Friday, March 24, 2017

புதிய சித்த மருத்துவ வரலாறு -உலக சித்த மருத்துவ தினம்

புதிய சித்த மருத்துவ வரலாறு :
இரண்டு கூறாக பிரிக்கலாம்- தெய்வ நம்பிக்கை சார்ந்தது, இலக்கியம் சார்ந்தது . இலக்கியம் சார்ந்தது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது . ஏனெனில் தொல்காப்பியம் மற்றும் திருக்குறளில் சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புகள் உள்ளன. இதிலிருந்து தெரியவருவது என்னவெனில் உலகின் பழமையான மருத்துவங்களில் சித்த மருத்துவமும் ஒன்று.

நன்றி
செங்கதிரோன்

Lion திரைப்படம் -ஊரை நோக்கி நம்மை ஓட வைக்கும் படம் ;உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். காக்கா முட்டை படத்தில் வருவது போல அண்ணன் தம்பிகள். பக்கத்தில் உள்ள பெரு நகரத்திற்கு செல்கையில் இளையவன் காணாமல் போகின்றான். அவனை ஆஸ்திரேலிய தம்பதிகள் தத்தெடுத்து கொள்கின்றனர். பருவ வயது எட்டியவுடன் தன் பால்ய காலம் நினைவுக்கு வர தன குடும்பத்தை தேட ஆர்மபிக்கினறான். மிக சிறிய வயதில் தொலைந்து விட்டதால் தன ஊர்ப் பெயர் கூட நினைவில் இல்லை. என்வே Google map ல் தேடுகின்றான்.


சிறப்பம்சங்கள் ;
1. ஏ .ஆர் .ரகுமான் இசை -ஊர்வசி ஊர்வசி பாடல் படத்தில் தமிழிலேயே வருகின்றது. காதல் காட்சியில் மிக பொருத்தமான இடத்தில் பயனப்டுத்தி இருக்கின்றார்கள்.
2. தேவ் படேல் -SLUM DOG MILLIONORE படத்தில் நடித்த அவரே தான் , மிக அருமையாக நடித்திருக்கின்றார்.

ஏன் இந்தப்படம் நம் ஊரை நோக்கி ஓட வைக்கும்?


வெளிநாட்டிலோ வெளிமாநிலத்திலோ வாழ்பவர்களுக்கு சொந்த ஊரைப் பற்றிய ஞாபகம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இந்தப்படத்திலும் கதாநாயகன் தன் ஊரினை கூகிளில் தேடும் ராப்பகலாக தேடுகையில் அந்த தவிப்பு நமக்கும் வந்து விடுகின்றது. நானும் படம் பார்த்த பின்னர் கூகுள் EARTH ல் என்னுடைய வீட்டினை தேடிக் கண்டு பிடித்து மகிழ்ந்தேன். நீங்களும் lion படம் பார்த்த பின்னர் அதனை செய்வீர்கள்.

வார இறுதியில் பார்த்து மகிழ சரியான படம் -Lion

நன்றி
செங்கதிரோன் 

Thursday, March 23, 2017

உலக சித்தர் தினம் கொண்டாட்டம் -1

ஏப்ரல்  14 ம் தேதி உலக சித்தர் தினம் கொண்டாடப்படுகின்ற்து அதை முன்னிட்டு சித்த மருத்துவம் குறித்த புதிய தகவல்கள் தினமும் இத்தளத்தில் இடம்பெறும். நீங்கள் இம்முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.


நன்றி

செங்கதிரோன் 

Wednesday, March 22, 2017

வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கத்தில் நரகம் : படிப்பகமாக திகழும் காபி கடைகள்

காப்பிக்கடைகள் என்றாலே அது ஆணும் பெண்ணும் டேட்டிங்கின் போது சந்திக்கும் இடமாகவே பெரும்பாலானோர் கருதுவது உண்டு. அந்தக் கூற்று சரியாக இருந்தாலும் , காபிக் கடைகளை தேர்வு சமயங்களில் படிப்பதற்கான முக்கிய இடமாக மாணவர்கள்  கருதுகின்றனர். நான் காபியின் மிகப் பெரும் ரசிகன் என்பதனால் ஸ்டார்பக்ஸ் தொடங்கி அனைத்து காபி கடைகளுக்கும் அடிக்கடி செல்வேன்.

