Saturday, December 31, 2016

கியூப புரட்சி வரலாறு குறித்த படம்-The Cuba libre history


கியூபாவில் ஸ்பானிய ஆக்கிரமிப்பு தொடங்கி இன்றைய நிலை வரை குறித்த ஒரு ஆவணப்படத்தினை Netflixல் பார்ததேன். மொத்தம் எட்டு பாகங்கள். அமெரிக்காவில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ள கியூபாவினை ஒருவிளை நிலம் மற்றும் சுற்றுலாத்தலம் போல மட்டுமே அமெரிக்க பயன்படுத்த நினைத்தது. 


பொம்மை அதிபரை கியூபாவில் அமர்த்தி விட்டு  சர்க்கரை மற்றும் அரிசியினை அமெரிக்க இறக்குமதி செய்து கொள்ளையடித்துக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தான் செலவ்ந்தர் குடும்பத்தில் பிறந்த மற்றும் சட்டம் படித்த பிடல் காஸ்ட்ரோ நாட்டில் நடக்கும் இந்த அக்கிரமங்களை ஒழிக்க மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தினார். ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. 


இந்நிலையில் தான் மருத்துவப்படிப்பு முடித்து விட்டு மக்கள் சேவையில் ஈடுபட்டிருக்கும் சேகுவேராவை மெக்சிகோவில் பிடல் சந்திக்கின்றார். அதன் பின்னர் நடந்தவை அனைத்துமே வரலாறு. இருவரும் சேர்ந்து எடுத்த உடன்படிக்கையின் அடிப்படையில் கியூபா விடுதலைக்காக இணைந்து போராடுவது என முடிவு செய்தனர்.  கியூபாவின் ஒரு பகுதியில் பிடலும் மற்றோரு பகுதியில் சேகுவேராவும் தங்கள் படைகளுடன் கியூப அரசாங்கத்தினை எதிர்த்து கிளர்ச்சியினை உண்டாக்கி வெற்றி பெற்றனர்.

இவர்கள் இருவரும் அமைத்த அரசாங்கம் அமெரிக்க எதிரிப்பினாலேயே அவ்வளவு எளிதாக நிர்வகிக்க இயலவில்லை.  ரஷ்ய அரசாங்கம் அளித்த உதவி தான் கியூபா இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றது. கியூபாவின் தொழில் வளர்ச்சி மற்றும் ராணுவ கட்டமைப்பில் ரஷ்யாவுக்கு முக்கியப்பங்காற்றியது. சேகுவாரா சுதந்திர கியூபாவில் தொழில் துறை அமைச்சராக இருந்தார். அவர் செயல்பட்டவிதம் அளப்பரியது.களப்பணியில் நேரடியாக இறங்கி வேலை செய்து மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார். சேகுவேராவும் ,பிடலும் இணைந்து கரும்பு வெட்டுதல் பணியினை மக்களுக்கு அரசாங்கப்பதவியில் இருக்கும் போதே செய்தனர். மக்களுக்காக நான் என்ற சொல்லினை போலி அரசியல் தலைவர்கள் பயன்படுத்துகின்றார்கள் , ஆனால் அந்த சொற்றோடருக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்கள் பிடல்  மற்றும் மற்றும் சேகுவாரா.


இவ்வளவு கடுமையாக உழைத்தும் மக்கள் முழுமையாக நிம்மதியாக இல்லை.    முன்பே சொன்னது போல 90 மைல் தொலைவில் உள்ள கனவுதேசமான அமெரிக்காவில்  கூட்டம் கூட்டமாக  மக்கள் தஞ்சம் அடைந்தனர். அந்த நேரத்தில் மற்றோரு நிகழ்வும் நடந்தது. அமெரிக்கா கியூபாவினை தாக்க முற்பட ரஷியா கியூபாவில் சக்திவாய்ந்த அணுகுண்டுகளை அமைக்க அமெரிக்க அடிபணிந்தது. அமெரிக்காவும் துருக்கியில் ரஷ்யாவை தாக்க வைத்திருந்த அணுகுண்டினை அகற்ற சம்மதித்தது.

சேகுவாவரவின் மறைவு: கியூபாவில் குறிப்பிடத்தக்க பணிகள் ஆற்றிய பின்னர் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று அங்கு நடந்த புரட்சி போராட்டங்களில் பங்கெடுத்தார். அவர் பங்கெடுத்த புரட்சி போர்களில் பெற்ற வெற்றி அமெரிக்காவின் வயிற்றை கலக்க அவர்கள் களத்தில் இறங்கினர். ஏனென்றால் முதலாளித்துவ நாடான அமெரிக்காவுக்கு கம்யூனிச சிந்தனை மூன்றாம் உலக நாடுகளில் பரவுவதை விரும்பவில்லை. எனவே தங்கள் படைபலத்தை  இறக்கி சேகுவாராவை  பொலிவியாவில்  சிறைபிடித்து கடைசியாக சுட்டுக்கொன்றனர்.

