கனடாவில் தற்போது வைத்துள்ள காரை மாற்றிவிட்டு புது கார் வாங்கலாம் என்று கார் ஷோரூம் சென்றேன் . அங்குள்ள விற்பனைப் பிரதிநிதி புதிதாக வந்துள்ள 2020 மாடல் கார் ஒன்றின் சிறப்பம்சங்களை விளக்கிக்கூறுகையில் ஆட்டோ லைட் என்றொரு வசதி பற்றிக் கூறினார் . அது என்னவென்று கேட்டேன்.கனடாவில் வெளிச்சம் வரும் வரை முகப்பு விளக்குகள் ஆன் செய்து இருக்க வேண்டும் , இது கட்டாய விதிமுறை. இந்த ஆட்டோ லைட் வசதி இருப்பதால் லைட் எப்போது ஆன் செய்யவேண்டும் , எப்போது ஆப் செய்ய வேண்டும் எனப்து குறித்து கவலைப்படவில்லை என்றும் கூறி இந்த லைட்டினால் கனடாவில் நடந்த முக்கிய நிகழ்வினை சொன்னார் .
அந்த நிகழ்வு என்னவென்று அறிய மேலும் வாசியுங்கள் :
அதிகாலையில் காரில் சென்று கொண்டிருந்து ஒருவரை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தடுத்து நிறுத்தினார் . காரில் சென்று கொண்டிருந்த நபர் எதற்காக தடுத்து நிறுத்தினீர்கள் என்று காவலரிடம் கேட்ட போது , காரின் முகப்பு விளக்குகளை ஆன் செய்யவில்லை , அதனால் அபராதம் கட்ட வேண்டும் என்று அதற்கான ரசீதினை கொடுத்தார். இன்னும் இருட்டாக தான் இருக்கிறது , ஆனால் நீங்கள் முகப்பு விளக்கினை ஆன் செய்யவில்லை அதனால் அபராதம் கட்டுங்கள் என்று நிர்ப்பந்தித்தார்.
காரில் இருந்தவர் இஸ்லாமிய சமூகத்தினை சேர்ந்தவர். தான் ஏன் முகப்பு விளக்கினை ஆன் செய்யவில்லை எனபதற்கு தன் மதம் சார்ந்த ஒரு பதிலினை அளித்தார் . அஃதாவது , இஸ்லாமிய முறைப்படி சூரியன் உதித்த பிறகு தொழுகை செய்ய வேண்டும் , அவ்வாறே இன்றும் சூரியன் உதித்த பிறகு தொழுகை செய்த பின்னர் வீட்டிலிருந்து கிளம்பினேன். எனவே தான் விதி முறையினை மீறவில்லை என்றும் அபராதம் செலுத்த முடியாது என்றார். இந்த பதிலினைக் கேட்ட காவலர் "உன்னுடைய தொழுகையை எந்த நேரத்தில் செய்வாய் என்பது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை (ஆங்கில பதில் : I dont care about your prayers ).
இந்த பதிலால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் காவலர் அலுவலகத்தில் தன்னுடைய மதத்தினை இழிவுபடுத்தியதாக முறையிட்டார். விசாரணையில் அந்த காவலருக்கு 15 நாள் இடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த தண்டனைக்கான முக்கியக் காரணம் அந்தக் காவலர் பலமுறை இது போன்ற ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவது தான் முக்கியக் காரணம்.
https://montreal.ctvnews.ca/i-don-t-care-about-your-prayers-montreal-cop-suspended-15-days-for-insulting-muslim-man-1.4713446?cache=yes
இதே போன்றதொரு நிகழ்வு இந்தியாவிலிலும் சுதந்திரத்திற்கு முன்னர் நிகழ்ந்தது. வெள்ளைக்காரர்கள் பொதுவாகவே காலையிலே அலுவலக வேலையினை ஆரம்பித்து விடுவார்கள். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது அவர்களின் அலுவலகங்களில் பெரும்பாண்மையாக வேலை செய்தவர்கள் பிராமண சமூகத்தவர்கள். அக்காலத்தில் பிராமணர்கள் பூஜை புனஸ்காரங்களையெல்லாம் முடித்து விட்டு ஒன்பது மணிக்கு மேல் தான் வேலைக்கு வருவார்கள். பிரிட்டிஷாருக்கு அலுவலக வேலை பிராமண சமுகத்தவரின் பங்கு முக்கியம் என்பதாலும் , அவர்களின் மத உணர்வுக்கு மதிப்பளித்து வேலை நேரத்தினை ஒன்பது மணிக்கு மாற்றி அமைத்தனர். இதனால் தான் இந்தியாவில் அலுவலகங்களின் வேலை நேரம் இன்றும் ஒன்பது மணி என்று இருக்கின்றது.
நன்றி
செங்கதிரோன்
No comments:
Post a Comment