வெளிநாடுகளில் டிசம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பல்கலைக்கழக தேர்வுகள் நடக்கும். முதல் முறையாக அது போன்றதொரு சமயத்தில் இரவு பத்து மணிக்கு காபி குடிக்க சென்றேன். உள்ளெ ஏதோ டியூஷன் சென்டருக்கு வந்தது போல் ஒரு உணர்வு. மாணவர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மிக தீவிரமாக படித்துக் கொண்டிருந்தனர். மிக ஆச்சரியமாக இருந்தது. இங்கே காபி கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் , இலவச wifi வசதி இருக்கும். அதனாலேயே இந்த இடத்தினை மாணவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.பகல் நேரங்களில் சென்றால் பெரும்பாலும் வயதானவர்கள் உட்கார்ந்திருப்பார்கள். அங்கேயும் நம்மூர் போல செய்தித் தாள்கள் வைத்திருப்பார்கள். அதில் வரும் குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடை தேடுவதில் தீவிரமாக இருப்பார்கள். 

குடியேறிகள் (immigrants ) காபி கடைகளை வார சந்ததிப்பிற்கான இடமாக வைத்திருப்பார்கள். அனைவரும் கூடி தங்கள் நாட்டு அரசியல் நிலை பற்றி விவாதிப்பார்கள். ஜெயமோகன் கூட கனடா சென்ற பொது அங்கு மிக பிரபலமான டிம் ஹார்ட்டன்ஸ் (Tim hortons ) காபி கடையில் நண்பர்களுடன் அமர்ந்து இலக்கியவிவாதத்தினை நடத்தியதனை தன்  பயணக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றார். நாங்களும் சல்லிக்கட்டு தீவிரமடைந்தபோது காப்பிக்கடையில் கூடி தங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொண்டோம்.


நம்மூரில் புதிதாக வந்திருக்கும் காபி கடைகளில்  படித்த நவநாகரிக காதல் ஜோடிகளைத்தான் அதிகம் பார்க்க முடிகின்றது. அதற்கு காபி விலையும் மிக முக்கியக் காரணம் . சாதாரணக்கடைகளில் ரூ .10 என்றால் இது போன்ற கடைகளில் ஆரம்ப விலையே நூறு ரூபாய், எனவே அனைவராலும் அங்கு செல்ல முடிவதில்லை. ஆனால் வெளிநாடுளில் அந்த ஊர் மதிப்பிற்கு பார்த்தால் காபியின் விலை மிக குறைவு தான். அது மட்டுமன்றி நம்முடைய விருப்பத்திற்கேற்ப அளவினை தேர்ந்தெடுக்க முடியும் உ-ம் (large -Medium -small :பெரிது-சிறிது-மிக சிறிது ).நாம் காபியினை காலை மாலை மட்டுமே குடிப்போம் ஆனால் இங்கே 24 மணிநேரமும் காபி குடிப்பார்கள். (நானும் அதே போன்று மாறிவிட்டேன்).  ஒரு காபியை நாம் 5 முதல் பத்து நிமிடத்தில் குடித்து விடுவோம் , ஆனால்  வெளிநாட்டில் குறைந்தது ஒரு மணி நேரம் ஒரே காபியை குடிப்பார்கள்.

மேற் சொன்ன செய்தியிலிருந்து காபி எப்படி வெளிநாட்டவரின் வாழ்க்கையில் மிக அதிகம் ஆக்கிரமித்திருக்கின்றது என்றும் , காபி கடைகளை நூலகம் போன்று படிப்பதற்கான முக்கிய இடமாக அவர்கள் கருத்துவதையும் தெரிந்து கொண்டிருப்பீர்கள் .

அடுத்து வேறு ஒரு சுவாரஸ்யமான ஒரு பதிவுடன் சந்திக்கிறேன் .

