Thursday, April 16, 2020

snow வியாபாரம்:

தமிழில் இதுவரை மிக மிக சிலர் மட்டுமே இதைப் பற்றி எழுதி இருப்பார்கள். இந்தியாவின் காஷ்மீர் மற்றும் வெளிநாடுகளில் பல் இடங்களில் குளிர்காலங்களில் பனிப்பொழிவு ஏற்படும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த பனிப்பொழிவை நம்பி மிகப்பெரும் வியாபாரம் நடப்பது அனைவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. எனவே அது குறித்து ஒரு சிறிய அறிமுகம்.


1.மக்கள் பனிபொழிவு ஆரம்பிக்கும் ஒரு மாதம் முன்பே ஜெர்கின், பூட்ஸ் , கையுறை போன்றவற்றை வாங்க ஆரம்பித்து விடுவார்கள்.

2. பனிபொழிவு (snowfall) காலங்களில் அனைத்து வீடுகளுக்கும் முன் வாசலில் ஒரு வெள்ளை நிற பிளாஸ்டிக்கினால் பந்தல் போல அமைத்து விடுவார்கள் . அப்படி அமைக்கவில்லை என்றால் வீட்டிற்குள்ளேயே நுழையவோ அல்லது வெளியே வர முடியாத அளவுக்கு snow வீட்டு வாசலை முழ்கடித்து விடும்.


3. கார் போன்ற அனைத்து வாகனங்களும் குளிர் கால சக்கரம் (winter tyre ) மாற்றுவது கட்டாயம். எனவே அனைத்து மெக்கானிக் கடைகளும் நல்ல ஒரு வியாபாரம் நடக்கும். 


4. பனிபடர்ந்த (snow ) சாலையை அப்புறப்படுத்துதல்: வெப்பநிலையை முன்கூட்டியே அறியும் வசதி வந்து விட்டதால் பனிப்பொழிவு ஏற்படும் முன்னரே அனைத்து சாலைகளிலும் உப்புக்களை மற்றும் சிறு கற்களை தூவி விடுவார்கள் . இதனால் snow விரைவில் கரையும் அதோடு மணல்கற்கள் வாகனங்கள் வழுக்கி செல்லாமல் சீராக செல்ல உதவும். இவ்வளவு செய்தும் பனிப்பொழிவு சாலையை முழுக்க ஆக்கிரமித்து மிகப் பெரும் போக்குவரத்து நெரிசலை உண்டாக்கும். இதை தவிர்ப்பது தான் சவாலான வேலை . ஏனெனில் நாடு முழுவ்தும் உள்ள சாலைகள் இப்படி பனியினால் மூடப்பட்டிருக்கும். எனேவ மிகப்பெரிய அளவில் இதனை அகற்றும் பனி நடக்கும். வெப்பநிலை மிக குறைவாகவே இருப்பதால் பனி கரைவது கடினம். அதனால் அப்படியே இந்த பனியினை அள்ளிக் கொண்டு ,நகரின் வெளியே கொண்டு குவிப்பது வழக்கம். 

5. பனிப்பொழிவு சாலைகள் மட்டுமன்றி வீடுகள், மிகப்பெரும் கட்டிடங்களின் மேற்பகுதியில் பெருமளவு தேங்கி விடும். இதனை அகற்றுவதிக்கென்று தனி துறை இருக்கின்றது . அவர்களுடன் நாம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டால் கேக்கை வெட்டுவது போல நம் வீட்டு மாடியில் இருக்கும் snowவினை வெட்டி வெட்டி அகற்றி விடுவார்கள்.

மேற் சொன்ன அனைத்தும் மிக சில மட்டுமே. வெயில் காலங்களில் உடல் சார்ந்த தொழிலில் இருப்பவர்கள் அனைவரும் snow அகற்றும் பனியில் கொஞ்சம் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள் . அந்த மகிழ்ச்சிக்கு காரணம் கூடுதலான சம்பளம். 

