அல்லோபதி மருத்துவர்களும் அல்லோலூயா குரூப்பும் இணையும் மையப் புள்ளி என்பது இவர்கள் தொழில் சார்ந்தும் ,வழிபாடு சார்ந்தும் பின்பற்றுவது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றிலிருந்து தொடங்குகின்றது.
பரவி வரும் பன்றிக் காய்ச்சலை தடுக்க சித்த மருந்தான கப சுரக் குடிநீர் நல்ல பலனளிக்கின்றது. தொழில்நுட்பங்கள் வெகுவாக வளர்ந்த இந்த காலத்திலும் நம் பண்பாட்டு மருத்துவம் நமக்கு நன்மை அளிக்கின்றது. ஆனால் தமிழர்களாக இருந்தாலும் ஆங்கில் மருத்துவமான அலோபதி படித்தவுடன் தான் ஆங்கிலேயனாக மாறி விட்டது போல நினைத்துக் கொண்டு சித்த மருத்துவத்த்தை இழிவாகப் பார்ப்பதும் எள்ளி நகையாடுவதுமானப் போக்கினைக் கொண்டிருக்கின்றனர். மேற்குலகமே கூட்டு மருத்துவம் நோக்கி சென்று கொண்டிருக்கும் சூழலில் , ஆங்கில மருத்துவம் மட்டுமே அனைத்திற்கும் தீர்வு எனற தட்டையான போக்கில் தமிழ் நாட்டில் உள்ள அலோபதி மருத்துவர்கள் இருப்பது வெட்ககேடு .
தமிழக பாஜக தலைவரின் கணவர் சுந்தர்ராஜன் அவர்கள் சிறுநீரக கோளாறு (Urologist )நிபுணர் , இவர் ஒரு முறை ஆனந்த விகடன் கட்டுரையில் சித்த மருந்துகள் சிறுநீரக கோளாறை உண்டு பண்ணுகின்றன என்று எந்த ஆதாரமும் இன்றி குற்றம் சாட்டினார். அப்போதே பல சித்த மருத்துவர்கள் அனந்த விகடனுக்கு மறுப்பு கடிதம் எழுதினர் . ஆனால் எதையும் ஆனந்த விகடன் வெளியிட மறுத்து விட்டது. ஒரு பக்கத்திற்கு போலி சித்த மருத்துவர்கள் கொடுக்கும் விளமபரங்களை வெளியிடுபவர்கள் உண்மை கருத்தை சொல்ல விழையும்போது அதை தடுக்கின்றனர் .
சித்த மருந்துகளின் நம்பகத்தன்மை குறித்தும் , சித்த மருத்துவ கோட்பாடு குறித்தும் மேலும் அறிய நான் ஏற்கனவே எழுதிய இரண்டு கட்டுரைகளை வாசிக்கவும் .
1.தங்க பற்பம்
2.சித்த மருத்துவ உண்மைகள்
அலோபதி மருத்துவ முறைகளில் கொடுக்கப்பட்ட்டுள்ள பெரும்பாலான நோய்கள் மற்றும் மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் பெரும்பாலும் அம்மருத்துவம் தோன்றிய இடத்தினை மையமாகக் கொண்டவை. அதே போல வெளிநாடுகளில் மருத்துவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்கின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.அதே நேரத்தில் அந்த நாடுகளும் செல்வ செழிப்பானவை மற்றும் வளர்ந்த நாடுகளில் அமெரிக்கா தவிர அனைத்திலும் மருத்துவ செலவினை அரசாங்கமே ஏற்றுக் கொள்கின்றது.
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக இந்தியாவில் இருக்கும் அலோபதி மருத்துவர்கள் தாங்களும் வெளிநாட்டில் உள்ள மருத்துவர்கள் போல வாழ்வதற்காக இந்த ஏழை நாட்டில் மருத்துவ செலவினை நாளுக்கு நாள் ஏற்றிக் கொண்டே செல்கின்றனர்.மேலும் அரசு மருத்துவமனைகளில் நோயாளி உயிரிழந்தாலோ அல்லது மருத்துவரின் அலட்சியத்தால் பாதிப்பு ஏற்பட்டாலோ மருத்துவர்களை தாக்கும் ஆபத்தான போக்கு நிலவை வருகின்றனது. இதற்கான மூலக்காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் மக்கள் மனதில் அரசு மருத்துவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது தனது சொந்த மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளுக்குத்தான் என்ற எண்ணம் ஆழப் பதிந்து விட்டது.
