Monday, December 31, 2012

சாரு ,ஜாக்கி ,விஜயகாந்த்: மூவேந்தர்கள்


இந்த  மூவேந்தர்களுக்கும் என்ன ஒற்றுமை என்பதனை எழுத்துலகம் ,பதிவுலகம் ,அரசியல் இதனை ஓரளவுக்கேனும் கவனித்து வருபவர்களுக்கு சட்டென்று புரிந்துவிடும் .உங்கள் அனைவரின் ஊகம் மிகச் சரியானதே, அதாங்க மூன்று  பெரும் தாங்கள் மிகப்  பெரிய  தண்ணி வண்டி என்று அடிக்கடி வாக்குமூலம் கொடுக்கும் மேதைகள்.ஆனாலும்  இதனையும் தாண்டி நிறைய ஒற்றுமைகள் உள்ளன.முதலிலேயே சொல்லிவிடுகின்றேன் இந்தப் பதிவின் நோக்கம் இந்த மூவரையும் இழிவுப் படுத்தும் நோக்கம் அல்ல,அவர்களின் நிறை குறைகளை அவர்களின் முன்னாள் ரசிகன் என்ற முறையில் அலசும் பதிவு.



சாரு :முதலில் சாருவை குறிப்பிட்டதற்கான காரணமே அவரின் சிறந்த ஆளுமைத்திறன் தான் முக்கியக் காரணம்.இந்த மூன்று பேரில் இவரே முதன்மையானவர் என்பதனை மூவரையும் தொடர்ந்து கவனித்து  வருபவர்கள் தயக்கமின்றி ஒப்புக்கொள்வார்கள். தொடர்ந்து சர்ச்சைக்குரிய  செயல்களை   எழுதியும் பேசியும் செய்தும் வந்ததால் மிகக் கடுமையான் கண்டனத்துக்கு ஆளானார் .இருப்பினும் இவரின் ஒளிவு மறைவற்ற  எழுத்துக்கு இன்றும் ஆண் வாசகர்களை மட்டுமின்றி பெண் வாசகர்களை மிக ஏராளமாகக் கொண்டிருப்பவர் .அதுவும் இவரிடம் உள்ள தன்னனம்பிக்கையும் மிகப் பெரிய சாதனைகளை செய்ய வேண்டும் என்ற துடிப்பும் என்னை எப்பொழுது வியக்க வைக்கும்.இவரின் எழுத்துக்களை தொடர்ந்து படிக்கும் அனைவருக்குமே தாங்களும் தங்கள் துறைகளில்  இதனைப் போன்ற சாதனைகள் புரிய வேண்டும்  என்ற எண்ணம் நிச்சயம்  ஏற்படும். உலக இலக்கியங்கள் மட்டுமின்றி உலக  இசை குறித்த இவரின் விசாலமானப் பார்வையினை தமிழகத்தில்  இவரளவுக்கு பெற்றிருப்பவர்கள் கண்டிப்பாக வெகுச்  சிலரே இருப்பர் . நிறைகள் அளவுக்கு குறைகளையும் அதிகம் பெற்றிருப்பதுதான் மிக வருத்தமான உண்மை. மொத்தத்தில் ஒரே வரியில் சொல்வதானால்  'எடுப்பார் கைபிள்ளை' என்று சொல்லி விடலாம். தான் பழகும் அனைவரயும் மிக எளிதில் நம்பி இவர்  ஏமாந்து போன கதைகள் மிக ஏராளம்.மனுஷ்,மிஷ்கின் போன்றவர்களை பற்றி இவர் மிக உயர்வாக எழுதியதைப் போன்று இனி ஒருவர் எழுத வேண்டுமானால் அவர் பிறந்தது தான் வர வேண்டும் அந்த அளவுக்கு மிக உயர்வாக எழுதினார் .