நன்றி
செங்கதிரோன்

சினிமா திண்ணை;


சினிமாவுக்குப் பின்னுள்ள செய்திகளை (நடிகர்களின் சம்பளம், அடுத்த படம் போன்ற பல) தெரிந்து கொள்வதில் அனைவருக்குமே ஆர்வம் அதிகம். சினிமா குறித்து சின்ன செய்தியாவது இல்லமல் எந்த பத்திரிக்கையும் வெளிவரவே முடியாத நிலைதான் உள்ளது. youtube சேனல் பிரபலமாகிவிட்ட இந்த சூழலில் பத்திரிக்கைகளில் பணிபுரியும் சினிமா பத்திரிக்கையாளர்கள் மூன்று பேர் சேர்ந்து ஒரு youtube சேனல் தொடங்கி சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பினைப் பெற்றிருக்கின்றனர்.

பிஸ்மி , அந்தணன் , சக்திவேல் இந்த மூவரும் சேர்ந்து நடத்தும் "வலைப்பேச்சு" என்ற சேனல் சினிமா தொடர்பான சேனல்களில் முன்னணி இடத்தில் உள்ளது. இந்த வெற்றிக்குக் காரணம் தனிப்பட்ட திறமைகளும் , அவர்களின் நீண்ட நெடிய அனுபவம் மற்றும் நகைச்சுவையான பேச்சும் முக்கியக் காரணங்கள்.


இந்த சேனலில் புதிதாக எடுக்கப்படும் சினிமா குறித்த சுவாரஸ்யமான செய்திகள் , கேள்வி பதில் நிகழ்ச்சியில் பழைய நடிகர்கள் படங்கள் குறித்த செய்திகள் ,வெளிவந்த படங்களின் வசூல் நிலவரங்கள் மற்றும் சினிமாவில் உள்ள முக்கிய நபர்களின் பேட்டிகள் என்று பல்வேறு பகுதிகள் உள்ளன.

இந்த சேனலை அனைவரும் விரும்பி பார்ப்பதற்கு காரணம் மிக துல்லியமான சினிமா செய்திகள் , ஆக்கபூர்வமான விமர்சனங்கள் என்று பல்வேறு சிறப்பம்சங்கள். இதை விட மிக மிக முக்கியமானது தினமும் தவறாமல் ஒரு காணொளியினை (வீடியோ) வெளியிட்டு விடுவார்கள்.தற்போது இரண்டு லட்சம் சந்தாதாரர்கள் என்ற இலக்கினை எட்டி சாதனைப் படைத்திருக்கின்றனர்.

இந்த சேனல் குறித்து சில விமர்சங்களும் உள்ளன. அரசியல் குறித்த இவர்களின் நிலைப்பாடு (நாம் தமிழர் கட்சி ஆதரவு) சில நடிகர்கள் குறித்த தனிப்பட்ட விமர்சனம் என இந்த மூவரின் சுய சார்பினை சினமா ரசிகர்கள் விரும்புவதில்லை.

ஆனாலும் தற்போதைய நிலையில் சினிமா குறித்த அறிந்து கொள்வதற்கு உள்ள மிக சரியான ஒரு சேனல் இந்த வலைப்பேச்சு என்பது மட்டும் 100% உண்மை. பலருக்கும் இந்த சேனல் குறித்து முன்பே தெரிந்திருக்கலாம் , தெரியாதவர்கள் கண்டிப்பாக youtubeல் வலைப்பேச்சு சேனலைப் பாருங்கள்.
நன்றி 
செங்கதிரோன்

பிகில் சத்தம் எப்படி இருக்கு?


கனடாவில்  நாளில் 10 காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல். தியேட்டரில் விஜய், நயனதாரா, யோகிபாபு இவர்களோடு ரோபா சங்கரின் மகள் பாண்டியம்மாளுக்கும் பலத்த வரவேற்பு இருந்தது.

அட்லி வழக்கம்போல உணர்ச்சி மிகுந்த காட்சிகளிலும், பிரம்மாண்டத்திலும் அசத்தி இருக்கின்றார். 

இரண்டு முக்கிய அம்சங்கள் : திருமணத்திற்கு பிறகும் பெண்கள் சாதிக்கலாம் என்ற எண்ணத்தை உடைக்க வைத்திருந்த காட்சியும், ஆசிட் வீசியதால் பாதிப்படைந்த பெணலணிற்கு கொடுக்கப்படும் ஊக்கமும் மிக சிறப்பாக அமைந்திருந்தது.

