வட மாநிலங்களில் மிகப்பெரும் பதற்றமான சூழல், வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்தால் ஏற்பட்ட்டுள்ளது. PCR வழக்கு என்பது பட்டியலின மக்களுக்கு மிகப்பெரும் பாதுகாப்பு கவசமாக பல ஆண்டுகளாக இருக்கின்றது . இந்த சட்டம் இல்லாமல் போயிருந்தால் , இந்நேரம் பட்டியலின மக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்திருக்கும் . ஏனென்றால் பொருளாதார ரீதியாக எந்த பிடிப்பும் இல்லாமல் வாழும் அவர்களை எந்தளவுக்கு துன்பப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு இன்னலுக்குள்ளாக்கி இருக்கின்றார்கள்.
இந்த வன்கொடுமை தடுப்பு சட்டம் என்பது , பட்டியலின மக்களை சாதி ரீதியாக இழிவுபடுத்தினால் உடனடியாக தண்டனை அளிக்கப்படும். குண்டர் சட்டம் போல ஜாமீன் இல்லாத சிறை தண்டனை என்பதனால் இது மிக வலிமையான சட்டமாக பார்க்கப்படுகின்றது.
திடீரென்று ஏன் இந்த சட்டத்தினை நீர்த்துப் போக செய்யும் அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது?
இதற்கான விடை பலரும் இந்த வழக்கு பொய்யாக பதிவு செய்யப்படுகின்றது , அல்லது மிரட்டுவதற்கு கூட இந்த சட்டத்த்தினை பட்டியலின மக்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்று மற்ற சமூகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். மிகவும் குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும்பான்மை சாதிகளான வன்னியர் , தேவர் , கவுண்டர் போன்ற சாதிகளின் தலைவர்கள் தான் இந்த சட்டத்தினையே நீக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர் . ஆனால் ஆண்டாண்டு காலமாக மேற்சொன்ன சமூகத்தினர் தான் இந்த பட்டியலின மக்களை துற்புறுத்தியதால் தான் இந்த சட்டமே கொண்டு வரப்பப்ட்டது .
பல கோடி பேர் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிக மிக சாதரணமாக சேரி பிகேவியர் என்றொரு சொல்லை , பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி குறிப்பிட்டார் .ஆனால் அந்த சொல்லுக்காக இன்று வரை அவர் மன்னிப்பு கேட்கவில்லை . ஆனால் இது போன்ற ஒரு கருத்தினை மற்ற சமூகம் குறித்து சொல்லியிருந்தால் அந்த நிகழ்ச்சியே தடை செய்யப்பட்டிருக்கும். இது தான் இந்தியா முழுக்க பட்டியலின மக்களின் நிலைமை.
நான் இதற்கு முன்பு எழுதிய வெள்ளை நிற தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பதிவில் வட அமெரிக்காவில் வாழும் native indians என்ற சிவப்பிந்தியர்களுக்கு பல்வேறு சட்ட பாதுகாப்புகள் உள்ளன. அவர்களின் நிலத்தினை ஆக்கிரமித்து உருவானது தான் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள்.
என்னைப்பொறுத்தவரை , வரதட்சணை தடுப்பு சட்டம் , பாலியல் தடுப்பு சட்டம் போல தீண்டாமை சட்டமும் மிக வலிமை வாய்ந்த ஒன்றாகவே இருக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
நன்றி
செங்கதிரோன்