Tuesday, November 22, 2016

வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கத்தில் நரகம் : அரக்க சமையல்


வெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள சுவாரஸ்யங்களையும், தனிமை ஏற்படுத்தும் கஷ்டங்களையும் சொல்லும் நோக்கில் எழுதும் புதிய தொடர். இந்த பகுதியில் சமையல் குறித்த சில எண்ணங்கள் 

1.அது என்ன அரக்க சமையல் ? வெட்ட வெளியில் பல ஆண்கள் கூடி சமைத்தால் அது கூட்டாஞ்சோறு , அதுவே வெளிநாட்டில் வெகு சில ஆண்கள் அல்லது ஒரே ஒரு ஆண் சமைக்கும் அந்த முறைக்கு பெயர் தான் அரக்க சமையல்.

2. சமைப்பதில் அனுபவமே இல்லாத ஆண் , சமையலில் இறங்கும்போது உப்பு, காரம் அனைத்துமே அள்ளி அள்ளி போடுவார்கள் 

3. எந்த ஒரு முறைமையும் இருக்க்காது ,உதாரணத்திற்கு முதலில் வெங்காயம் பிறகு தக்காளி என இல்லாமல் மாறி மாறி போடுவது , அது மட்டுமன்றி , மசாலா தூள் போடும் அளவு தெரியாமல் ஒரு பாக்கட்டையே ஒரே ஒரு குழம்பில் கொட்டுவது என பல்வேறு சமையல் விதிகளை மீறி சமைப்பார்கள். மிக முக்கியமாக ஒரு ஆளுக்கு சமைக்க எவ்வளவு தேவை என்பன போன்ற அளவு தெரியாததால் ஒரே நேரத்தில் ஒன்பது பேர் சாப்பிடும் அளவுக்கு சமைத்து அதையும் சாப்பிட முடியாமல் வீணாக்குவார்கள்.


4. நம்மூரில் உள்ளது போல் அல்லாமல் வெளிநாடுகளில் முழுக்க முழுக்க மின்னனு அடுப்புகள் தான் , எனவே அவற்றில் பல சமயங்களில் நெருப்பினை அதிகம் வைத்து (Heat ) உணவு பாழாவதும் நடக்கும்.

5.ஆணுக்கு மிக மிக சரியாக சமைக்க தெரிந்த ஒரே உணவு சாதம் வைப்பது தான் . சொல்லி வைத்தது போல அனைத்து ஆண்களும் இதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்கள் .

மேலே சொன்ன அனைத்தும் தனியாக சமைத்துக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு தவறான ஒன்றாகவே தெரியாது . ஒரு பெண் அவன் வாழ்வில் வந்த பிறகு தான் , இவ்வளவு நாளும் அரக்க சமையல் தான் செய்து கொண்டிருந்தோம் என்ற உண்மை தெரிய வரும். பெண்களும் சமையலில் தவறுகள் செய்வார்கள் , எப்படி என்றால் நாம் எல்லாவற்றையும் (உப்பு, காரம் , காய்கறி) அதிகமாக போட்டால், அவர்கள் மேற்சொன்ன அனைத்தையுமே மிக மிக குறைவாகவே போடுவார்கள்.

ஆனாலும் அவர்கள் செய்யும் சிறு சிறு மாற்றத்தினால் உணவுக்கு கூடுதல் சுவை கிடைக்கும். தனியாக சமைக்கும் ஆண்கள் சாம்பார் வைத்தவுடன் வேலை முடிந்தது என்று நினைப்பார்கள் , ஆனால் உணவு சமைத்த முடித்த உடன் இறுதியாக தாளிப்பு என்ற ஒன்றினை செய்வார்கள் . இது போல பல உதாரணங்களை  கூறலாம். 


தல அஜீத் பிரியாணி சமைப்பதில் தேர்ச்சி பெற்று விளங்குவது போல் நம் நட்பு வட்டாரத்திலும் பல் உணவு ஸ்பேசிலைட் இருப்பார்கள்.

இது ஆண் சமையலை கிண்டல் செய்ய எழுதப்பட்டதல்ல , மாறாக ஆண் சமையல் முறை எவ்வாறு இருக்கும் என்பதனை படம்பிடித்துக் காட்டும் பதிவு மட்டுமே.

நன்றி 

செங்கதிரோன் 

பின் வாசல் வழியாக நுழையும் பாஜக

இடைத்ததேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறனது. ஏன் மாபெரும் வெற்றி என்று குறிப்பிடுகின்றேன் என்றால் ,அதிக அளவு பிரச்சரம் கிடையாது , ஆள் பலம் கிடையாது ,ரூபாய் நோட்டு பிரச்னை இவை அனைத்தையும் மீறி அது பெற்ற வாக்குகள் மிக கவனிக்கவேண்டிய ஒன்று . நீட காலம் இருந்துவரும் பாமக , மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இது மிகப்பெரும் பின்னடைவு . 


பாஜக தொடந்து இது போன்று மூன்றாம் இடத்தினை வரும் தேர்தலிகளிலும் பெற்றால் மேற் சொன்ன கட்சிகளை தமிழகத்தில் காணாமல் போகும் நிலை வரலாம். உயர் நடுத்தர வர்க்கத்து இளைஞர்களின் நாயகனான மோடி இப்பொழுது தொடர் பிரச்சாரங்கள் மூலம் கிராமத்து இளைஞர்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார் என்றே இந்த வாக்குகளின் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது. 



விஜயகாந்த் வட மாவடத்தில் உள்ள இளைஞர்களை தன் வசப்படுத்த சில காலம் செல்வாக்கு பெற்று விளங்கியது போல , மோடியை முன்னிலைப்படுத்தி பாஜகவும் வட மாவட்டத்தில் காலூன்றப் பார்க்கின்றது. தங்கள் சமுதாய இளைஞர்களை இப்படி வழி தவறி செல்லாமல் தடுக்கும் பணியில் உடனடியாக அந்தந்த தலைவர்கள் களத்தில் இறங்குவது நல்லது. இடைத்தேர்தலில் பாஜக பெற்ற மூன்றாம் இடத்தினை , வருங்காலத்தில் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் பெற விடாமல் தடுத்தால் தான் நம் இளைய சமூகம் காக்கப்படும்.



 முன் வாசலில் நின்று கொண்டு திராவிடத்தை வீழ்த்த போராடிக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் பினவாசல் வழியாக பாஜக எளிதாக நுழைந்து கொண்டிருக்கின்றது. 

நன்றி 
செங்கதிரோன்