விஜய் ஆல்தோட்ட பூபதி பாடலில் ஆடிய அதே உற்சாகத்தோடு 15 ஆண்டுகள் பின்பும் ஆடி அசத்திகின்றார். 
நன்றி 
செங்கதிரோன்.

படத்தின் முக்கிய பலவீனம் எந்த கதாபாத்திரத்திற்கும் சரியான பின்கதை இல்லை. 

கண்டிப்பாக ஒருமுறை ரசித்து பார்க்கலாம்.

கைதி எப்படி இருக்கு?

எழுத்தாளர் சாரு நிவேதிதா ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் வந்த போது பருத்திவீரன் படத்தில் வந்த அதே கதாபாத்திரத்தின் தொடர்ச்சி போல நடித்திருப்பதாக எழுதி இருந்தார். கைதி படத்திலும் அதே போனலறதொரு எண்ணம் ஏற்பட்டது. சில சமயம் இது பருத்திவீரன் Part-2 பார்ப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டது. இரு படத்திலும் தோற்றத்தில் வழவரே வித்தியாசம் நெற்றியில் அணிந்திருக்கும் விபூதி மட்டுமே. பல நவநாகரிக பாத்திரத்தில் நடித்தாலும் கிராமத்து தோற்றம் தான் கார்த்திக்கு மிக பொருத்தமாக இருக்கிறது. என்பதுகளில் சத்யராஜ் பிடித்து வைத்திருந்த அதே இடத்தினை மிக சிறப்பாக கார்த்தி தற்போது அடைந்திருக்கிறார்.


படம் சாகசப்பயணம் போல மிக மிக வேகமாக செல்கிறது. படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் , அதே சமயத்தில் வந்த பிகில் படம் அளவுக்கு காதில் பூ சுற்றவில்லை.

மிக இளம் வயது இயக்குஞரான லோகேஷிடமிருந்து இவ்வளவு ஆழமான உணர்வும், பல்வேறு சாகசமும் அடங்கிய படத்தினை எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் எல்லா படத்தின் கதையும் ஒரே இரவில் நடப்பதாக எடுப்பேன் என்ற பிடிவாத்ததின் பின்னணி என்னவென்று தெரியவில்லை.

காவல் நிலையத்தில் நடப்பதாக சொல்லபடும் சம்பவங்கள் நாடகத்தனமாகவும், எதார்தத்திற்கு மாறாகவும் உள்ளது. 
கலகலப்பு படத்தில் போலீஸாக வந்த நெப்போலியன் இதில் அந்த படத்தில் நடித்த பாத்திரத்தின் தொடர்ச்சி போல எனக்கு மட்டும் தோன்றியது.

தமிழில் எடுக்கபட்ட மிக மாறுபட்ட கதையம்சம் கொண்ட பட வரிசையில் கைதிக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு

நன்றி
செங்கதிரோன்
.

புத்தருடன் 55 மணி நேரம்;


ந்த 2019ம் வருடத்தில் சொல்லிக் கொள்கின்ற மாதிரி, மனதுக்கு நிறைவான சம்பவம் , புத்தர் குறித்த ஆவணப்படத்தினை Netflixல் பார்த்துதான். 

பள்ளியில் புத்தர் குறித்த பாடம் இன்றும் நினைவில் இருக்கின்றது (தமிழ் வழிக்ல்கல்வியின் சிறப்பமசம் ). மனைவி மகனை விட்டு விட்டு தனியாக ஆன்மீகபயணம் மேற்கொண்டார் . அந்த சிறு வயதிலேயே எனக்கு புத்தரின் மனைவியும் மகனும் எப்படிப்பட்ட துன்பத்திற்கு ஆளாகியிருப்பார்கள் என்று தோன்றியது. புத்தரின் கோட்பாடுகளும் அந்த வயதில் முழுவதுமாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஒரு வருடத்திற்குப் பிறகு netflixல் நுழைந்து போது வழக்கமாக பார்க்கும் மாஃபியாக்கள் தொடரை பார்க்காமல் புதிதாக ஏதாவது பார்க்கலாம் என்று தேடியபோது கிடைத்தது தான் புத்தர் பற்றிய தொடர். இந்த தொடரில் புத்தரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து நிகழ்வுகளும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