தமிழ் நாட்டிலேயே தோன்றிய பழமை வாய்ந்த சித்த மருத்துவத்தினை அலோபதி மருத்துவர்கள் முன்னேற்றுவதற்காக எந்த ஒரு முயற்சியினையும் இந்நாள் வரை எடுக்கவை இல்லை. எனினும் மருத்துவ உலகின் சூப்பர் ஸ்டார் என்று நான் குறிப்பிட்ட மரு .தெய்வநாயகம் போன்ற அலோபதி மருத்துவர்கள் சித்த மருத்துவத்தினை வளர்க்க பாடுபட்டாலும் அவர்களை கேலி கிண்டல் செய்வதனையே மற்ற அலோபதி மருத்துவர்கள் தொழிலாக வைத்துள்ளனர். இந்திய மருத்துவ கவுன்சிலானது சித்த மருத்துவத்தினை ஒழித்துக் கட்டுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு இயங்குகின்றது.
அடுத்து அல்லேலூயா குருப்புகளின் அட்டகாசம் .
கிறித்துவப் பள்ளியில் படித்த நான் தேவாலயங்களுக்கு செல்வதினை ஒரு மற்ற இந்து ஆலயங்களுக்கு செல்வது போலவே கருதி பயபக்தியுடன் இன்றும் சென்று வருபவன். Life of pi படத்தின் ஆரம்பக் காட்சிகளில் சொல்லப்பட்டது போல இந்தியாவில் பிறந்தவர்கள் மூன்று மதக் கடவுள்களையுமே ஒன்றாகக் கருதி வழிபடும் வழக்கம் 90 களின் இறுதி வரை இருந்து வந்தது. பாபர் மசூதி இடிப்பு போன்ற சமபவங்கள் மதங்களுக்கிடையே ஒரு காழ்ப்புனர்ச்சியினை உண்டாக்கி விட்டது.அடுத்து ஒரு தமிழ் இந்து ஏசுவை கும்பிடுவதற்கு எந்த ஒரு தயக்கமும் காட்டுவதில்லை . வட தமிழகத்தில் வருடா வருடம் வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்க்காவிற்கு செலவதனை இன்றும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இப்படி மத நல்லினக்கத்தினை பார்த்த எனக்கு சென்னை வந்த பிறகு கிறித்துவத்தில் ஒரு பிரிவினர் முருகன் விநாயகர் போன்றோரை பூதம் என்று அழைப்பதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.

வெளிநாட்டு மதத்தினை பின்பற்றுவதனாலும் வெளிநாட்டுப் பெயர்களை வைத்துக் கொள்வதாலும் வெளிநாட்டவர் மாதிரி உடை அணிந்து கொள்வதாலும் இவர்கள் தங்களை வெளிநாட்டவர்கள் என்றே சில சமயங்களில் நினைத்துக் கொள்வர். பதிவர் கலையரசன் அவர்கள் இதனை மிக அழகாக சொல்லி இருப்பார். இஸ்லாமிய நாடுகளில் வாழ்பவர்கள் ஐரோப்பா மற்றும் அமேரிக்கா செல்லும் போது தாங்களும் அவர்கள் போன்று வெள்ளையாக இருப்பதால் மிக சுலபமாக அந்து சமூகத்துடன் கலந்து விட முடியும் என்ற நப்பாசையில் சென்று பின்னர் ஏமாற்றம் அடைவதே நடக்கின்றது. ஆபிரிக்க முஸ்லீம்களுக்கும் அதே நிலைதான் , பள்ளிவாசல் வரை மட்டும் தான் அந்த உறவு அதை தாண்டி அரபு நட்டார் ஆப்பிரிக்க முஸ்லிம்களை அனுமதிப்பதில்லை.
இந்தக் கட்டுரையின் சாரம்சம் என்பது எவ்வளவு தான் எண்ணெய் தடவி உருண்டாலும் ஒட்டுவதுதான் ஓட்டும். கிருத்துவர்களும் அலோபதி மருத்துவர்களும் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவமோ மதமோ அதை நீங்கள் கடை பிடிக்க தடை இல்லை. ஆனால் இங்கு தொன்று தொட்டு பயன் பாட்டில் இருந்து வரும் சித்த மருத்துவத்தை இழிவுபடுத்துவதும் , சிவ வழிபாடுகளைக் கிண்டல் செய்வது உங்களயே அவமதிக்கின்ற செயலாகும்.