தமிழகத்தின் எந்த சாதியில் பிறந்தாலும் பெண் என்பவள் பெண்தான் , அந்தப்பெண்ணிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அனைவரின் கடைமை.
பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். கருத்தம்மா என்ற பெயரே அந்த குறிப்பிட்ட சாதி (தேவர் ) மக்கள் மட்டுமே தங்கள் பெண் பிள்ளைகளுக்கு வைக்கும் பெயர்.அது சொல்ல வந்த உயர்ந்த கருத்தின் காரணமாக கொண்டாடப்பட்டது.அம்மக்களிடையே இருக்கும் பிற்போக்கான எண்ணமான பச்சிளம்பெண் குழந்தைகளை கொல்லும் வழக்கம் குறித்த பேசியது .
கருத்தம்மா போலவே திரௌபதியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து தான் பேசுகிறது. அந்த பாதிப்பு குறித்து எதுவுமே தெரிந்து வைத்திராத மற்றும் வன்னியர் என்ற பெயரைக் கேட்டாலே வெறுப்பை உமிழும் ஆட்களுக்கு வன்னியர் பெண்கள் பாதிக்கப்பட்டால் எந்த ஒரு கவலையும் இல்லை. இந்தப்படம் பேசும் கருத்தினை படம் பார்க்கும் அனைத்து சமூகப் பெண்களும் புரிந்து கொள்வார்கள். இது முழுக்க முழுக்க பெண்களுக்காக எடுக்கப்பட்ட படம்.
திருமாவளவன் கட்சி ஆரம்பித்த புதிதில் வடமாவட்டத்தில் எங்கு கூட்டம் நடந்தாலும்., அவர் சார்ந்த சமூக இளைஞர்களை தன பக்கம் ஈர்க்க அவரின் கொள்கையை விட ,வன்னியர் பெண்களை தூக்கிட்டு வாங்க நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற விபரீத பேச்சுக்கள் தான் அதிகம் உதவியது.
இந்த விபரீத பேச்சுக்களால் பாதிக்கப்பட்ட ஒரு வன்னியர் பெண்ணின் வலி தான் திரௌபதி. இது போன்ற சம்பவங்கள் நடப்பது வெகு அரிது என்றோ அல்லது மிகைப்படுத்தி பேசப்படுகிறது என்று எதிர்தரப்பு கூறினாலும் ஒரு பெண்ணுக்கு அநீதி நடந்தாலும் அது குறித்து பேச வேண்டியது அவசியமாகிறது.
மேலும், தமிழ்சினிமாவில் வடமாவட்டங்கள் குறித்து வந்த படங்களின் எண்ணிக்கையினை விரல் விட்டு எண்ணிவிடலாம். வடமாவட்டத்தில் வாழ்பவர்களுக்கு பலகாலமாகவே திரையில் தோன்றுபவர்களை தங்களுடன் பொருத்திப்பார்த்துக் (Relate) கொள்ளவே முடியாது . தமிழ் படங்களில் தமிழ்பேசும் நாயகிகள் வேண்டும் என்ற கோரிக்கைக்கு நிகரானது தமிழ்படங்களில் வடமாவட்ட வாழ்வியல் சார்ந்த படங்கள் அதிகம் எடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை.
இந்தப்படம் சாதிக்குறித்து தீவிரமாகப் பேசினாலும் , கதாநாயகனுக்கு பெயர் (மாவீரன்) பிரபாகரன் என பெயர் வைத்திருப்பது , ஷங்கர் படத்தில் புனிதர்களாக முன்னிறுத்தப்படும் உயர்சாதியினர் இந்த படத்தில் ஊழல்வாதியாக காண்பித்திருப்பது, பெண்கள் மிக தைரியமாக சமூக சேவையில் ஈடுபடுவதை போன்ற காட்சி அமைப்புகள் பாராட்டத்தக்கவை.
மிக முக்கியமாக வடமாவட்டம் சார்ந்த படங்களை எடுப்பதற்கு திரௌபதியின் வெற்றி மிகப்பெரும் அளவில் வருங்காலத்தில் உதவிபுரியும் என்பது மிக மிக மகிழ்வான செய்தி.
இந்தப்படம் உருவாக்கத்தில் பங்களித்தவர்களுக்கும் , இயக்குனர் மோகனுக்கும் வாழ்த்துக்கள்.
செங்கதிரோன்
No comments:
Post a Comment