Tuesday, August 9, 2016

அறிஞர்கள் சபை நோக்கி இடைநிலை சாதிகளின் பயணம்

அறிவுசார் துறைகளான (கல்வி, இலக்கியம் ,விஞ்ஞானம்) சுதந்திரத்திற்கு  முன்னர் பார்ப்பனர்கள் நீக்கமற அணைத்து இடங்களிலும் நிறைந்திருந்தனர் , பின்னர் நீதிக்கட்சியின் தோற்றத்தினால் அவ்விடத்தை அதற்கடுத்த படிநிலையில் இருந்த செட்டியார், முதலியார், பிள்ளை போன்றோர் அக்கிரமித்துக் கொண்டனர். பின்னர் இடைநிலை சாதிகளும்(வன்னியர்,தேவர்,நாடார்)அங்கே நகர்ந்திருந்திருக்க (Transition) வேண்டும.ஆனால் அது போன்றதொரு நகர்வு (Transition)  நிகழாமல் இருக்க பல்வேறு முயற்சிகள் இந்த சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன் பின்னணி குறித்த சிறிய தொகுப்புதான் இப்பதிவு.

சமூக நீதி  அதிகம் பேசப்பட்ட தமிழகத்தில் அது பார்ப்பன ஆதிக்க  எதிர்ப்பில் வெற்றி பெற்றவுடன் மிகப் பெரிய தேக்க நிலையினை அடைந்து விட்டது. ஏனென்றால் செட்டியார், முதலியார், பிள்ளை   சாதிக்காரர்கள் பார்ப்பனர்கள் போல எல்லா இடங்களிலும் (கலை ,இலக்கியம் ,பத்திரிக்கை ,அறிவியல், வணிகம் etc ) ஆக்கிரமித்துக் கொண்டனர். இடைநிலை சாதிகளை சார்ந்தவர்கள் விவசாயத்துறையில் அதிக கவனம் செலுத்தியதால் மேற்சொன்ன துறைகளில் அவர்களின் பங்களிப்பு நிகழவே இல்லை.

முன்னேறிய வகுப்பினர் வருகைக்குப் பின்னர் அறிவுசார் தளத்தில்  பல நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டன.ஏகப்பட்ட படைப்பாளிகள் உருவானார்கள்.பல்வேறு புதிய கருத்துக்கள் சமூகத்தில் விதைக்கப்பட்டன. இருப்பினும் சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் போக்க எந்த ஒரு முயற்சியினையும் இந்த முன்னேறிய வகுப்பினர் எடுக்கவில்லை. மாறாக பார்ப்பனர்களைப் போலவே இவர்களும் தங்களை இடைநிலை சாதிகளை விட ஒரு படி மேலே இருக்கின்றோம் என்ற ஓரு மேதாவித்தனத்துடன் நடந்து கொள்கின்றனர் . அதுவும் குறிப்பாக சமூகத்தில்  பார்ப்பனரல்லாத இந்த முன்னேறிய  வகுப்பினர் இடைநிலைசாதிகளையும் தலித் பிரிவினருக்கும் இடையே நடக்கும் மோதலை உள்ளூர ரசித்தனர். ஏனென்றால் இந்த இரு தரப்பினரும்  தொடர்ந்து பிரச்சனைகளில் சிக்கி இருந்தால் தங்கள் பதவிகளுக்கு எந்தப்  போட்டியும் வராது என்று இந்த தந்திரத்தைக் கையாண்டு வருகின்றனர். 

இதற்கு சமீபத்திய மிகச்சசிறந்த உதாரணம் கபாலிப் பட இயக்குனர் ரஞ்சித்துக்கு ஊடகங்கள் அளித்த அதீத முக்கியத்துவம். ஏனென்றால் அந்தப் படத்தில் வரும்  வில்லன் கிஷோரின் பெயர் வீர சேகர், இது போன்ற பெயர்கள் அதிகம் இருப்பது இடைநிலை சாதிகளில் மட்டுமே அதுவும் குறிப்பாக  வன்னியர், தேவர் ,மீனவப் பிரிவுகளில் பெரும்பான்மையானோரின் பெயர் வீர என்ற அடை மொழியுடன் தான் துவங்கும். ஒரு வாதத்திற்கு கிஷோரின் பெயர் முதலியார், பிள்ளை அல்லது கவுண்டர் என்று இருக்குமானால் ஒட்டு மொத்த அறிவு ஜீவிகளும் இந்தப் படத்தினை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று பக்கம் பக்கமாக எழுதியும் பேசியும் குவித்திருப்பார்கள். வீர என்ற பெயரைப் பார்த்தவுடன் தாக்குதல் நம்மை நோக்கி அல்ல என்று அகமகிழ்ந்து  அண்ணன் ரஞ்சத்தினை போட்டி போட்டு பேட்டி எடுக்கின்றனர்.

