ஏழாம் அறிவு ஏற்படுத்திய தாக்கத்தினால் பதிவர் `கம்யூனிச` கலையரசன் சித்தர் ஆராய்ச்சியின் பக்கம் தன கவனத்தை திசை திருப்பி தொடர்ந்து தவறான தகவல்களை எழுதி வருகின்றார். அவரின் சமீபத்திய பதிவுகளான அகத்தியர்,திருமூலர் மற்றும் போகர் போன்றோர் தமிழர்களே அல்ல என்றும் குறிப்பாக அகத்தியர் ஒரு சீனர் என்பதற்கு அவர் குறிப்பிடும் மிக முக்கிய உதாரணம் அவர் குள்ளமான உருவ அமைப்பினைக் கொண்டவர் என்பதாகும்.இந்த ஒரு சின்ன உதாரணம் போதும் இவரின் கட்டுரைகள் எவ்வளவு பொய்யான செய்திகளை கொண்டு எழுதப் பட்டிருக்கின்றது என்றும் மிகத் தெளிவாகவே விளங்கும்.
இதற்கு மிகச் சரியான விளக்கம் திருவள்ளுவர் படம்.உலகில் யாருக்குமே திருவள்ளுவர் எப்படி இருந்திருப்பார் என தெரியாது அப்படி இருக்கையில் மிகக் கற்பனையாக வரையப் பட்ட உருவமே தற்பொழுது நம்மிடம் இருக்கும் திருவள்ளுவர் படம். அடுத்து கண்ணகி சிலை ,இதற்கான உருவ அமைப்பும் ஒரு நடிகையினை முன் மாதிரியாகக் கொண்டே உருவாக்கப் பட்டது. இதைப் போன்றே தான் சித்தர்களின் படங்களும், கற்பனையாக வரையப்பட்ட அந்தப் படங்களைக் கொண்டு அவர் சீனர் என்று செய்யும் வாதம் அறிவு முதிர்ச்சி அற்ற வீணர்களின் வேலையாகவேக் கருத வேண்டும். எனினும் இதைப் போன்ற தவறான பரப்புரைகளை வேரறுக்க சித்த மருத்துவத்தின் தொன்மையினையும் அவற்றின் தனிதன்மையினையும் அனைவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு எளிய முறையில் உரிய விளக்கங்களுடன் பதிவு செய்து இருக்கின்றேன்.
அடுத்ததாக நோய் கணிக்கும் முறை : பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே நோய்களை வகை படுத்தியும் அவைகளை கணிக்கும் முறைகுறித்தும் எழுதியவர்கள் சித்தர்கள் மட்டுமாகவே இருக்க முடியும். உதாரணத்திற்கு சுரம் (fever ) 64 வகையாகப் பிரித்து அவை ஒவ்வொன்றுக்கும் எப்படிப்பட்ட குறிகுணங்கள் இருக்கும் என்றும் எழுதி வைத்திருக்கின்றனர். உடம்பில் தோன்றும் மொத்த நோய்களின் எண்ணிக்கை 4334 என்று உறுதி பட கூறிய மருத்துவம் உலகிலேயே சித்த மருத்துவம் மட்டும்தான். இப்படி நோய்களை வகைபடுத்திய்தோடு மட்டுமின்றி எந்த வகையான் நோய் மருந்தினால் தீர்க்க முடியும் எந்த வகையான நோய் மருந்தினாலும் குணப் படுத்தவே முடியாது என்றும் குறிப்பிட்டு பழங்காலத்திலேயே மருத்துவ இயலின் எல்லையினையும் ஒளிவு மறைவின்றி உலகுக்கு சொன்ன மருத்துவம் சித்த மருத்வமாக மட்டுமே இருக்க முடியும்.
இவை மட்டுமல்லாமல் regenrative medicine என்று சொல்லப்படும் நீண்ட நாள் நோய் நொடியின்றி வாழும் முறையான காய கல்ப சிகிச்சையினை பல நூற்றாண்டுகளுக்கும் முன்பே அறிமுகப்படுத்தியப் பெருமை சித்தர்களையே சேரும். Massage therapy என்பதனை தொக்கணம்(தோல் +அணம்-தோலினை பொருந்திச் செய்யும் முறை) என்ற பெயர் கொண்டு அவற்றில் பல்வேறு முறைகளை அறிமுகப்படுத்தி நோய்க்குத்த் தகுந்தாற்போல் தொக்கணம் செய்யும் முறையினையும் தெளிவுபட எடுத்துக் கூறியவர்கள் சித்தர்களே ஆகும். ஆனால் ஆயுர்வேத மற்றும் இதர மருத்துவ முறைகளில் இதைப் போன்றதொரு தொக்கனத்தினை வகைபடுத்தி செய்யும் முறை இல்லவே இல்லை.இது போன்ற சான்றுகளின் மூலம் சித்தா மருத்துவம் எவ்வவளவு தனித்தனிமை கொண்டது என்பதனை புரிந்து கொள்ளலாம்.
மேலே உள்ள செய்திகளின் மூலம் சித்த மருத்துவம் தமிழரின் தனித்தன்மை வாய்ந்த மருத்துவம் மட்டுமின்றி ,அனைத்து சித்தர்களுமே தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் எனபதனையும் விளங்கி கொள்ளலாம்.பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி ஒன்று இருந்ததாகவும் அங்கு வந்து பல்வேறு நாட்டு அறிஞர்கள் சேர்ந்து சித்த மருத்துவத்தை உருவாக்கி இருக்கலாம் என்ற கலையரசனின் முன்முடிவு மிகவும் தவறுதலானதாகும் .இதைப் போன்றதொரு செய்தி எங்குமே பதிவு செய்யப் படவில்லை.மாறாக குறைந்து 15 வருடங்களுக்கு முன்பு ஒரு அரசு சித்த மருத்துவக் கல்லூரி பழனியில் இருந்தது.அதனயே சென்னைக்கு இடமாற்றி அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா மருத்துவமனை வளாகத்தில் அமைத்தனர்.
எனது அடுத்தப் பதிவில் மருந்து தயாரிக்கும் முறை பற்றியும் குறிப்பாக தங்க பற்பம் குறித்த தவறான பரப்புரை பற்றிய உண்மைகளையும் பதிவிட இருக்கின்றேன்.