பாடலைக் கேட்கும் பொது நம் மனம் எங்கும் அலைபாயாமல் பாடலிலேயே ஒன்றிவிடக் கூடிய அளவுக்குப் பாடும் திறமை வாய்ந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே ,அவர்களில் ஒருவர் தான் எமிலி ஸாண்டே .ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த இவர் கறுப்பின தந்தைக்கும் வெள்ளையின தாய்க்கும் மகளாக 1987ல் பிறந்தார். சிறுவயதிலேயே பாடும் திறமையில் சிறந்து விளங்கினாலும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் அதன் விளைவாக மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் நரம்பு அறிவியலில் (Neuroscience) முதுகலை பட்டம் பயின்றார்.
இவருடைய முதல் பெயர் அடெல் தான், இருப்பினும் இதே பெயரில் மற்றோரு புகழ் பெற்ற பாடகி இருந்ததால் தன பெயரை ஸாண்டே என்று மாற்றிக் கொண்டார்.2010ல் தனது இசைப்பயணத்தினைத் தொடங்கிய இவர் குறைவானப் பாடல்களே பாடி இருப்பினும் இசை ரசிகர்களை எளிதில் தன் உணர்ச்சி மிக்க குரலால் வசப்படுத்திக் கொண்டார் . கீழே உள்ள இணைப்பில் புற்று நோயால் பதிப்படடைந்த தன் தோழிக்காக பாடும் பாடலினைப் பாருங்கள்.
என்பக்கத்தில் என்ற அர்த்தத்தில் next to me என்ற பாடலும் மிக பிரபலாமான ஒன்று அதனையும் கண்டு கேட்டு மகிழுங்கள்.
இங்கிலாந்து நாட்டில் இசைக்காக வழங்கப்படும் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கின்றார். இந்த தேவதையின் இசை மழையில் நனைந்து இந்த வார விடுமுறையை இன்பமாகக் கொண்டாடுங்கள் நண்பர்களே
நன்றி
செங்கதிரோன்