புத்தர் பிறந்தவுடன் முனிவர்கள் இவர் மிக்கப்பெறும் யோகியாக வருவார் என்று கணித்த காரணத்தால் , அவ்வாறு நடக்காமல் இருப்பதற்காக அவனுடைய தந்தை நகரம் முழுதும் வயதானவர்கள் நோயாளிகள் ,ஊனமுற்றவர்களை அப்புறப்படுத்தி அவர்களை தன மகன் புத்தர் பர்ர்க்கதவாறு தனி இடத்தில் தங்க வைத்தார். புத்தர் ஆன்மீகத்தை நோக்கி செல்லாதவாறு அவர் எடுத்த அனைத்து முயற்சிகளுமே தோல்வி அடைந்தன.

மற்ற அனைவரையும் விட புத்தரின் மனைவி அடைந்த துயரம் மிக அதிகம் .அனால் அவர் அதை தன கணவரின் எண்ணம் நிறைவேறுவதற்காக பொறுத்துக்கொண்டார். புத்தரின் மனைவியாக நடித்த பெண் காஜல் ஜெயின் மிக சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். தமிழ் சினிமா ஏன் அவரைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று தெரியவில்லை.

புத்தரின் கொள்கைகளை உலக மக்கள் பின்பற்றயதோடு மட்டுமல்லாமல் அவரின் ஒட்டு மொத்தக்குடும்பமே துறவி பாதையினை தேர்ந்தெடுத்தார்கள் . அதில் மிக குறிப்பிடத்தக்கவர்கள் அவருடைய வளர்ப்பு அம்மா , மற்றும் தம்பி ஆனந்தா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
நன்றி 
செங்கதிரோன் 


ஆவாரம்பூ அறிவாளிகள்:

நியாண்டர் செலவன் ஒரு முறை முக புத்தகத்தில் மிக சிறப்பாக செயல்படும் குழுமமாக ஆரோக்கியம் நலவாழ்வு என்று குறிப்பிட்டிருந்தார் . அப்படி செயல்பட்டுக்கொண்டிருந்த ஒரு குழுமம் தற்போது முழு மூடர்களின் கூடாரமாக மாறிவருகின்றது .

இந்த குழுமத்தின் முன்னணி சேவகர்களில் ஒருவர் தன் அறிவின்மையை வெளிப்படுத்த ஆவரம்பூவினை கையிலெடுத்தருக்கின்றார் . உடம்புதான் ஆயுதம் என்ற தத்துவஅடிப்படையில் கொழுப்பினை உண்டு அடைந்த `தற்காலிக வெற்றியினை ` மிகப் பெரும் வெற்றியாக கற்பிதம் செய்து கொண்டு மற்ற மருத்துவ முறைகளை இகழ்வது அறிவீனத்தின் உச்சம்.

இது போன்ற அவதூறுகளை மற்ற மருத்துவ முறைகளை நோக்கி அள்ளி வீசும் போதெல்லாம் அலோபதி மருத்துவர்களை துணைக்கு அழைப்பது என்பது தப்பான தொழில் புரிபவன் அந்த ஊர் பெரியவரையோ ரவுடியையோ துணைக்கு அழைப்பது போல் தான் உள்ளது.

பேலியோவில் இருப்போரும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் உலகில் உள்ள அனைத்து நோய்க்களும் பேலியோவினால் சரியாகும் என்று உளறி வருவதையும் பார்க்க முடிகின்றது.


இறுதியாக ஆவாரம் பூ குறித்த சில செய்திகள். சித்த மருத்துவத்தில் ஒரு மருந்து கூட single herbal formulation அடிப்படையில் உண்டாக்கப்பட்டதல்ல. ஆவாரம் பூ குடிநீர் என்பது பல மூலிகைகள் இணைந்த ஒரு குடிநீர் சூரணம் . அதற்கு சர்க்கரை அல்லது நீரிழிவு நோயினை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்பது ஆய்வுகளின் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது . இது குறித்த கருத்து தெரிவிக்கும் உரிமைமயும் தகுதியும் மருத்துவ அறிஞர்களுக்கும் , தாவரவியல் ஆராய்ச்சியார்களுக்கு மட்டுமே உண்டு .

நன்றி 
செங்கதிரோன்