நன்றி 

Tuesday, March 21, 2017

வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கத்தில் நரகம்: முதல் முத்தத்தினை எதிர்கொள்ளல்திரையில் முத்தக்காட்சியை பார்த்தால் ஒருவித பரவசம் ஏற்படும். அதே காட்சியை நேரில் மிக அருகில் பார்த்தால் எப்படி இருக்கும் . அதுவும் வெளிநாட்டில் முத்தம் என்பதே நம்மூர் போல கன்னத்தில் கொடுப்பதல்ல , உதடோ உதடு பத்தித்து நீண்ட நேரம் கொடுப்பது தான் முத்தம். அந்தக்  காட்சிகளை முதன் முதலில் நேரில் கண்ட என்னுடைய அனுபவத்தின் தொகுப்பு தான் இந்த வீடியோ.

நன்றி
செங்கதிரோன்

Tuesday, March 7, 2017

யுவகிருஷ்ணா -சகலகலா வல்லவன்

பதிவர் , சினிமா விமர்சகர் , பத்திரிக்கை ஆசிரியர் (வண்ணத்திரை) , எழுத்தாளர்  போன்ற எண்ணற்ற முகங்கள் கொண்டவர் யுவகிருஷ்ணா, அதனால் தான் சகலகலா வல்லவன் என்று அவருக்குப் பிடித்த நடிகரான கமலின் படத் தலைப்பினையே அவருக்கான அடையாளமாக மாற்றி விட்டேன்.

ஒரு எழுத்தாளரின் குறிப்பின் மூலமாக தான் முகப்புத்தகத்த்தில் யுவாவை பின்பற்றத் தொடங்கினேன், கல்லூரியில் எனக்கு கிடைத்த திராவிட அரசியல் குறித்த பார்வைகளை இன்னும் மெருகேற்றிக் கொள்ள யுவாவின் பதிவுகள் மிகவும் உதவிகரமாக இருந்தன. ஏனென்றால் திராவிட அரசியல் வரலாற்று நிகழ்வுகளை மிக துல்லியமாக எழுதுவதால் நமக்கான புரிதல் மிக தெளிவாக இருக்கும்.அது மட்டுமன்றி அவர் அறிமுகப்படுத்தும் எழுத்தளார்கள் மற்றும் நூல்கள் குறித்து வாசிக்கத் தொடங்கினேன் . இது எனது வாசிப்பை பரவலாக்க செய்தது. மிக முக்கியமாக கே.என் .சிவராமன் , விமலாதித்த மாமல்லன் , விநாயக முருகன் , அதிஷா போன்ற பலர் குறித்து யுவாவின் மூலம் அறிய முடிந்தது.


ஒரு புறம் அரசியல் குறித்து எழுதினாலும் சினிமா குறித்த இவரது பதிவுகள் தான் பலருக்கும் பிடிக்கும். தன்னை ஷகிலா போன்ற கவர்ச்சி நாயகிகளின் ரசிகராக வெளிப்படியாக அறிவித்துக் கொண்ட ஒரே முகநூல் பிரபலம் இவர் மட்டுமே . தற்போது பூனம் பாஜ்வாவின் ரசிகராக மாறி அவ்வபோது அவரின் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை எல்லையற்ற மகிழ்ச்சிக்கு ஆளாக்கி வருகின்றார். முத்தாய்ப்பாக தற்போது வண்ணத்திரையின் ஆசிரியராக இருப்பதால்  பல சுவாரஸ்யமான செய்திகள் இடம் பெற்று  பத்திரிக்கை புத்தொளி பெற வழிவகைகள் செய்து வருகின்றார்.

இவரின் சினிமா விமர்சனங்களும் அதிரிபுதிரியாக இருக்கும் . எப்பொழுதுமே யுவாவின் விமர்சனங்கள் மிகுந்த மாறுபட்ட கோணத்தில் இருக்கும். சமீபத்தில் வந்த கிடாரி படம் தோல்வியினைத் தழுவியது . ஆனால் யுவா அந்தப் படம் குறித்த ஒரு மாறுபட்ட விமர்சனத்தைப் பதிவு செய்திருந்தார். எனவே அவரின் சினிமா விமர்சனங்கள் மூலம் பல்வேறு புதிய செய்திகளும் நமக்கு கிடைக்கும் .


