Wednesday, July 27, 2011

எங்கே ஏஆர் .ரகுமான் ?


இளையராஜா என்றாலே நினைவுக்கு வருவது மனதை மயக்கும் பாடல்கள்.காதல் ,சோகம்,அழுகை ,அம்மா,குழந்தைகள் என அவர் தொடாத உணர்வுகளே இல்லை. அவருடைய இசை நம்மை வேறொரு உலகத்துக்கு கொண்டு செல்லும் சக்தி வாய்ந்தது.உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டாலும் அவரின் இசை நம்முள்ளே இருக்கின்றது.அந்த இச்சையை இசைத்தட்டுகள் அடக்கி கட்டத்தில் தொடங்கி இன்று ipod மற்றும் ipad களிலும் அதை ஏற்றி கேட்டுகொண்டிருக்கின்றோம்.ஆனால் இன்னும் அதன் மீதான் ஈர்ப்பு குறையவே இல்லை.


நகரங்களில் நிலைமை கொஞ்சம் மாறி இருக்கின்றது. குறிப்பாக பெருநகரங்களான சென்னை மற்றும் கோவையில் இளைய சமுதாயம் மேற்கத்திய இசையை நோக்கி சென்றுகொடிருக்கின்றார்கள் .பிற நகரங்களில் இசையைப் பற்றி பெரிதான ஈர்ப்பு இல்லாவிட்டாலும் கூட படங்களில் வரும் ஹிட் பாடலகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனை நாம் ன் மியூசிக் மற்றும் இசைஅருவி சேனல்களில் பாடல் விருப்பம் தெரிவிப்பவரின் ஊர்ப்பெயர்களிலிருந்து அறியலாம்.கிராமத்து மக்கள் என்னதான் செய்கிறார்கள் ? அவர்களுக்கு இசையைப் பற்றிய ஞானம் என்பது தாங்கள் விருப்பப்பட்டதை கேட்டதை விட வானொலி ,பேருந்து பயணத்தின் பொது கேட்கும் இசை இவைகளால் மட்டுமே அவர்களின் இசையின் பரிச்சியம் ஏற்படுகிறது. இதுபோன்றதொரு நிலை நகரத்தில் இல்லை அவரவர்களுக்கு விருப்பமான பாடலை தேர்ந்தெடுத்து கேட்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இன்றும் சிறு நகரங்கள் மற்றும் கிரமத்து பகுதிகளில் இயங்கும் பேருந்துகளில் முழுக்க முழுக்க இளையராஜாவே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார். .ஆர் .ரகுமான் இசை என்பது வெகு குறைவாகவே ஒலிக்கப்படுகின்றது. இந்த தலைமுறை கிராமத்து இளைநர்களின் விருப்பமாக இளையராஜாவே இருக்கின்றார் .அதையும் தாண்டி அவர்கள் கொஞ்சமா முக்கியத்துவம் கொடுப்பது யுவன் சங்கர் ராஜாவுக்கே இந்த எல்லையோடு அவர்களின் இசை மீதான பரிச்சியம் நின்று விடுகின்றது. இது அவர்களின் குறையா அல்லது மற்ற இசையமைப்பாளர்களின் குறையா என்றால் முழுக்க முழுக்க மனதிற்கு நெருக்கமான ஒன்றை விரும்பி ஏற்றுக்கொள்ளும் தன்மை என்றே குறிப்பிடலாம்.

இளையராஜாவின் இசைப்பயணம் உச்சகட்டத்தில் இருந்த காலம் குறைந்தது இருபதாண்டுகளுக்கு முன்னால் அதற்குப்பிறகு .ஆர் .ரகுமான் வந்தார் அவரின் இசைப்பயணம் மிக குறுகிய காலகட்டம் மட்டுமே தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து இருந்தது. அதற்கு முழுமையான காரணம் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனரான மணிரத்னம் அவரை இந்திக்கும் கொண்டு சென்றார் .அன்றிலிருந்து அவர் தமிழ் சினிமாவை விட்டு வெகு தூரம் சென்று விட்டார். அடுத்ததாக ஹாலிவுட்டுக்கும் சென்றார் .இவை அனைத்தும் தமிழ் சினிமாவுக்கும தமிழனுக்கும் பெருமை தான்


ஆனால் அவரின் பங்களிப்பு தமிழ் சினிமாவுக்கு மிக குறைவு. அவர் இசை அமைத்த படங்கள் அனைத்தும் நகரம் சார்ந்ததாக இருந்ததாலும் அவை கிராமத்து மக்களின் மனதிற்கு நெருக்கமாக அவை அமையவில்லை.அவர் இசையமைத்த கருத்தம்மா படத்தின் இசை மிக அற்புதமானது என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் அவர் இன்னும் அதைப் போன்ற இன்னும் நிறைய படங்களுக்கு இசை அமைத்து இருந்திருப்பின் தமிழ் சினிமாவின் பிதாமகனாக மாறிஇருக்கக்கூடும் .முன்னர் குறிப்பட்டது போல இருபது ஆண்டுகளுக்கு முன்னால் உச்ச கட்டத்தில் இருந்த இசைமேதை இளையராஜவின் பாடல்களே இன்றும் அனைவரின் விருப்ப்பாடல்களாக இருக்கின்றன. பலர் இதற்கு காரணமாக அவரின் படத்தின் கதைக்களங்களையே குறைகூறுகின்றனர். ஆனால் இன்றும் மிகசிறந்த கதை அம்சங்களுடன் இயக்ககூடிய திறமையான பல இயக்குனர்களை இருகிறார்கள். குறிப்பாக சொல்வதானால் சிகுமார், பாண்டிராஜ்,வசந்தபாலன்,தங்கர்பச்சான்,சேரன்கரு.பழனியப்பன்,சீனுராமசாமி, லிங்குசாமி,செலவ்ராகவன்,சுசீந்திரன் என் மிகப் பெரிய பட்டியலே போடலாம். இவர்கள் அனைவருமே யதார்த்தமான கதைகளை படமாக்குபவர்கள். அண்ணல் இன்றைய .ர். ரகுமானின் சம்பளத்தில் இவர்கள் படமே எடுத்து விட முடியும்.



உங்களின் திறமை எவ்வளவு பெரிதாக இருந்தாலும், பல்வேறு விருதுகளி வாங்கி குவித்து இருந்தாலும் காமன்மேன் என்று சொல்லப்படும் பொதுமக்களின் உணர்வுகளை சென்றோடயதவறை அவற்றுக்கான மதிப்பு மிகவும் குறைவே. நினைத்துப்பாருங்கள் இன்னும் இருபது ஆண்டுகள் கழித்தும் நாம் இளையராஜாவின் இசையை மட்டுமே நாம் கேடடுக்கொண்டிருக்க முடியும் அல்லது அனைவரும் வேற்று மொழி பாடல்களை நோக்கிச்செல்ல்வேண்டிய நிலைவந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை . .ஆர் . ரகுமான் ஆங்கிலப் படங்களுக்கு இசைஅமைக்கும் போதும் உலகின் மிகப் பெரிய இசை மேதைகளுடன் புகைப்படத்தில் காணும்போதும் அவர்களை இசை தொகுப்பில் காணும்போதும் மெய்சிலிர்க்கிறது . அகான் (Akon) எனபவரின் you are beautiful பாடலில் .ஆர் .ரகுமானை காணும்போது மகிழ்க்கு எல்லையே இல்லை எனலாம்.ஏனெனில் அகான் அவ்வளவு பிரபலமான பாடகர் அவருடன் இணைந்து .ஆர் . தோன்றுவது மிகப் பெரிய சாதனை என்றே சொல்லலாம்.



