Friday, May 8, 2015

செனம் சேராத நாய் தெரியுமா உங்களுக்கு

அல்சேஷன் நாய், ஹட்ச் நாய் கேள்விபட்டிருக்கோம் அது என்ன செனம்  சேராத நாய் அது எங்க கிடைக்கும் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. குழந்தையை கவனத்துடன் வளர்க்காவிடில் அந்தக் குழந்தை தான் பிற்காலத்தில் செனம்  சேராத நாயாக மாறி விடும். அது எப்படி மாறுகின்றது என்பதனை சமூக மற்றும் அறிவியல் நோக்கிலும் அதனைத் தடுப்பதற்கான எளிய வழிகளையும் எடுத்து சொல்லவே இந்தப் பதிவு .


செனம்  சேராத நாய் என்பதன் அர்த்தம் மக்களுடன் சரிவரப் பழகாமல் எப்பொழுதும் தனித்தே இருப்பவனை குறிப்பிடும் சொல் தான் செனம் சேராத நாய்.இது எப்படி உருவாகின்றது முதலில் குழந்தை வளர்ப்பில் உள்ள குறைபாடு அதாவது தந்தை தாய் இருவரும் பணி செய்பவர்களாக இருந்தாலோ , பெற்றோர் வீட்டிலேயே இருந்தாலும் குழந்தையின் மேல் அதிக அக்கறை இல்லாமல் இருந்தாலும் இது ஏற்பட வாய்ப்பு உண்டு.

இவ்வாறு அதிக கவனிப்பில்லாமல் வளர்க்கப்பட்ட குழந்தைகள் பெரியவர்களானதும் அவர்கள் பள்ளியிலோ கல்லூரியிலோ மற்றும் பணி  செய்யும் இடங்களிலோ யாரிடமும் அதிகம் பேசாமல் தனித்தே இருப்பர். இந்தத் தனிமை அவர்களுக்கு புற உலகில் என்ன நடக்கின்றது என்பதனைப் பற்றி எந்தப் புரிதல் இல்லாமல் வாழ்வார்கள். சக மனிதர்களுடன் பழகாத காரணத்தினால் இவர்களைப் பற்றிய தவறான கண்ணோட்டமும் சமூகத்தில்  ஏற்பட வாய்ப்பு உண்டு.


ஆனால்  இந்த தனிமை  சில நேரங்களில் நல்ல விளைவுகளையும் உண்டாக்கும் . இதற்கு மிக முக்கிய உதாரணம் , கணித மேதை ராமனுஜம் இவர் தனிமையிலே அதிக நேரம் இருப்பார் ,இந்தத் தனிமையினை கணிதத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உண்டாக்க பயன் படுத்திக் கொண்டார். மேலும் ஞானிகளும் முனிவர்களும் நீண்ட நேரம் தனிமையில் தியானம் செய்வர். இதனால் தன்னைப் பற்றி முற்றும் உணர்ந்த மகான்களாக உருவாகின்றனர். இந்த பிரிவில் கௌதம புத்தரைக் கூட இணைத்துக் கொள்ளலாம். 


மேலே தனிமை நோயின் நன்மை தீமைகளை குறித்து பார்த்தோம். இவற்றில் நன்மை பயக்கும் விடயங்கள் மிக அரிதாகவே நடக்கக் கூடிய ஒன்று ,எனவே அதனை முழுதும் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. இந்த தனிமையினை மருத்துவர்கள் ஒரு நோயாகவே பார்க்கின்றனர்.Isolation sickness என்ற  நோயானது மூளையில் பல்வேறு மாற்றங்களை உண்டு பண்ணும்.இது போன்ற தனிமை விரும்பிகள் பல்வேறு தீயப் பழக்கங்களுக்கு வெகு எளிதாக அடிமையாவார்கள் என்றும் இதனால் பல நோய்கள் உணடாகும்  என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் எலிகளைக் கொண்டு சில பரிசோதனைகளை செய்தனர். பிறந்த உடனேயே எலிகளை அதன் தாயிடமிருந்து பிரித்து (Maternal separation)  விட்ட பின்னர் அவற்றின்  நடவடிக்கைகளை  (behaviour ) பருவ வயதினை (Adult)எட்டிய  பின்னர் பரிசோதித்து பார்த்ததில் இவை மன அழுத்தத்துடனும் , மிக சோர்வாகவும் காணப்பட்டன.இவைகளின் மூளையினை பரிசோத்து பார்த்ததில் தனிமையில் வளர்க்கப்பட்ட எலிகளில் oligodendrocye என்னும் மூளை செல்களுக்கு உதவி புரியும் இந்த வகையான செல்களின் வளர்ச்சி மிக குறைவாகக் காணப்பட்டன.குறிப்பாக இந்த செல்களானது நாம் சமூகத்துடன்  இயல்பாக இருக்க உதவி பபுரியும் முன் மூளையில் (pre frontal cortex ) பகுதியில் இவற்றின் நீளம் குறைவாகக் காணப்பட்டது.
மேலே உள்ள புகைப்படம் குழந்தை தாயினிடமிருந்து பிரிந்து வளவர்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்குகின்றது 


மேற்கண்ட ஆராய்ச்சி முடிவுகள் நமக்கு உணர்த்துவது குழந்தை வளர்ப்பில் நாம் அக்கறை  இன்றி இருப்பின் எதிர் காலத்தில் அந்தக் குழந்தை எதிர் காலம் இருண்டதாகவே அமையும். தலைப்பில்  சொன்னது போல அனைவரும் அக்குழந்தையினை செனம் சேராத நாய் என்று அழைக்கும் நிலை உண்டாகும்.

நன்றி 
செங்கதிரோன்