பலபேருக்கு தகுதியும் திறமையும் அதிகம் குவிந்து இருந்தாலும் பணம் மட்டும் அவர்களிடம் குவியாது, மற்றொரு புறம் ஒரு சிலரிடம் எந்த வித் திறமையும் தகுதியும் இல்லாமல் பணம் ஏகப்பட்ட அளவில் குவிந்து கிடக்கும். இதற்கான காரணம் தத்துவார்த்த ரீதியாகவும் அனுபவ ரீதியாகவும் பார்த்தால் ஏதேனும் ஒரு அதிர்ஷ்டமோ அல்லது அவர்களுக்குள் ஒளிந்து இருக்கும் (Hidden talent) ஒரு குறிப்பிட்ட திறமை கண்டுபிடிக்கப்பட்டு அதனால் மிகப் பெரிய புகழை அடைவார்கள்.
முன்னதற்கான உதாரணம், டெல்லிக்கு அருக்கமையில் உள்ள குர்கானில் தொழிற்சாலை அமைப்பதற்காக இடம் கையகப்படுத்தும்போது மூன்று சகோதரர்கள் ஒரு குடிசையில் ரோட்டோரம் வாழ்ந்து கொண்டிருந்தனர்.அவர்கள் இடம் தொழிற்சாலை எடுத்தவுடன் கிடைத்த தொகை 15 கோடி. அந்த சகோதரர்களில் ஒருவர் அரசு நிறுவனத்தில் ஒரு கடை நிலை ஊழியர். கோடீஸ்வரரான பின்னும் இன்றும் அதே வேலையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றார், அந்த நிறுவனத்தின் உயரதிகாரியின் காரை விட இந்த கடை நிலை ஊழியனின் கார் அதிக விலை கொண்டந்து. அந்த வளாகமே அவரைப் பார்த்து வியக்கினறது. ஏனெனில் பணக்காரவதற்கு முன் அவரின் தோற்றமும் நடைவடிக்கையும் நன்கு அறிந்த அந்த மக்களால் அப்படி ஒரு அதிர்ஷ்டம் நம் வாழ்க்கையிலும் நடக்காதா என்று எண்ணி பெருமூச்சு விடுகின்றனர்.
இரண்டாவதற்கான உதாரணம் நிறைய பேர் இருந்தாலும் சமீபத்தில் வெற்றி பெற்ற சிவகார்த்திகேயனைக் குறிப்பிட்டு சொல்லலாம். பொறியியல் படித்து விட்டு தன்னுடைய மிமிக்ரி திறமையில் அபார நம்பிக்கைக் கொண்டு அதன் மூலம் படிப்படியாக முன்னேறி இன்று முன்னணி நடிகர்களுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த இரண்டாம் வகையை சேர்ந்தவர் தான் லில் வைன் (Lil Wayne ).
தனது 8 வயதிலே ராப் பாடல் எழுதத் தொடங்கி இன்று ராப் இசை உலகின் முன்னணிப் பாடகராக மட்டுமன்றி, ராப் உலகின் பணக்காரர்களில் முதலிடத்தினைப் பிடித்திருக்கின்றார்.(ஆதாரம்:போர்ப்ஸ் பத்திரிக்கை).அவரின் தோற்றத்திற்கும் அவர் அடைந்திருக்கும் இந்த உயரத்திற்கும் எந்த வித தொடர்பும் இருக்காது. உலகம் முழுக்க ராப் இசை ரசிகர்களுக்கு மிகப் பிடித்தமானவர்களில் இவருக்கு முக்கிய இடம் இருக்கின்றனது. அதுவும் அமரிக்க அதிபர் ஒபாமா தன்னுடைய ஐபாடில் லில் வேன் பாடல்கள் இருக்கின்றது எனவும் தனக்கு அவர் பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்று வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றார்.
இவர் காதில் மாடிக் கொண்டிருக்கும் head phone ,வைரம் பதிக்கப் பட்டது, இதன் விலை அதிகம் இல்லை ஜென்டிலமேன் ஒரு மில்லியன் டாலர் தான்.(இந்திய ரூபாயில் 5கோடி )
ஐந்தடிக்கும் குறைவான உஅரம், பற்களில் வித்தியாசமான கறை , சுருண்ட முடி என மாறுப்பட தோற்றம் கொண்டிருந்தாலும் பாடல்கள் மிகப் பிரபலம்.கானாப் பாடல்கள் ஒரு சிலருக்கு சுத்தமாகப் பிடிக்கவே பிடிக்காது . அப்படிப்பட்டவர்களால்,லில் வேன் ஏற்றுக் கொள்வதில் மிக சிரமமாக இருக்கும். எனக்கு எல்லா வகையான இசையும் பிடிக்கும், இதே போன்ற ரசனை கொண்டவர்கள் நிச்சயம் லில் வேனை மிகவும் ரசிப்பார்கள்.
God bless Amerika , Mirror , How to love ஆகிய மூன்று பாடல்களும் நான் அடிக்கடி கேட்கும் பாடல்கள், இவற்றில் how to love ராப் இசையில் தாயின் வலியை கலந்து மிக அற்புதமாக எடுக்கப்பட்ட பாடல்.God bless Amerika பாடலின் உங்கள் குழாய் காணொளியைப் பாருங்கள்.
இசை உலகின் பொறுக்கிகளில் இதுவரை ஆப்பிரிக்க அமிர்க்கர்களை (Afro -Americans ) மட்டும் குறிப்பிட்டிருக்கின்றேன், வெள்ளை அமெரிக்கர்களும் ராப் உலகில் இருக்கின்றனர், இவர்களில் மிக பிரபலமான எமினம் குறித்து தான் அடுத்த இசை உலகின் பொறுக்கிகள் வரிசயில் பார்க்க இருக்கின்றோம், மேலும் எமினம் பாடல் குறித்து அவருடைய அம்மாவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எது ஏன் என்று விரிவாக பார்ப்போம்.