொடர் பதிவினை எழுதி வருகின்றேன். அந்த வரிசையில் இந்தப் பதிவில் பார்ப்பது புளோ ரிடா. இவரின் சொந்தப் பெயர் டிரமர் லாசெல் டில்லர்ட்  (Tramar Lacel Dillard), இருப்பினும் தான் பிறந்த ஊரின் (Florida)பெயராலேயே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
முதன் முதலாக 2000த்தில் இசைப் பயணத்தைத் தொடங்கிய புளோ ரிடா , மற்ற இசைக் கலைஞர்களான இசை உலகின் குண்டு பொறுக்கியான ரிக் ராஸ் ,டி -பெயின் மற்றும் ட்ரிக் டாடி ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். இருப்பினும் பத்தாண்டுகள் கழித்து தான் ராப் உலகில் மிகப் பிரபலமானார்.


புளோ ரிடாவின் முக்கியப் பாடல்கள் குறித்து பார்ப்பதற்கு முன் அவருக்கு உடம்பை பலப்படுத்துவதில் இருக்கும் ஆர்வத்தினப் பார்ப்போம். இசைத் தொகுப்பை உருவாக்கவே அதிக நேரத்தை செலவிட வேண்டி இருக்கும் , இருந்தாலும் கிடைக்கும் சிறிது நேரத்திலும் தன்னுடைய பால்கனியில் நிறைய உடற் பயிற்சிகள் செய்வார். நடிகர் ஆர்யா போன்றே இவரும் பலருக்கு உடலை பலப்படுத்த வேண்டும் என்ற உதவேகத்தை கொடுப்பார்.அவர் உடற்பயிற்சிக் கூடத்தில் செய்யும் காணொளியைப் பாருங்கள், உங்களுக்கும் உடலைப் பலப்படுத்த வேண்டும் எண்ணம் நிச்சயம் ஏற்படும்.இவரின் பாடல்கள் கேட்பதற்கு மட்டுமன்றி பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும் . எனக்குப் பிடித்த இவரின் பாடல்களை வரிசைப்படுத்துகின்றேன்.

1.Good feeling 
2.Whistle 
3.Wildones 
4.I cry 

எனக்கு மிகவும் பிடித்த பாடலான விசில் பாடலின் உங்கள் குழாய் இணைப்பினை கீழே கொடுத்துள்ளேன். பார்த்து மகிழுங்கள்.இந்த பயில்வான் பொறுக்கி உங்களுக்கு  இசையின் மூலம் மனதிற்கு  உற்சாகம் ஏற்படுத்துவான்.
                                             பாடல் வரிகள் காணொளி

இந்த இணைப்பில் என்றால் மேற்சொன்ன பாடலின் ஒலியும் ஒளியும் காணலாம்.
 https://www.youtube.com/watch?v=NwL98zzdEXo

நன்றி 
செங்கதிரோன் 

Wednesday, June 8, 2016

இசை உலகின் தேவதைகள் :மடோனா

ரஜினி குறித்து சொல்லப்படும் வசனமான வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை என்ற வாக்கிற்கு மிக பொருத்தமானவர் மடோனா,ஏனென்றால் அப்படி அழகு தேவதை.இந்தப் பெயரை கண்டிப்பாக நீங்கள் எங்கோ கேட்டிருப்பீர்கள் அல்லது படித்திருப்பீர்கள் அல்லது அவரின் புகைப்படத்தினைக் கூட பார்த்திருப்பீர்கள் ,ஆனால் அவரின் பாடலைக் கேட்டிருகின்றீர்களா?

அவரின் பாடல்களைக் கேட்டால் , மடோனா fever என்றொரு வித்தியாசமான காய்ச்சல் கண்டிப்பாக வரும் . அவ்வளவு வசீகரமானக் குரல், அந்த காய்ச்சலில் இருந்து விடுபட பலநாள் ஆகும். இனி மடோனாவின் வாழ்க்கை, அவரின் பாடல்கள் மற்றும் அவர் செய்த சாதனைகள் குறித்து பார்ப்போம்.