அமர்த்தியா சென் argumentative Indian என்றொரு புத்தகம் எழுதினார் . ஆனால் யுவா ஒரு நடமாடும் argumentative Tamilian என்று சொல்லும் அளவுக்கு முக நூலில் நடக்கும் விவாதங்களில் எதிராளியை தலை தெறிக்க ஓட விடுவதில் கில்லாடி.  விஜயகாந்தின் தேமுதிக பற்றி  ஒரு புத்தகம் , நடிகைகளின் கதை , சரோஜாதேவி  போன்ற புத்தகங்கள்  எழுதி இருக்கின்றார்.


யுவாவின் ரசனையான முகம் தான் அனைவருக்கும் தெரியும் . அவரின் கடும் உழைப்பு, குடும்ப பின்னணி குறித்து அவருடைய குரு சிவராமன் பதிவு செய்த பிறகு யுவாவின் மேல் இன்னும் மதிப்பு கூடி விட்டது . சாதரண அடிப்படை தொழிலாளியாக தினமலரில் ஆர்மபித்த யுவா இன்று ஒரு பத்திரிக்கையின் ஆசிரியாராக மட்டுமன்றி எழுத்தாளர் , நூல் விமர்சகர் என்று பல்வேறு உயரங்களை அடைந்திருக்கின்றார்.


கமலஹாசன் மற்றும் கலைஞரின் தீவிர ரசிகர் . கொண்ட கொள்கையில் பிடிப்புடன் திகழும் லட்சியவாதி. 

யுவா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

நன்றி 
செங்கதிரோன்

குற்றம்-23 : உண்மைக் கதையா ?நம் தாத்தாக்கள் காலத்தில் பத்துக்கும் மிகாமல் குழைந்தை பெற்று சாதனை படைத்துக் கொண்டிருந்தனர். ஆனாலும் அவ்வாறு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் நெடு நாட்கள் வாழ்வதில் அதிக சிரமம் இருந்தது. ஆனால் தற்போதோ நிலையை  தலைகீழாக இருக்கின்றது.   ஒரே ஒரு குழந்தையினைப் பெற்றெடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகின்றது.


இந்த குழந்தையின்மை பிரச்சனையினை வைத்து பலரும் மக்களை ஏமாற்றி வருகின்றனர் . அவற்றில் முக்கியமாக ஆங்கில மருத்துவர்களில் சிலர் மக்களின் அறியாமையினை  பயன்படுத்தி பணம் சம்பாரிக்கின்றனர். 

குற்றம் -23 படத்தில் இயக்குனர் அறிவழகன் மிக துணிச்சலாக இந்த மோசடியை படமாக்கியுள்ளார். படத்தில் வரும் டாக்டர் தம்பதி போன்றே நிஜத்தில் சென்னையில் ஒரு டாக்டர் தம்பதி மிகப் பெரிய மருத்துவமனையினை அதிக விளமபரங்கள் செய்து நடத்தி வருகின்றனர். அவர்களை மனதில் வைத்து தான் இந்தக் கதையினை அறிவழகன் உருவாக்கி இருக்கின்றார் என்றே எண்ணத் தோன்றுகின்றது . மிக முக்கியமாக அதே டாக்டர் தம்பதி போன்ற உருவ ஒற்றுமை கொண்டவர்களை நடிக்க வைத்திருப்பது இதனை மேலும் உறுதி செய்வதாக இருக்கின்றது (இணையத்தில் ஆ என்ற எழுத்தில் தொடங்கும் குழந்தை மருத்துவமனையினை தேடினால் நீங்களும் கண்டு பிடித்து விடுவீர்கள்).

படம் குறித்த எனது பார்வை கீழே உள்ள காணொளியில் பாருங்கள்.நன்றி 
செங்கதிரோன்