Tuesday, November 17, 2015

சரோஜா தேவி புத்தகத்தின் தோற்றமும் மறைவும்

சீனர்கள் கண்டுபிடித்த காகிதங்களை நல்ல செய்திகளை உலகறியச் செய்ய பயன்பட்டிருந்தாலும்  மறுபக்கம் சரோஜாதேவி என்றழைக்கப்படும் மஞ்சள் பத்திரிக்கைகளை அச்சிடவும் பயன்பட்டது எதிர்பாராத நிகழ்வுதான்.சுதந்திரத்திற்கு முன்பே மஞ்சள் பத்திரிகை காலாசாரத்தினை ஆரமித்து வைத்த பெருமை லட்சுமிகாந்தன் என்பவருக்கு சொந்தமானது. பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து உண்மை மற்றும் பொய் கலந்து எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் , ஒரு கட்டத்தில் இந்த செயல் மூலம் அவர்களிடம் பணம் பறிக்க ஆரம்பித்தார். இதே பாணியை தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோரிடம் செய்த பொழுது அவரைக் கொலை செய்து விட்டனர்.இதனால் தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.க்ருஷ்ணனும் சிலவருடங்கள் சிறை தண்டனை அனுபவித்தனர் .சுதந்திரத்திற்கு முன் லட்சுமிகாந்தன் செய்த வேலையினைதான்  "சைதை தமிழரசி" "சமூக ஆர்வலர்" என்றழைக்கப்படும்கிஷோர் சாமியும் அரசியல் வாதிகளின் வாழ்க்கை குறித்து அசிங்கமாகி எழுதி பிரபலமானார் . 

வடிவேலு அவர்களின்  நகைச்சுவைக் காட்சி ஒன்றில் சரோஜாதேவி புத்தகத்தினைப் பார்க்கும் பொது ஏற்படும் பரவசத்தினை மிக அருமையாக வெளிப்படுத்தி இருப்பார்.இந்தப் புத்தகங்களை பருவ வயதினர் முதல் வயதானவர் வரை வயது வித்தியாசமின்றி வாங்கிப் படித்தனர் எனபதற்கு இந்த நகைச்சுவை காட்சி சிறந்த உதாரணம் .இதனைக் கீழே உள்ள உங்கள் குழாய்  இணைப்பில் கண்டு மகிழுங்கள்.


 ஒரு சின்ன உண்மை சம்பவத்தின் மூலம் இதன் மீது பருவ வயதினர் கொண்டிருந்த ஈர்ப்பினை உணரவைக்கின்றேன். குற்றம் ம்கடிதல் படத்தில் பாலியல் கல்வியின் அவசியம் குறித்து பேசும் ஆசிரியைப் போன்ற ஒருவர் எங்களுக்கு ஒன்பதாம் வகுப்பில் இருந்தார். ஆண்கள் பள்ளிகூடம் என்பதால் எங்களுக்கு பெண்கள் குறித்த ஒரு புரிதலினை ஏற்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார். அந்த காலகட்டத்தில் காமிக்ஸ் புத்தகம் மிகப் பிரபலமாக இருந்து வந்தது. எங்கள் வகுப்பில் பழையபுத்தகம் கடை முதலாளியின் மகன் ஒருவன் இருந்தான். ஒரு சிலர் அவனிடமிருந்து இந்தப் புத்தகங்களை வாங்கிப் படித்துக் கொண்டிருந்தனர். காமிக்ஸ் புத்தகங்களுடன் சரோஜாதேவி புத்தங்களையும் எடுத்துக் கொண்டு வந்து மாணவர்களிடம் விற்பனை செய்ய ஆரம்பித்தான். ஒரு நாள் மதியம் எங்கள் ஆசிரியர் வகுப்புத் தலைவனான என்னை அழைத்து இன்று மதியம் நம் வகுப்பில் அனைத்து மாணவரின் பைகளையும் சோதனை செய்யப போகிறோம் தயாரக இரு என்றார். எங்கள் திட்டப்படி அன்று அனைத்து மாணவர்களையும் வெளியில் நிற்க வைத்து விட்டு ஒவ்வொரு பையாக சோதனை செய்தோம். வகுப்பில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்களின் பைகளிலிருந்து சரோஜாதேவி புத்தகங்களை பறிமுதல் செய்தோம். எங்கள் ஆசிரியர் யாரையும் கண்டிக்கவில்லை, அந்த மாணவனையும் தண்டிக்கவில்லை.இந்தப் புத்தகத்தைப் படிப்பதானால் ஏற்படும் மோசமான பின் விளைவுகள் குறித்து மிக சுருக்கமாகக் கூறினார்.

இப்படிப்பட்ட பரவசம் கொடுக்கும் இந்தப் புத்தகங்கள் இணையதளம் வருகைக்குப் பின்னர் சுவாரசியமற்ற ஒன்றாக மாறிவிட்டது. மூலைக்கு மூலை இணையதளம் கடைகள் தொடங்கிய பின்னர் அங்கே சென்று சரோஜோ தேவி புத்தகங்களில் வரும் நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கும் அனுபவம் கிடைத்து. வெளிநாட்டில் இருந்து வெளியான இந்தக் காட்சிகளை கண்டு கொண்டிருந்தவர்களுக்கு "சுதேசி" தயாரிப்பாளராக மாறிய டாக்டர் பிரகாஷ் அவர்கள் உள்ளூரிலேயே இவற்றை எடுத்து பின்னர் பலகாலம் சிறை தண்டனை அனுபவித்தார்.


இந்தப் புத்தங்கள் ஒரு வழியாக அச்ச்டிப்பதே நின்று விட்டாலும் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஏகப்பட்ட பாலியல் வீடியோக்கள் இளைய சமூகத்தை சீரழிக்கின்றன.என்னுடைய தொடர் பதிவான பாலியல் உணர்வு ஷங்கர் படமா ராம் படமா என்றப் பதிவினில் இது போன்ற வீடியோக்களை ஏன் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கின்றேன்.

1.சேலம் சிவராஜ் வைத்தியரும் பாலியல் நிபுணர் நாராயண ரெட்டியும் : இரு துருவங்கள்
2.பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+
3.பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+ -பாகம் :2
4.பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+ -பாகம் :3

நன்றி 
செங்கதிரோன் 

No comments: