Thursday, May 10, 2018

போயஸ் தோட்டத்தின் புதிய சசிகலா

தமிழ்நாட்டில் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறதோ இல்லையோ அரசியல் லாபி செய்பவர்களில் மிகப் பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கின்றது . கருணாநிதி தனக்கு வைத்திருந்த லாபி ஆட்களின் மூலம் தான் நீண்ட காலம் அரசியலில் நிலைத்து நிற்க முடிந்தது . ஜெயலலிதாவுக்கு சசிகலா என்ற ஒற்றை லாபி மூலம் தான் மிகப்பெரும் வெற்றிகளை தேர்தலில் பெறமுடிந்தது.

தற்பொழுது சசிகலா சிறையில் இருப்பதாலும், கருணாநிதி செயல்படாத நிலையில் இருப்பதாலும் அரசியல் லாபி என்ற ஒன்று இல்லாமல் இருக்கின்றது. விஜயகாந்துக்கு,பிரேமலதா மிகப்பெரிய லாபி செய்தார்  ,ஆனால் அது தோல்வியினை நோக்கித்தான் அந்த கட்சியை இட்டு சென்றது.

ஸ்டாலினுக்கும் தகுதி வாய்ந்த லாபி செய்யும் ஆட்கள் இல்லாததால் தான் அதிமுகவில் இருந்து ஒரே ஒரு எம்எல்ஏவைக்கூட தன் பக்கம் இழுக்க முடியவில்லை.

இப்படி ஒரு லாபி செய்யம் இடத்தினை ஆக்கிரமிக்க போயஸ் தோட்டத்திலிருந்தே ஒருவர் உதயமாகி இருக்கின்றார் , அவர் வேறு யாருமல்ல , ரஜினினியின் மனைவி லதா. லதா அவர்களின் கடந்த கால செயல்பாடுகளை கூர்ந்து கவனித்தவர்களுக்கு இது 100% உண்மை என்று தெரியும் . தமிழகத்தில் புலனாய்வு பத்திரிக்கைகள் சரிவர செய்தால் இந்த உண்மையினை மிக எளிதாக ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்.

ரஜினி திரைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவுற்றதை ஒட்டி நடைபெற்ற நிகழ்வினை லதா முன்னின்று நடத்திய போது ,அதனை முழுக்க வணிகமாக்கி ,ரஜினி ரசிகர்களின்  கோபத்துக்கு உள்ளானார் . லதாவுக்கு ,ரஜினியை முன்னிறுத்தி எவ்வாறெல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமோ அதனை செய்வதையே நோக்கமாக கொண்டிருப்பவர்.


இப்பொழுது ரஜினி அரசியலுக்கு வருவதற்காக ஏற்படுத்தபப்ட்டிருக்கும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகளை பணம் பெற்றுக் கொண்டே நியமனம் செய்யப்படுவதாக ஆங்காகே புகார்கள் வருகின்றன. ராகவேந்திரா மண்டபத்தில் நடக்கும் ரஜினி மன்ற நிகழ்வுகளில் லதாவின் ஆலோசனையுடன் தான் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகின்றது. விமர்சனங்களை தவிர்ப்பதற்காகவே அவருடைய புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாவதில்லை.

போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா சசிகலா இருவரும் ஊழல் பணத்தில் திளைத்ததைப் பார்த்து லதாவுக்கு அது போன்றதொரு ஆசை ஏற்பட்டிருக்கலாம். நம் கணவர் ரஜினி முதல்வரானால் தமிழகம் முழுக்க தங்கள் சாம்ராஜ்ஜியத்தினை விரிவடைய செய்யலாம் என்று எண்ணியே  லதா அவர்கள் வயதான காலத்திலும் ரஜினியை அரசியலுக்குள் திணிக்க முயற்சிக்கிறார்.

போயஸ் தோட்டத்தின் இந்த புதிய சசிகலாவான ,லதா ரஜினிகாந்தின் திட்டம் வெற்றிபெறுமா , தோல்வி அடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நன்றி 
செங்கதிரோன்