அறிவுசார் தளத்தில்  நுழைய முன்னேறிய வகுப்பினர் மட்டும் தான் தடையாக இருக்கின்றார்களா என்றால் இல்லை என்றே கூற முடியும். ஏனென்றால் இந்த இடைநிலைசாதிகள் சார்ந்த அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தங்களின் சுயலாபத்திற்காக சாதீய உணர்வுகளை விதைத்து அவர்களின் மூளையினை சிந்திக்க விடாமல் செய்து மழுங்கடிக்க செய்கின்றனர். இதனாலேயே இடைநிலை சமூகம் சார்ந்த இளைஞர்கள் வன்முறையே தங்கள் பாதையாக தேர்ந்தெடுக்கின்றனர் .இதனால் இவர்களில் இருந்து குறிப்பிடத்தக்க அளவிலான கல்வியாளர்கள், படைப்பாளிகள் , அறிஞர் பெருமக்கள் உருவாகவே இல்லை. மேலும் இந்த இளைஞர்களை மேல்சாதியினரும் தங்களின் ஏவல் ஆட்களாகவே பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர்.

ஆந்திராவில் பெரும்பான்மையாக உள்ள  ரெட்டி மற்றும் நாயுடு என்று இரு துருவ அரசியல் மட்டுமே நடக்கின்றது. ஆனால் இங்கே பெரும்பான்மை எண்ணிக்கையில் உள்ள தேவர், வன்னியர் மற்றும் நாடார்களின் பங்களிப்பு சிறிதும் அறிவு சார் தளத்திலோ அல்லது அதிகாரத்திலோ குறிப்பிடத்தக்க அளவு இல்லை .

இது போன்ற ஒரு நிலை மிக அபாயகரமானது ஏனெனில் இடைநிலை சாதிகளுக்கான தகுந்த இடத்தினை முன்னேறிய வகுப்பினர் தானாக முன் வந்து வழங்க வேண்டும் அல்லது அவர்களை முன்னிலைப் படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவை இரண்டையும் செய்ய முடியாவிட்டாலும் இடைநிலை சாதி மற்றும் தலித்துகளுக்கு இடையே கலகம் ஏற்படுத்தி குளிர்காயும் போக்கினை மட்டுமாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். இச்சமூக மக்கள் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் கல்வியில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர், அவர்கள் விழிப்படைந்து  போராடி முன்னேறிய வகுப்பினரை குற்றம் சாட்டி வெளியேற்றும் போது பார்ப்பனர்கள் எப்படி தங்கள் இடம் பறிபோனது என்று நினைத்துப் புலம்புகின்றார்களோ அதே நிலை  தான் பார்ப்பனரல்லாத முன்னேறிய வகுப்புக்கும் விரைவில் ஏற்படும்


 அறிவுசார் தளத்தில் இடைநிலை சாதிகள் பங்கு குறைவு என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு , காட்சி ஊடகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் பார்ப்பனர்கள் மற்றும் முன்னேறிய வகுப்பினர் மட்டுமே இருப்பதில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும் . மேலும் சமூகத்தில் ஆழமான கருத்துக்களை விதைக்கும் எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்கள் சபையிலும் இவர்களின் பங்களிப்பே இல்லை .இடைநிலை சாதி மக்களின் பங்களிப்புடன் கூடிய கருத்தே ஒட்டு மொத்த சமூகத்தின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியும்.

