தமிழ் படங்களில் வரும் வில்லன்கள் கழுத்து நிறைய கனமான செயின்களை அணிந்து கொண்டு வருவர். பெண்களுக்கு நகைகள் மீது அதிகம் ஆர்வம் இருக்கும் என்ற நிலை மாறி ,இது போன்ற பெரிய தாதாக்களுக்கும் தங்க ஆபரணங்கள் அணிவது விருப்பமாகி விட்டது. இது போன்று அரசியல் தலைவர்களும் தங்கள் தலைமையின் பெயர் பதித்த மோதிரம், செயின் பிரேஸ்லெட் அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மறைந்த தாமரைக்கனி அவர்கள் தான் அணைந்திருந்த கனமான இந்த மோதிரத்தால் தான் சட்டசபையில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூக்கை உடைத்தார்.
இந்த ஆபரணங்கள் அணிவது தங்களின் ஆடம்பரத்தை வெளிஉலகிற்கு காண்பிக்க ஒரு குறியீடாகப் பயன்படுத்துகின்றனர்.ராப்பர் இசை உலகின் அனைத்து பாடகர்களுமே இது போன்று நிறைய செயின்களை கழுத்தில் மாட்டிக் கொண்டிருப்பார். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட ஒருவரை மட்டும் செயின் பொறுக்கி என்று சொல்வதற்கான காரணம் இவருடைய பெயரே அது தான், 2 Chainz .இவருடைய சொந்த பெயர் Tauheed Epps , ஆனால் இவராக சூட்டிக் கொண்டது 2 Chainz , கூடைபந்தாட்ட வீரரான இவர், இசை உலகில் பிரபலமானது 2012ல் , இதற்கு முன்னர் பல இசைக் குழுக்களில் இயங்கி வந்தாலும் , தனியாக இவரே பாடி வெளியான பாடல்களின் மூலம் தான் இசை உலகில் பிரபலமானார்.
No Lie , Birthday song இரண்டும் மிகப் பிரபலமானவை, இந்தப் பாடல்களை நீங்கள் மீண்டும் மீண்டும் பார்ப்பீர்கள், அந்தளவுக்கு காட்சி அமைப்புகள் இருக்கும். ஏனெனில் இது போன்ற பாடல்களில் மிக மிக அழகான பெண்களை மிக ரசனையாக தேர்ந்தெடுத்து அந்த நடன அசைவுக்கு தக்கவாறு இசையும் அமைத்து கலக்கி இருப்பார்.அதுவும் Birthday song இசை உலகின் முரட்டு பொறுக்கியான Kayne West உடன் இணைந்து அதகளம் பண்ணி இருப்பார்.கண்டிப்பாக இந்தப் பாடலை பார்க்கும் ஒவ்வொருவரும் உங்கள் நண்பரின் பிறந்த நாளுக்கு இந்தப் பாடலை dedicate செய்வீர்கள் , நான் சொல்வது எவ்வளவு உண்மை என்பதனை கீழே உள்ள உங்கள் குழாய் இணைப்பில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இது போன்ற இசைப் பணியும் தாண்டி இவரின் மற்றொரு செய்கையின் மூலம் அனைவருக்கும் அறிமுகம். நம்மூர் பாடகர் சினேகன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் மற்றும் பொது மேடைகளில் கட்டிபிடி வைத்தியம் செய்து தமிழகத்தில் மிக பரபரப்பாக செய்திகளில் இடம் பிடித்தார். ஆனால் 2 Chainz உலகில் மிக விலையுர்ந்த பொருட்களை வாங்குவது ,உண்பது போன்ற சாதனைகளை செய்து கொண்டு வருகின்றார்.
தொப்பி -15 இலட்சம்,ஒரு பாட்டில் தண்ணிர் -5 இலட்சம் , பல் விளக்கும் டூத் பிரஷ் -25,000 ரூபாய் இப்படி இவர் உலகின் அதிக விலை கொண்ட அனைத்தையும் வாங்குவதையும் பயன்படுத்துவதையும் பொழுது போக்காகக் கொண்டுள்ளார்.
மேக்டோன்னல்டில்(Mc Donald ) 2$ க்கு ஜூனியர் கிடைக்கும், யானைப் பசிக்கு சோளப் பொறி போல இருந்தாலும் நம்ம பட்ஜெட்டுக்கு அதை சாப்பிடுவதை தவிர வழி இல்லை. ஆனால் , 2 Chainz சாப்பிட்ட பார்கரின் விலை 295$(15,000 ரூபாய் ).ஒரே ஒரு பர்கரின் விலை, வெவேறு நாடுகளில் இருந்து வரவைக்கப்பட்ட சிறந்த மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பார்கரின் கூடுதல் அம்சம் 24 காரட் தங்கப் பொடி தூவப்பட்டிருப்பதும், வைர பற்குச்சியும்(Tooth pick) இணைந்திருப்பது தான். கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட அந்த பர்கரை 2 chainz சாப்பிடுவதின் காணொளியைப் பாருங்கள்.
செயின் பொறுக்கி குறித்த இந்தப் பதிவு உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கும் என்று நினைக்கின்றேன். அடுத்து இசை உலகின் முரட்டு பொறுக்கி குறித்து பார்ப்போம்.நன்றி