ஏன் இன்றைய இசையமைப்பாளர்கள் பங்களிப்பு சிறப்பாக இல்லையா என்றால் அவர்களின் இசையமைப்பின் தரம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை ஒரு படத்தில் மிக சிறப்பாக இசையமைத்தால் அடுத்த படத்தில் நம்மை பழிவாங்கிவிடுகின்றார்கள். இசைக்காகவே செல்லும படங்கள் என்றால் அவை .ஆர் .ரகுமான் மற்றும் இளையராஜா என்ற இருவர் மட்டுமே. யுவன் மிகச் சிறப்பான இசை கொடுத்து இருந்தாலும் அவை உடன் பணியாற்றும் இயக்குனர்களின் படங்களை பொறுத்தே அவை நன்றாக இருக்கின்றன. செல்வராகவன் படத்தில் அவர் கொடுத்த இசை அனைத்தும் இளையராஜாவின் இசைக்கு ஒப்பானவை. மீண்டும் மீண்டும் கேட்கலாம் அந்தளவுக்கு சிறப்பானவை. மற்ற படங்களின் இசை சுமார் ரகம் என்றே குறிப்பிடலாம். ஆனாலும் பருத்தி வீரன் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தன்னால் கிராமத்து இசையும் சிறப்பாக கொடுக்க முடியும் என்பதனை நிரூபித்தார். இந்த படத்தினை அடுத்து அவன் இவன் படத்தினை மிகவும் எதிர்பார்த்தேன் ,ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.



அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் மிக அதிகம் எதிர் பார்க்கப்பட்ட இசைஅமைப்பாளர். கவுதம் மேனனுடனான இவரின் இசை அனைத்தும் நீங்கா புகழ் பெற்றவை . இருப்பினும் மற்ற படங்கள் மிகவும் ஏமாற்றியவை குறிப்பாக ஆதவன், அருள் போன்ற படங்களை சொல்லலாம் .ஜி. வி .பிரகாஷ் இவர்தான் நம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்றால் மிகையல்ல . மிகவும் இளவயதில் மிக சிறப்பான இசையை கொடுத்துக்கொண்டிருப்பவர். வெயில் ,ஆடுகளம்,மதராசப்பட்டினம் ,தெய்வதிருமகள் இவை மூன்றும் மிகச்சிறந்த படைப்புகள். அடுத்து இமான் இவர் மைனா படத்தின் மனதின் மூலம் நம் அனைவரையும் வசப்படுத்தியவர். எனவே இனிவரும் படங்களின் மூலமே இவரைப்பற்றி கணிக்க முடியும்.


ஹாரிசைப் போன்றே மிகவும் எதிர்பார்க்கபட்ட்வர் பரத்வாஜ் ஆனாலும் பல படங்களின் இசை எடுபடவே இல்லை . சில மெலடி பாடல்களை கொடுத்து இருப்பினும் அவை எல்லாப் படங்களிலும் தொடர்ராதது ஏன் என்றே புரியவில்லை. வித்யாசாகர் மொழி மற்றும் இயற்கை படங்களின் வெற்றிக்கு ஒரு காரணம். இயற்கை படம் வணிகரீதியாக வெற்றி அடைவில்லை என்றாலும் தேசிய விருது பெற்றது நினைவிருக்கலாம், என் நம்புகிறேன். தெலுங்கு மற்றும் மலையாள படங்களுக்கு அதிகம்மாக் இசைமைப்பாதலும் இவரைப் பற்றி குறிப்பிட்டு கூற முடிய வில்லை. இன்னொரு இளையராஜா தமிழ் சினிமாவுக்கு கிடைத்து விட்டாரா என்று நினக்கும் அளவுக்கு அனைவரையும் தன பக்கம் கவர்ந்தவர் ஜேம்ஸ் வசந்தன். சுப்ரமணியபுரம் படத்தில் வரும் கண்களிரண்டால் பாடல் அளவுக்கு இன்னொரு பாடல் தமிழ் சினிமாவில் இளயராஜாவை தவிர்த்து யாரும் வழங்கமுடியாது .ர். ரகுமான் உட்பட என்பதனை ஆணித்தரமாகக் கூறுவேன். ஆனால் இவர் அதிகமான படங்களுக்கு இசையமைக்காமல் விஜய் டி.வி .யில் நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டிருப்பதை பார்த்தல் வெறுப்பு தான் வருகிறது. இவர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால் நல்ல பாடல்களை கேட்கும் பாக்கியம் நமக்கு கிடைக்க வாய்ப்பு
இருக்கின்றது.