அறிவுசார் சமூகத்தில் இடைநிலை சாதிகளின் பங்களிப்பிற்கான தகுந்த நேரம் இது தான் , இதனை நோக்கி அவர்கள் நகர வேண்டும். அதற்கான பாதையினை இந்த சமூகம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

நன்றி
செங்கதிரோன்

Friday, August 5, 2016

இசை உலகின் தேவதைகள்: எமிலி சாண்டெ

பாடலைக் கேட்கும் பொது நம் மனம் எங்கும் அலைபாயாமல் பாடலிலேயே ஒன்றிவிடக் கூடிய அளவுக்குப் பாடும் திறமை வாய்ந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே ,அவர்களில் ஒருவர் தான் எமிலி ஸாண்டே .ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த இவர் கறுப்பின தந்தைக்கும் வெள்ளையின தாய்க்கும் மகளாக 1987ல் பிறந்தார். சிறுவயதிலேயே பாடும் திறமையில் சிறந்து விளங்கினாலும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் அதன் விளைவாக மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் நரம்பு அறிவியலில் (Neuroscience) முதுகலை பட்டம் பயின்றார். இவருடைய முதல் பெயர் அடெல் தான், இருப்பினும் இதே பெயரில் மற்றோரு புகழ் பெற்ற பாடகி இருந்ததால் தன பெயரை ஸாண்டே என்று மாற்றிக் கொண்டார்.2010ல் தனது இசைப்பயணத்தினைத் தொடங்கிய இவர் குறைவானப் பாடல்களே பாடி இருப்பினும் இசை ரசிகர்களை எளிதில் தன் உணர்ச்சி மிக்க குரலால் வசப்படுத்திக் கொண்டார் . கீழே உள்ள இணைப்பில் புற்று நோயால் பதிப்படடைந்த தன் தோழிக்காக பாடும் பாடலினைப் பாருங்கள்.


என்பக்கத்தில் என்ற அர்த்தத்தில் next to me என்ற பாடலும் மிக பிரபலாமான ஒன்று அதனையும் கண்டு கேட்டு மகிழுங்கள்.


இங்கிலாந்து நாட்டில் இசைக்காக வழங்கப்படும் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கின்றார். இந்த தேவதையின் இசை மழையில் நனைந்து இந்த வார விடுமுறையை இன்பமாகக் கொண்டாடுங்கள் நண்பர்களே 

நன்றி 
செங்கதிரோன்

Wednesday, August 3, 2016

நிஜ வில்லன் சிவகுமாரும் நிழல் வில்லன் சத்யராஜும்

நிஜ வில்லன் சிவகுமாரும் நிழல் வில்லன் சத்யராஜும் 

சிவகுமார் போல நல்லவரை நீங்க பத்திரிக்ககைகளில் மட்டும் தான் பார்க்க முடியும் ,நிஜத்தில் அவர்  மிகப்பபெரிய வில்லன் என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கதான் இந்தப் பதிவு. மிகப்பெரிய சுயநலமும் சாதிவெறியும் கொண்ட ஒருவரை மனிதருள் மாணிக்கமாக சித்தரிக்க அவரும் அவருடன் இருப்போரும் முயற்சிக்கினறனர்.வைரமுத்து தேவர் சாதி வெறி கொண்டவர்  என்பதனை திரும்ப திருமப் சொல்லும் இந்த சமூகம் கொங்கு மாமணி என்று கவுண்டர்களிடம் இருந்து பட்டம் பெற்ற இவரை சாதி வெறியாளராக ஏன் அடையாளப்படுத்தவில்லை என்று புரியவில்லை. 

தன்  மகன் வேறொரு மதம் சார்ந்த பெண்ணை (ஜோதிகா)  காதலித்த போது  அதனைத் தடுக்க மேற்கொண்ட அவர் முயற்சிகள் அனைத்தும் இப்பொழுது கிராமங்களில் நடக்கும் ஆணவக் கொலைக்கு ஒப்பானவை. நன்கு படித்த பண்பாளர் காதலுக்கு இப்படி மூர்க்கததானமான எதிர்ப்பினை சாதி என்ற அடையாளத்தை தன் சந்ததி இழந்து விடக்கூடாது என்ற ஒரே ஒரு அற்ப காரணம் மட்டும் என்றால் அது மிகையில்லை. அந்த சாதி வெறியினை தன் மனைவிக்கும் புகுத்தியிருக்கின்றார் என்பதனை அவர் மனைவி கூறும் இந்த வாசகத்தில் இருந்து நன்கு புரிந்து கொள்ள முடியும்.''ஆரம்பத்துல ஜோவை சூர்யா விரும்புறதாவும், கல்யாணம் பண்ணிக்க சம்மதம் வேணும்னு கேட்டப்பவும் ரொம்பப் பயந்தேன். பல நாட்கள் அழுதுட்டே இருந்தேன்சாதி வெறி மட்டுமா , மிகப்பெரும் சுயநலப் பேர்வழி என்பதனை நடிகர் சங்க தேர்தல் சமயத்தில் நீங்களே உணந்திருந்திருக்க முடியும் .இது வரை எந்த ஒரு நடிகர் சங்க விழா மற்றும் தேர்தல்களில் எந்த ஒரு பங்களிப்பையும் செய்யாமல் இருந்த இவர் , தன் மகன் தேர்தலில் பொருளாளர் பதவிக்கு நின்றவுடன் எல்லா மேடையிலும் தோன்றி வாய்கிழிய பேசிய பேச்சினை தமிழ்நாடே பார்த்தது .மகன் அன்புமணியை  முன்னிறுத்த ராமதாஸ் செய்ததற்கும் சிவக்குமாரின் செயல்பாட்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. 


இதற்கும்ஒருபடி மேலே போய் சரத்குமாரைப் பற்றி இழிவாக அவர் மனைவி ராதிகாவிடமே கூறி இருக்கின்றார். உன் கணவனால் தான் உன் நிறுவனம் நட்டம் அடைந்ததா என்று நா கூசாமல் கேட்டிருக்கின்றார் இந்தப் பெரிய மனிதர். அதுவும் இவர் குடும்பத்திலேயே ஞானவேல் ராஜா என்னும் கருப்பை வெள்ளையாக்கும் உத்தம ராசாவினை அருகில் வைத்துக் கொண்டே இப்படி அடுத்தவர் குடும்பத்தை வம்பிழுதந்திருக்கின்றார்.

இதற்கு மேலும் இந்த நல்லவரைப் பற்றி எழுதினால் என்னுடைய கீ போர்டே என்னை அடிக்கும் என்பதால் நிழல் வில்லன் சத்யராஜ் குறித்து பார்ப்போம். பேச்சில் இத்தனை வெளிப்படையான ஒரே ஒரு மனிதர் சத்யராஜ் மட்டுமே , பணம் தான் குறிக்கோள் என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் ஒரு உணமையான உத்தம வில்லன். தன மகன் காதல் திருமணத்திற்கு தடையாக இல்லாமல் அவர்களை சேர்த்து வைத்து அழகு பார்த்தவர். தன் மகனை முன்னிறுத்த எந்த குறுக்கு வழிக்கும் செல்லாத ஒரு சுயமரியாதை போராளி.தன் சுய சாதி அடையாளத்தை முற்றிலும் துறந்து கருப்பு சட்டை அணிந்து துணிச்சலாக களத்தில் நிற்கும் ஒரு நிஜப் போராளி சத்யராஜ்.

சத்யராஜுக்கு சிவகுமாருக்கும்  உள்ள வித்தியாசம் என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ,அந்த அளவு தன கொள்கைகளால் சத்யராஜ் மிக உயரத்தில் இருக்கின்றார்.

நன்றி 
செங்கதிரோன் 

Monday, August 1, 2016

அச்சம் தவிர் நிகழ்ச்சியில் நடக்கும் அத்துமீறல்கள்


நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு வானளாவிய அதிகாரம் கொடுப்பது பல சமயங்களில் அந்த நிகழ்ச்சி மிக சிறப்பான ஒன்றாக அமையும் .அதே நேரத்தில் இந்த அதிகாரத்தினை தவறாகப் பயன்படுத்தும் போக்கினால் கனப்போரை முகம் சுளிக்க செய்வதாக மாறிவிடுவதும் உண்டு.காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் உள்ளூர் தமிழர் முதல் உலகத்தமிழர் வரை அனைவருக்கும் பிடித்தமானவராக மாறியவர் திவ்யதர்ஷினி.

