Wednesday, August 29, 2018

பப்பாளி எழுத்தாளர்:

பொய் சித்தர்கள் என்ற தலைப்பில் சரவணன் சந்திரன் மின்னம்பலத்தில் தொடர் கட்டுரைகளை எழுதி குவித்திருக்கின்றார் . உலகின் எந்த ஒன்றைப்பற்றியும் 5000 வார்த்தைகளைத் தாண்டியும் எழுதும் வல்லமை பெற்றவர் சித்த மருத்துவம் குறித்து எழுதியதில் வியப்பில்லை.

அந்தக்கட்டுரைகளில் இருக்கும் செய்திகள் அனைத்துமே அரதப்பழசானாவை , எந்த விதமான தகுந்த உதாரணங்கள் அற்ற மேம்போக்காக எழுத்தப்பட்ட அறிக்கை .

நவீன மருத்துவம் குறித்து கூறப்படும் குற்றசாட்டுக்களுமே இன்றும் ஒரு கற்பனையுடனே மட்டுமே எழுதப்படுகின்றது. துறை சார்ந்தவர்கள் கொடுக்கும் வாக்குமூலங்கள் தான் உண்மைக்கு மிக அருகில் இருக்கும் . உலகம் முழுக்க மருத்துவ துறைகளில் நடக்கும் பல்வேறு மோசடிகள் மருத்துவர்களுக்கு நன்கு தெரியும் . சித்த மருத்துவ மருந்து தயாரிப்பு , விற்பனை , நோயாளிகளுக்கு தேவைக்கு அதிமான மருந்துகளை அவர்களிடம் திணித்தல் போன்றவை நான் சில காலம் மருத்துவராக பணி செய்தபோது அறிந்து கொண்ட தில்லுமுல்லுகள்.

இன்றைய நவீன யுகத்திற்கு தன்னை உட்படுத்திக் கொளவதற்காக சித்த மருத்துவத்தில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன. சரவணன் சந்திரன் போன்ற எழுத்தாளர்கள் இது குறித்தது தான் வெகுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். 

பப்பாளி எழுத்தாளர் என்று குறிப்பிடுவதற்கு காரணம் , அவருடைய நாவலில் இது பற்றிய குறிப்புகள் வரும் , அது மட்டுமன்றி பப்பாளி இலை வைத்து சாண்டிவிச் சாப்பிடும் பழக்கமுடையவர்.

எழுத்தாளர்கள் மருத்துவத்துறை குறித்து ஆர்வமாக இருத்தல் நல்லதே , ஆனால் அது அரைகுறையாக இருந்தால் ஆபத்தானது. 

இறுதியாக ஒரே வரியில் சொல்வதானால் சித்தர்கள் என்றுமே பொய் கிடையாது .

நன்றி 
செங்கதிரோன்