அனைத்துப் பிரபலங்களைப் போலவே இவருக்கும் இளமைக் காலம் இன்னல் மிகுந்ததாக இருந்தது. இருப்பினும் படிப்பில் அதிக கவனம் செலுத்தினார். தனது உயர்கல்வி படிப்பின் போது தான் நடனம் மற்றும் பாட்டு ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டினார். பின்னர் நியூயார்க் நகரம் சென்று கலைத்துறையில் கால் பதித்தார். அதன் பின்னர் அவருக்கு எல்லாமே ஏறுமுகமாக அமைந்தது.

என்பதுகளில் இவரின் நடனம் மற்றும் பாட்டு மெல்ல மெல்ல உலகம் முழுதும் பரவியது. இதனால் பாப் இசை உலகின் ராணியாக முடிசூட்டப்பட்டார்.ஹாலிவுட்டிலும் தன் திறமையை நிரூபித்து சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதினைப் பெற்றார். அது மட்டுமன்றி நம் ஊரில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த நதியா வளையல், கொண்டை போன்றே மடோனா அணியும் உடைகள் மற்றும் அவரின் அழகு சாதனங்கள் அமெரிக்கப் பெண்களிடம் மிக அதிக வரவேற்பினைப் பெற்றது.


                                பாரிஸ் நகரத் தாக்குதலுக்குப் பின்னர் மடோனா பாடிய பாடல் 

மடோனாவின் சிறந்த பாடல்கள்:

இந்த நூற்றாண்டின் சிறந்தப் பாடகி மற்றும் வெகு காலம் இசைத் துறையில் இருப்பதால் ஏகப்பட்ட சிறந்த பாடல்கள் உள்ளன. எனவே எனக்குப் பிடித்த பாடல் வரிசையை மட்டும் குறிப்பிடுகின்றேன்.
1.Material girl 
2.Fever 
3.Prayer 
4.Girl gone wild 
5.Express yourself 
 இவற்றை உங்கள் குழாயில் கண்டுகளியுங்கள். நான் வசிக்கும் நகரத்திற்கு வருடா வருடம் வருவதுண்டு. 150$ (ரூ .9000) நுழைவுக் கட்டணம் , இருப்பினும் ஒரு முறை மடோனாவை நேரே பார்த்த பின் தான் அவரின் பாடல்கள் மீதான ஈர்ப்பு இன்னும் அதிகமானது.


பின்குறிப்பு: 57 வயதாகிவிட்ட மடோனாவை இளம் தேவதைகள் தொடர் பதிவில் இணைத்ததற்கான காரணம் , இவரே தற்போதுள்ள அனைத்து இசை உலகின்  இளம் தேவதைகளுக்கும் முன் மாதிரியாக இருந்தவர்.

முந்தையப் பதிவு :இசை உலகின் இளம் தேவதைகள் :கெல்லி கிளார்க்சன்

நன்றி 
செங்கதிரோன்

கோகோ கோலா பாட்டிலால் குழப்பத்துக்கு உள்ளான ஒரு இனம்கோக் மாறும் பெப்சி பானங்களில் நச்சுத் தன்மை உள்ளது என்று கூறிப் பல போராட்ங்கள் தற்பொழுது நடந்து வரும் காலகட்டத்தில் , அந்த பாட்டிலால் மிகப் பெரும் குழப்பத்திற்கும் கலகத்திற்கும் ஒரு இனம் ஆட்பட்டது என்பதனை நம்ப முடிகின்றதா ?

1980ல் வெளிவந்து உலகம் முழுதும் மிகப்பெரும் வரவேற்பினைப் பெற்ற படம் Gods must be crazy. தென்னாப்பிரிக்க நாட்டுப் படமான இது 100 மில்லியன் டாலர் வசூலைக் குவித்தது.