அந்த நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்குப் பின் அச்சம் தவிர் என்ற ஒரு நிகச்சியினை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றார். தமிழில் ஒரு புதிய மற்றும் அரிய  முயற்சி என்றே சொல்லலாம் அந்தளவுக்கு ஆக்ஷ்ன் ,திரில் கலந்த நிகழ்ச்சி. தொலைக்காட்சி பிரபலங்கள் , சினிமா பிரபலங்கள் உள்ளடக்கிய  இரண்டு அணியாகப் பிரிந்து விளையாடும் விளையாட்டில் நடக்கும் போட்டியில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு முன்பு இந்நிகழ்ச்சி குறித்த முன்னோட்ட காணொளியைக் காணுங்கள்.


1.ஆண் பெண் இருவர் சேர்ந்து இருக்கும் நிகழ்ச்சி என்றாலே கிசுகிசுக்கு பஞ்சம் இருக்காது. அதே போல தான் இங்கும் , இருவரும்  சேர்ந்து செய்யும் விளையாட்டுகளில் நடக்கும் ஓட்டல் ,உரசல் பல விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கின்றது.இது குறித்து முன்பே ரசனை ஸ்ரீராம் அவர்கள் அச்சம் தவிர் வெட்கம் தவிர என்ற பெயரில் ஒரு பதிவினை எழுதி இருக்கின்றார்.அடுத்து பீப் ஷோ நிகழ்ச்சியிலும் அச்சம் தவிரைக் கலாய்த்து ஒரு காணொளி வெளியிட்டனர் ,அதனையும் கண்டுகளையுங்கள்.


2.இது தான் மிக முக்கிய பகுதி , பிரபலமானவுடன் தலையில் கொம்பு முளைத்து ஆணவத்தில் ஆடுவார்கள் ,அதே தான் இங்கும், தனக்குப் பிடித்தமானவர்களிடம் அவர்களின் தவறினை கண்டுகொள்ளாமல் இருப்பதும் , சின்ன நடிகர்கர்களிடம் (அதிக பிரபலமில்லாத ) அடாவடியாக ஹிட்லர் போல  நடந்து கொள்ளும் போக்கு நிகழ்ச்சியினைப் பார்ப்பவர்களுக்கு ,டிடியின் மேல் இருக்கும் அபிமானமும் மரியாதையினையும் குறைக்கின்றது.முன்பே காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் தினேஷை இதே போன்று தான் ஒரு அலட்சியப்போக்குடன் நடத்தினார்.

அவ்வாறு தினேஷ் போன்றே இங்கு அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் நபர் நாடோடிகள் பரணி. இயல்பிலேயே மிக எளிதில் உணர்ச்சிவயபப்டும் மனிதரான பரணியை சீண்டி விட்டு வம்புக்கு இழுப்பது , மற்ற்வர்களுக்கு காட்டும் சலுகையினை இவர்க்கு கண்ணபிக்காமல் அவமானப்படுத்துவது என்று தொடர்ந்து தனது அத்து மீறலினை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார். நிகழ்சியில் இவருடன் பங்கேற்கும் மற்றவர்கள் டிடியைப் பகைத்துக் கொள்ள விரும்பாததால் இந்த அநீதிகள் குறித்து வாய் திறக்காமல் கள்ள மௌனம் காக்கின்றனர்.


மிகப் பெரிய நடிகைகள் தொகுத்து வழங்கியபோது கூட இது போன்ற அத்து மீறல்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மீது நடக்கவில்லை.ஆனால் குறுகிய காலத்தில் புகழ் பெற்ற டிடிக்கு விஜய் தொலைக்காட்சியின் நிர்வாகம் கொடுக்கும் கட்டற்ற சுதந்திரம் தான் இது போன்று அத்து மீறல்களை செய்ய வைக்கின்றது. இந்த பூனைக்கு கூடிய சீக்கிரம் யாரவது மணி கட்டுவது நல்லது.

பல குறைகள் சொன்னாலும் தமிழில் மிக அறிய முயற்சி என்பதனால் நான் தொடர்ந்து பார்ப்பேன் , நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.

நன்றி
செங்கதிரோன்