மணிஷர்மாவும்,தேவிஸ்ரீ பிரசாத்தும் தெலுங்கு படங்களுக்கே அதிகம் இசையமைத்து இருக்கின்றார்கள் அவைக்ளின் ரீமேக் மூலமாகவே அந்த பாடல்களும் இருப்பதனால் அவை அவ்வளவு சிறப்பான இடத்தைப் பிடிக்க முடியவில்லை. விஜய் ஆண்டினி ,தீனா.ஸ்ரீகாந்த் தேவா மூவருமே குத்துப் படல்களை யார் சிறப்பாக இசை யமைப்பது என போட்டிபோட்டுக் கொண்டிருகின்றார்கள் எனவே அவர்களை இந்த வரிசையில் சேர்ப்பது மிகக் கடினம்.அக்கட பூமியில் என்ன நிலைமை என்று பார்ப்போம்.உங்களுக்கு தெலுங்கு மற்றும் கன்னட நண்பர்கள் இருந்தாலோ, நீங்கள் அங்கு வசித்தவர்கலாகவோ அல்லது வசித்துகொண்டிருந்தீர்கலானால் நன்கு தெரியும் அவர்களின் இசை ரசனையைப் பற்றி ,எனக்குதெலுங்கு மற்றும் கன்னட நண்பர்கள் உண்டு அவர்கள் முகபுத்தகதத்தில் ஷேர் பண்ணும் மெலடி பாட்டுகள் அனைத்தும் இளையராஜவினுடைய பாட்டாகத் தான் இருக்கும்.அவர்களின் Ipod ல் இருக்கும் பாடல்களும் இளையராஜா மற்றும் .ஆர் .ரகுமான் பாடல்களே அதிகமாக இருக்கும்.இதே நிலை தான் கன்னட நண்பர்களுக்கும். இதை குறிப்பிட விரும்பியது ஏனேன்றால் இதே நிலைமை நமக்கும் நமது எதிர் கால சந்ததியினருக்கும் ஏற்படும் வாய்ப்பு இருகின்றது.



இன்றைய காலகட்டத்திலும் .ஆர் .ரகுமானின் இசையை கேட்பதற்காக மொழி புரியாவிட்டாலும் அவர் இசையமைத்த ஹிந்தி பாடல்களை கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.குறிப்பாக ரங்கீலா ,தால் மற்றும் டெல்லி 6 ஆகியவை மிக அற்புதமான இசையில் அமைந்த படங்கள்.அடுத்ததாக ஹாலிவூட் படங்களில் ஸ்லம் லாக் மில்லியனர் அனைவரும் அறிந்த படம் ஆனாலும் நேரடியாக தமிழ் பாடலையே ஹாலிவூட் படத்தின் (ACCIDENTAL HUSBAND ) கிளைமாக்ஸ் காட்சியில் வைத்து நம் அனைவரையும் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டுசென்றவர்.

இசைப்புயலே உங்கள் பார்வை சிறிது தமிழ் சினிமாவின் மீது விழ வேண்டும். தமிழினை தமிழனை உலகம் அறியச் செய்த நீங்கள் தமிழ் சினிமாவையும் தமிழ் இசையையும் வாழ வைக்கவேண்டும் .இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு முழுக்க கிராம் நகரம் எங்கும் உங்கள் இசைவெள்ளம் பரவவேண்டும்.


.