தினமலரில் வெகுகாலமாக வந்து கொண்டிருக்கும் அந்துமணி கேள்வி பதில்
அனைவருக்கும் தெரிந்திருக்கும். பெரியார், கலைஞர் குறித்து கிண்டலாக
பதிலளிப்பது ,திராவிட கட்சிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்கள் என்று
வாரமலரில் வாராவாரம் வரும். நீண்ட காலமாக இன்றுந்து வரும் இந்த பகுதிக்கு
தகுந்த பதிலடிகள் இதுவரை இல்லாமல் இருந்து வந்தது. திராவிடர்களின் அந்த
மனக்குறையைப் போக்கும் வகையில் முகநூலில் இளம் தலைமுறைக்கு திராவிட
சிந்தனைகள் குறித்து பாடம் எடுத்து வருபவர் தான் கிளி மூக்கு அரக்கன்.
இருவருக்கும் உள்ள மிக முக்கிய ஒற்றுமை unknown identity அதாவது பெரும்பான்மையானோருக்கு அந்துமணி மற்றும் கிளிமூக்கு அரக்கன் யாரென்றே யாருக்கும் தெரியாது.
இருவருமே தங்களால் இயன்ற அளவுக்கு மக்க்ளிடம் திராவிடம் ஆரியம் குறித்த சிந்தனைகளை பரப்பி வருகின்றனர்.