கதை :
பரபரப்பாக இருக்கும் நகரத்தின் 600 மைலுக்கு அப்பால் மிக மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பழங்குடி மக்களைப் பற்றிய கதை. மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இம்மக்களிடைய ஆகாயத்தில் இருந்து ஒரு விமானி தூக்கி எறிந்த கோகோ கோலா பாட்டில் வந்து விழுகின்றது. இதற்கு முன்பு அப்படி ஒரு பொருளினைக் கண்டிராத அவர்கள் அதனை கடவுள் தங்களுக்கு தந்ததாக நம்புகின்றனர். அதனை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒரே  ஒரு பாட்டில் மட்டுமே இருப்பதால் அதனை ஒவ்வொருவரும் சொந்தம் கொண்டாட முயற்சிக்கின்றனர்.இதனால் ஒற்றுமையாக இருந்த இவ்வினக் குழுவில் சண்டை ஏற்படுகின்றது. பிரச்சனைக்குரிய பொருளான இந்த கோகோ கோலா பாட்டிலினைக் கடவுளிடமே கொடுக்க முடிவு செய்து அந்தக் குழுவின் தலைவன் உலகின் எல்லைக்கு செல்கிறான்.


இங்கிருத்து தான் படம் தொடங்குகின்றது , அவன் பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள் பற்றி மட்டுமல்லாமல் , நகரத்தில் இருந்து கிராமம் நோக்கி வந்த ஒரு இளம் பெண் மற்றும் காட்டில் ஆராய்ச்சி செய்ய வந்த ஒருவர் இவர்கள் இருவரிடையான காதல் என சுவாரசியமாக செல்லும்.

இந்தப் படம் tamilyogi என்ற இணையதளத்தில் தமிழ் பதிப்பில் (tamil dubbed ) இருக்கின்றது . மிக நகைச்சுவையானப் படம் , உங்கள் குழந்தைகளுடன் கண்டு களியுங்கள்.

இந்தப் படத்தின் மையமான பழங்குடியினத் தலைவனாக நடித்தவரின் நிலை தான் சற்று பரிதாபகரமானது. ஆரம்பத்தில் சொன்னது போல 100 மில்லியன்இந்த திரைப்படம்  வசூலித்திருந்தாலும் இவருக்குக் கிடைத்தது மிகவும் சொற்ப தொகையான 2000$ மட்டுமே, அவருக்கும் பணத்தின் மதிப்பு தெரியாததினால்  மகிழ்ச்சியுடன் அதனைப் பெற்றுக் கொண்டார். பின்னர் தான் இவருக்கு பணத்தின் மதிப்பு புரிய ஆரம்பித்தது,அந்த சமயத்தில் பணம் சம்பாதிக்கும் வழி இல்லை . அவர் சாகும் தருவாயில் பட நிறுவனம் 20,000$ வழங்கியது(ரூ.10 லட்சம் ).

பெப்சி கோக் குறித்து  நான் முன்பு எழுதிய இந்தப் பதிவினையும் படியுங்கள்.

நன்றி 
செங்கதிரோன்  

Sunday, June 5, 2016

இறைவி கதாநாயகர்கள் உற்சாக பானம் அருந்திய நிலையில் ஒரு உற்சாக பேட்டி :காணத்தவறாதீர்கள்

இறைவிப் படத்தில் வருவது போலவே நிஜத்திலும் மூன்று கதாநாயகர்களும் உற்சாக பானத்தில் மிதந்து பின் அளித்த ஜாலி பேட்டி குறித்த சிறியப்  பதிவு.

                                                    உற்சாக  காணொளி 
1.கவனிக்க வேண்டிய அம்சங்கள் :பாபி சிம்ஹாவின் உடல் மொழி (body language )
2.படம் குறித்து சொல்ல சொன்ன போது மூவரும் மாறி மாறி நீங்க சொலுங்க சார் என்னும் அக்மார்க் உற்சாக பானம் அருந்தியவர் செய்யும் ரகளைகள் 

என் அன்புக்குரிய உங்களிடம் இந்த காணொளியினைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அனைவரும் ரசித்திருப்பீர்கள்.இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துக்கள்
 
நன்றி 
செங்கதிரோன்