கியூபாவில் பிடல் கல்வி மருத்துவம்  ஆகியவற்றை  இலவசமாக்கி லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். இருப்பினும் பொருளாதாரத்தினை முன்னேற்றம் செய்ய அவர் எடுத்த எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெறவில்லை. எனவே சுற்றுலாத்துறையை  விரிவுபடுத்தி அமெரிக்க டாலரினை கியூபாவின் அதிகார பணபரிமாற்றத்திற்கு கொண்டுவந்தார், கூடுதலாக வெனிசுலா உதவிக்கரம் நீட்டியது. வெனிசுலா அதிபர் சாவெஸ் அமெரிக்க ஏதிர்ப்பில் இருந்ததால் அவரும் பிடலுக்கு தங்கள் நாட்டின் எண்ணெய் வளத்தில பங்களித்து கியூபா பொருளாதாரம்  சரிவர இயங்க உதவி வருகின்றார்.

ஒபாமா அதிபரான பிறகு அமெரிக்க-கியூப உறவில் ஒரு புதிய அத்தியாயம் பிறந்தது. ஒபாமா பிடலின் தம்பியை சந்தித்து உரையாடிய பின்னர் 1962ல் மூடப்பட்ட அமெரிக்க தூதரகம் 2015ல் மீண்டும் திறக்கப்பட்டது.ஆனாலும் இது கென்னடி அதிபராக இருந்தபோதே நடந்திருக்க வேண்டிய ஒன்று , ஆமாம் பிரெஞ்ச் பத்த்ரிக்கையாளரிடம் அமெரிக்க-கியூப உறவினை புத்துப்பிக்கும் தன் ஆசையினை வெளிப்படுத்திய கென்னடி அது குறித்து பிடலிடம் கருத்து கேட்க சொன்னார். அவர் சொன்னபடி அந்த பத்திரிக்கையாளரும் பிடலை சந்தித்து இது குறித்து பேசிக் கொண்டிருக்கையில் எதிர்பாராதவிதமாக கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். 

 கியூபாவில் பிடலுக்கு எதிராக  கலகக்குரல்களும்  ஓங்கி ஒலிக்கத்தான் செய்கின்றது. அவர்கள் கியூபாவை ஒரு ஜனநாயக நாடாகவும் சுதந்திரமான பொருளாதார கொள்கை கொண்ட ஒரு நாடாகவும் பார்க்க விரும்புகின்றனர். அவர்கள் நினைப்பது நடக்குமா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஏனென்றால் பிடலின் தம்பி 2018 வரை ஆட்சி பொறுப்பில் இருப்பேன் என்று சொல்லி இருக்கின்றார் . அவருக்கு பிறகு வரும் தலைமையைப் பொறுத்து தான் கியூபாவின் எதிர்காலம் இருக்கும்.

மேற்சொன்னவைகள் தான் அண்ட் எட்டு பாகத்தில் கியூப அரசியல் குறித்த ஒரு அறிமுகம். 

நன்றி 

செங்கதிரோன் 



Friday, December 30, 2016

2016ல் எனக்கு பிடித்த படங்கள், பாடல்கள் , அரசியல் பிரபலங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்


2016ல் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் 

1. அப்பா 
2. விசாரணை
3.மனிதன்
4.ஜோக்கர்
5.ஒரு நாள் கூத்து
6.தர்மதுரை
7.தில்லுக்கு துட்டு
8.ஆண்டவன் கட்டளை
9.இறுதி சுற்று
10.பிச்சைக்காரன்


2016ல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் 

1. ஆண்டிப்பட்டி கனவாகாத்து( தர்மதுரை)
2. மாய நதி ( கபாலி)
3.கண்ணம்மா(றெக்க)
4.தமிழ்செல்வி(ரெமோ)
5.அக்கா பெத்த ஜக்காவண்டி ( மருது)
6. அடியே அழகே ( ஒரு நாள் கூத்து)
7.தள்ளிப்போகாதே (அ.எ. மடைமையடா)
8.கண்ணடிக்கல( மாவீரன் கிட்டு)
9.ஹே மாமா( சேதுபதி )
10.ஆலுமா டோலுமா (வேதாளம்)



2016ல் சிறப்பாக செயல்பட்ட அரசியல் பிரமுகர்கள்

1. வானதி சீனிவாசன் (பாஜக)
2. மா பா பாண்டியராஜன் (அதிமுக)
3. வழக்கறிஞர் பாலு (பாமக)
4. சிந்தன் (கம்யூனிஸ்ட்)
5. கனகராஜ் (கம்யூனிஸ்ட்)
6. தமிழன் பிரசன்னா(திமுக)
7.மதிமாறன்(திக)
8.பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்)
9.அர்ஜூன் சம்பத் (இந்து மக்கள் கட்சி)
10.ஆளூர் ஷாநவாஸ் ( விசிக)


2016ல் என்னை கவர்ந்த தொலைகாட்சி காட்சி பிரபலங்கள்( செய்தி பிரிவு)

1. குணசேகரன் (news18)
2.தியாக செம்மல் ( புதிய தலைமுறை)
3. ஆழி செந்தில்நாதன் 
4. பெருமாள்மணி
5.அய்யநாதன்
6.முத்துகுமார்
7. ரவீந்திரன் துரைசாமி

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 

நன்றி 
செங்கதிரோன்