விஜயகாந்த் : கருப்பு எம்.ஜி.ஆர்  என்று தனக்குத் தானே பட்டம் சூட்டி  தமிழ்கத்தினை வலம்  வருபவர். இவரின் திடீர் எழுச்சி அரசியலில் யாருமே எதிர்பாராதது .ஆனாலும் கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு இவரின் ரசிகர்களின் பலம் மிகத் தெள்ளத் தெளிவாகத் தெரியும். பொங்கல்,தீபாவளியில் இவரின்  படம் வெளிவருகையில் மிகப் பெரிய பேனர்களை பேருந்தில் எடுத்துக் கொண்டு காலையிலே திரையரங்கத்துக்கு சென்றுவிடுவர் .ரஜினி,கமல் படத்திற்கு  இணையான வரவேற்பினை தங்கள்  தலைவனுக்கும் வழங்குவதனை கடமையாக் கொண்டிருந்தனர். கார்த்திக் மற்றும் பிரபு இருவருமே விஜயகாந்தை விட அதிகமான வெற்றி  படங்களை  கொடுத்திருந்தாலும் அவர்களால் பெற முடியாத அளவுக்கான ரசிகர் பட்டாளத்தினை தன வசம் வைத்திருந்தார்.ரஜினி சொல்லும் 'இது தானாக சேர்ந்த கூட்டம்' என்ற  சொல் விஜயகாந்த் ரசிகர்களுக்கு  தான் மிகப்  பொருத்தமான வசனம்.தனது ரசிகர்கள் பலத்தினை மிக சரியான நேரத்தில் அரசியல் சக்தியாக மாற்றி அதில் வெற்றியும் அடைந்த்ருக்கின்றார். இருப்பினும் அவரின் உயரிய லட்சியமான முதலமச்சர் பதவியை அவர் அடைவது எந்தளவுக்கு சாத்தியம் எனபது அவரின் முன்கோபத்தினை மட்டுமே பொறுத்தது. அந்தளவுக்கு  பொது இடங்களில்  தன் பொறுமையிழந்து தன்னை சுற்றி இருப்பவர்களை இம்சிப்பதில் இவருக்கு நிகர் இவரே. 



ஜாக்கி.: உலகபடம் என்ற வார்த்தைக்கு தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த ஒரே அர்த்தம் ஜாக்கி தான். அந்தளவுக்கு  பல நாட்டு திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியத்தில் முதன்மையானவர்.பதிவுலகத்தில் சூப்பர் ஸ்டார் என்றால் அது மிகை அல்ல ஏனென்றால் மெத்தப் படித்தவர்கள் முதற்கொண்டு ஓரளவுக்குப் படித்தவர்கள் வரை  அனைவரையுமே  வாசகர்களாகக் கொண்டிருக்கும் ஒரே பதிவர் இவர் தான்.இவன் நம்மில் ஒருவன் என்று நினைக்கும் அளவுக்கான ஒரு அடையாளத்தினை இயலபாகவே ஏற்படுத்திக் கொண்டவர்.இவரின் தாக்கத்தினால் பதிவெழுத ஆரம்பித்தவர்களும் ,இவரின் பாணியைப்  பின்பற்றி பதிவெழுதி வருபவர்களும் ஏராளம். எந்த உலகப் படங்களால் மிகப் பெரிய உயரத்தினை  தொட்டாரோ  அவற்றினை தொடராமல் சமூக பிரச்சனைகள் குறித்து எழுத ஆரம்பித்தில் இருந்து இவருக்கான தனிப்பட்ட பிரச்சனைகள் தொடர ஆரம்பித்தன.சிறிது காலம் கால்ஷீட் போன கதாநாயகன் போல கவனிக்கப்படாமல் இருந்தாலும் மறுபடியும் மீண்டு வந்து கொண்டிருக்கின்றார்.


நன்றி 
செங்கதிரோன் 



மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் அனைத்துமே இவர்கள் மூவரையும் நன்கு அறிந்தவர்களுக்கு மிகவும் உடன்பாடாகவே இருக்கும் மிகைப்படுத்தி எதுவும் எழுதப்படவில்லை   என்பது புரியும். மற்றவர்கள் இதனை எனது தனிப்பட்ட கருத்தாகவே எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி 
செங்கதிரோன்