பவர் பாண்டி படம் தனுஷ் நடிகரிலிந்து இயக்குனராக உருவாகியிருக்கும்
படம். தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை சென்னையில் உள்ள சங்கம் தீயேட்டரில் பார்த்து விட்டு நண்பர்களுடன் ஆட்டோவில் வந்து கொண்டுயிருந்தேன். அப்போது படம் பற்றி பேசி கொண்டிருதோம். அனைவரும் தனுஷின் தோற்றம் பற்றியும் நடிப்பு பற்றியும் விமர்சனம் செய்து கிண்டல் அடித்துக்கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் நான் மட்டும் அவர்களிடம் உறுதியாக சொன்னேன் தனுஷிற்கு சினிமாவில் நல்ல எதிர் காலம் காத்துக்கொண்டிருக்கிறது
என்று. அப்போது ஒருவரை தோற்றத்தை வைத்து கணிப்பதைவிட திறமையை வைத்து கணிப்பதே சாலச்சிறந்தது என்று என்னுடைய உள்மனதிற்கு தோன்றியது. அன்று எனக்கு தோன்றியது இன்று காலப்போக்கில் நடந்தே விட்டது. கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் வரை நடித்து விட்டார். நாட்டின் உயரிய விருதான தேசிய விருதையும் நடிப்புக்காக பெற்றுவிட்டார்.
நடிப்பில் முத்திரை பதித்து விட்ட இவர் பின்னர் பாடலாசிரியராக, பாடகராக மற்றும் இசையமைப்பாளராக வேறு பல அவதாரம் எடுத்தார். அது மட்டும் இல்லாமல் சில புதிய நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளரை தமிழ் சினிமா உலகிற்கு உருவாக்கி அறிமுகம் செய்து வைத்தார்.
முத்தாய்ப்பாக
இயக்குனர் என்ற படைப்பாளி அவதாரத்தையும் இறுதியாக எடுத்துவிட்டார்.
நான் தனுஷ் இயக்கப்போகிறார்
என்ற செய்தி வந்தவுடன் செல்வராகவன் பாணியில் தான் படம் இருக்கும் என எண்ணினேன். ஆனால் அதற்கு மாறாக முதியவர்களின் மனதில் எஞ்சியிருக்கும் காதலை வெளிப்படுத்தும்
படத்தை எடுப்பார் என்று நினைக்கவில்லை.
ராஜ்கிரன்:
ஒரு சண்டை பயிற்சியாளராக வரும் ராஜ்கிரணுக்கு ஒரு சண்டை பயிற்சியாளருக்கு உண்டான முரட்டுத்தனம் இல்லாமல் அவர் ஏதோ எல்லோருக்கும் ஆசீர்வாதம்
அளிக்கும் பாதிரியார் போல் பார்க்கத் தோன்றுகின்றது. அதே நேரத்தில் ரேவதியுடன சந்திப்பின் போது ஒரு டீன் ஏஜ் இளைஞனின் மனதினை மிக தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.
படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கான சிறப்பான பங்கினை ஆற்றியிருந்தார்கள்.
கலைஞனிலிருந்து
படைப்பாளியாக மாறியிருக்கிம் தனுஷிற்கு
வாழ்த்துக்கள்..!!
ஏனோ தனுஷ் வெற்றியடையும் போது நானே அந்த வெற்றியை அடைந்தது போன்ற உணர்வு எனக்கு மட்டும் தான் ஏற்படுகின்றதா என தெரியவில்லை.
படம் குறித்த சிறிய வீடியோ விமர்சனம்
நன்றி
செங்கதிரோன்
நன்றி
செங்கதிரோன்