Wednesday, August 29, 2018

பப்பாளி எழுத்தாளர்:

பொய் சித்தர்கள் என்ற தலைப்பில் சரவணன் சந்திரன் மின்னம்பலத்தில் தொடர் கட்டுரைகளை எழுதி குவித்திருக்கின்றார் . உலகின் எந்த ஒன்றைப்பற்றியும் 5000 வார்த்தைகளைத் தாண்டியும் எழுதும் வல்லமை பெற்றவர் சித்த மருத்துவம் குறித்து எழுதியதில் வியப்பில்லை.

அந்தக்கட்டுரைகளில் இருக்கும் செய்திகள் அனைத்துமே அரதப்பழசானாவை , எந்த விதமான தகுந்த உதாரணங்கள் அற்ற மேம்போக்காக எழுத்தப்பட்ட அறிக்கை .

நவீன மருத்துவம் குறித்து கூறப்படும் குற்றசாட்டுக்களுமே இன்றும் ஒரு கற்பனையுடனே மட்டுமே எழுதப்படுகின்றது. துறை சார்ந்தவர்கள் கொடுக்கும் வாக்குமூலங்கள் தான் உண்மைக்கு மிக அருகில் இருக்கும் . உலகம் முழுக்க மருத்துவ துறைகளில் நடக்கும் பல்வேறு மோசடிகள் மருத்துவர்களுக்கு நன்கு தெரியும் . சித்த மருத்துவ மருந்து தயாரிப்பு , விற்பனை , நோயாளிகளுக்கு தேவைக்கு அதிமான மருந்துகளை அவர்களிடம் திணித்தல் போன்றவை நான் சில காலம் மருத்துவராக பணி செய்தபோது அறிந்து கொண்ட தில்லுமுல்லுகள்.

இன்றைய நவீன யுகத்திற்கு தன்னை உட்படுத்திக் கொளவதற்காக சித்த மருத்துவத்தில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன. சரவணன் சந்திரன் போன்ற எழுத்தாளர்கள் இது குறித்தது தான் வெகுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். 

பப்பாளி எழுத்தாளர் என்று குறிப்பிடுவதற்கு காரணம் , அவருடைய நாவலில் இது பற்றிய குறிப்புகள் வரும் , அது மட்டுமன்றி பப்பாளி இலை வைத்து சாண்டிவிச் சாப்பிடும் பழக்கமுடையவர்.

எழுத்தாளர்கள் மருத்துவத்துறை குறித்து ஆர்வமாக இருத்தல் நல்லதே , ஆனால் அது அரைகுறையாக இருந்தால் ஆபத்தானது. 

இறுதியாக ஒரே வரியில் சொல்வதானால் சித்தர்கள் என்றுமே பொய் கிடையாது .

நன்றி 
செங்கதிரோன் 

Wednesday, August 22, 2018

பேலியோவும் சித்த மருத்துவமும்;

அறிவியல் அடிப்படையில் அமைந்தவேயே சிறந்தது என்று ஆதிமனிதன் உணவு முறையான பேலியோவும் தமிழர்களின் வாழ்வியல் மருத்துவ முறையான சித்த மருத்துவமும் மக்களுக்கு சிறந்த தீர்வினை அளித்துக் கொண்டிருக்கின்றன .

சித்த மருத்துவமும் பேலியாவும் அறிவியல் அடிப்படையில் நிரூபிக்க இயலாமுடியாவிட்டாலும் மருத்துவ அடிப்படையில் நிரூபிக்கப்பட்டு வருகின்றது . 

அறிவியல் அடிப்படையில் நிரூபித்தல் என்பது ஒரு பொருளை அதன் தண்மை குறித்து ஆய்ந்து பின்னர் ஆய்வக சோதனைகள் செய்து இறுதியாக விலங்குகளுக்கு கொடுத்து பரிசோதனை செய்த பின்னர் மனிதர்களுக்கு பயன்படுத்துதல். 

ஆனால் மருத்துவ அடிப்படியில் நிரூபித்தல் என்பது ஆபத்தற்ற மூலிகை அல்லது உண்வுப்பொருட்களை நோயாளிகளுக்கு கொடுத்து அதனால் ஏற்படும் விளைவுகள் அடிப்படையில் அது பயன்பாட்டுக்கு உகந்தது என்று அறிந்து கொள்வது.


மிக சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற பேலியோ மருத்துவ மாநாட்டில் ஒரு புகழ்பெற்ற மருத்துவர் அளித்த வாக்குமூலம் என்னவென்றால், if clinically proven , why we need to worry about scientific validation- அதாவது மருத்துவ முறையில் நிரூபிக்கப்பட்டு விட்டால் அறிவியல் மமுறையில் நிரூபிக்க ஏன் போராட வேண்டும்இதே கருத்தினை தான் பட்டம் பெற்ற சித்த மருத்துவர்களும் பல காலமாக கூறி வருகின்றனர்.

பேலியோவுக்கு ஏற்பட்டிருக்கும் வரவேற்புக்கு மிக முக்கியக் காரணம் அது மக்கள் மொழியில் பேசபப்டுவதும் அந்தந்த மக்களுக்கு தகுந்தவாறு உணவுமுறைகளை மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய வகையில் மிக எளிதாக இருப்பதும் .

அமெரிக்காவில் இருந்து கொண்டே பேலியோ குறித்து ஒரு புரட்சி ஏற்படுத்திய நியாண்டர் செல்வன் ஆங்கிலத்தில் பீட்டர் விடாமல் அனைவருக்கும் புரியக்கூடிய எளிய தமிழில் முன்னெடுத்தால் தான் லட்சக்கணக்கான மக்களை மிக எளிதா சென்றடைய முடிந்தது  
அறிவியல் முன்னேற்றம்  உச்சியில் இருக்கும் இச்சமயத்தில் உலகில் நிருபிக்கப்பட்ட மருத்துவம்நிரூபிக்கப்படாத மருத்துவ முறைகளுக்கிடையியேயான வாதமுமும் அதிகரித்து வருகின்றது.


அறிவியல் ஆய்வுகளுமே பேலியோ மற்றும் சித்த மருத்துவம் குறித்து மிக குறைவாகவே நடைபெற்று இருக்கின்றன . ஏனென்றால் நவீன மருத்துவம் குறித்த ஆய்வுகளுக்கு பயன்படுத்தும் பணத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கே மாற்று மருத்துவ முறைகளுக்கும் பேலியாவுக்கும் ஒதுக்கப்படுகின்றத.

இறுதியாக நவீன மருத்துவத்தின் அவசியம் என்பது நோய் வந்த பின்னர் தான்பேலியோ சித்த மருத்துவம் போன்ற வாழ்வியல் முறைகள் நோய் வாராமல் தடுக்க பயன்படும். 

நன்றி 
செங்கதிரோன்