அரசியல்வாதிகளை ஒட்டுண்ணி ,பச்சோந்தி என்று இன்ன பிற உயிரினங்களுடன் ஒப்பிட்டு எழுதி இருப்பார்கள். தற்பொழுது எல்லாம் ஒரு படி மேலே போய் கழுதை, பன்றி, நாய் என்று சொல்லும் அளவுக்கு அரசியல் தரம் தாழ்ந்து விட்டது. ஆனால் நான் இங்கே எம்.ஜி.ஆருடன் ஒப்பிடும் மைக்ரோகலியாயாவானது ஒரு மிக சிறிய உயிரினம் கண்களுக்குப் புலப்படாது, நுண்ணோக்கி வைத்து மட்டுமே பார்க்க இயலும்.இது நமது மூளையில் வசிக்கின்றது.
நான் மூளை தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருப்பதால், அதுவும் நான் மேற்சொன்ன உயிரினமான மைக்ரோக்லியாவின் செயல்பாடுகளை மறதி நோய் மற்றும் பக்கவாதம் உண்டாகும் பொது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து சோதனைகள் செய்து வருகின்றேன். இந்த நீண்ட கால ஆராய்ச்சியில் இந்த உயிரினத்திற்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் கண்டுகொண்டேன்.
இந்தப் பதிவானது தமிழ்ப் பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக அரசியலையும் அறிவியலையும் இணைத்து எழுதப்பட்ட பதிவு , இதை எழுதுவதற்கு காரணமாக இருந்த எம்.ஜி .ஆருக்கே இந்தப் பதிவினை காணிக்கையாக்குகின்றேன்.
இருவருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை அறிந்ததற்கு மிக சமீபத்தில் படித்த இரண்டு புத்தகங்கள் துணையாக அமைந்தன.முதலாமனது மைக்ரோக்லியா பற்றிய புத்தகம் அதில் இருமுனை கொண்ட வாள் போன்று இந்த உயிரினம் நம் மூளையில் செயல்படுவதாகக் கூறி முடித்திருந்தனர்.அதாவது வாளின் ஒரு முனை கெட்டதை அழிக்கும் பணியிலும் மற்ற முனை நல்லதை அழிக்கும் பணியிலும் ஈடுபடுகின்றது என்ற விளக்கத்தினை அளித்திருந்தனர்.எழுத்தாளர் தமிழ் மகனின் ஆண்பால் பெண்பால் புத்தகம் தான் எம்.ஜி.ஆர். எவ்வாறு மைக்ரோகலியா போன்று செயல்பட்டார் என்பதனை தெள்ளத் தெளிவாக உணர்த்தியது.அதாவது அப்புத்தகத்தில் பெண்பால் எம்.ஜி.ஆர் செய்த சாதனைகள் குறித்து பேசுவதும் , ஆண்பால் மாறாக அவரின் தவறுகளை சுட்டிக்காட்டும் கதாபாத்திரமாக அமைக்கபட்டிருக்கும். இந்த இரண்டு புத்தகங்களின் வாயிலாகத்தான் இருவருக்குமான ஒற்றுமையை என்னால் உணர முடிந்தது.
நான் முன்பே சொன்னது போல மைக்ரோக்லியா எப்படி இருமுனை கொண்ட வாளாக நம் மூளையில் செயல்படுகினதோ அவ்வாறே எம்.ஜி.ஆர் அவர்களும் தமிழ் சினிமா மற்றும் அரசியல் உலகில் செயல்பட்டார் என்பதனை பார்ப்போம்.
எம்.ஜி. ஆர் செய்த நல்லவற்றில் மிக முக்கியமானது காமராஜரின் மதிய உணவு திட்டத்தினை விரிவுபடுத்தி சத்துணவு திட்டத்தினை தமிழகம் முழுக்க சிறப்பாக செய்தது , எத்தனையோ ஏழை மாணவர்கள் ஒரு வேளை உணவாவது சரியான முறையில் உண்ண வாய்ப்பு கிட்டியது.இதனை முன்மாதிரியாகக் கொண்டு பலவேறு மாநிலங்களும் இது போன்ற திட்டத்தினை தொடங்கினர்.
அடுத்து ஏழைகளுக்கான பல்வேறு இலவச திட்டங்கள் அவர்கள் வாழ்வில் ஏற்றம் அடைய உதவின, இத்திட்டங்களுக்கான நிதியினைப் பெற செயல்படுத்த மத்திய அரசாங்கத்துடன் இணக்கமாக செயல்பட்டார்.தாய்க்குலங்கள் அன்றும் இன்றும் அ .தி.மு.கவிற்கு ஆதரவாக இருப்பதற்கு முக்கியக் காரணம் எம்.ஜி.ஆர் தனது திரைப்படங்களின் வாயிலாக அவர்கள் மனதில் இடம் பெற்றிருந்ததை ஆரசியலுக்கு வந்த பின்னரும் அதனை தக்க வைக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் தான்.
கோவில்களை சீரமைத்தல் , நினைவு சின்னங்களை சரிவர பாராமரித்தல் என்ற செயல்களிலும் ஈடுபட்டார்.திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நாத்திக உணர்வு மேலோங்கி ஒரு வித அச்சத்துடன் ஆன்மீகவாதிகள் இருந்ததைப் போக்கி அவர்களுக்கு பல சலுகைகள் அளித்தார். குறிப்பாக கிருபாந்த வாரியார் மற்றும் மருவத்தூர் பங்காரு அடிகளார் ஆகியோரை கவுரவித்தார்.கோவில்களை சீரமைத்தல் , நினைவு சின்னங்களை சரிவர பாராமரித்தல் என்ற செயல்களிலும் ஈடுபட்டார்.தெய்வ பக்தி கொண்டவராகவும் ,சோதிடத்தில் நம்பிக்கைக் கொண்டவராகவும் இருந்தது ஆத்திக நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு மிக ஆறுதலாக இருந்தது. ஏனென்றால் திராவிடர் கழக மரபில் வந்த ஒரு கட்சி இது போன்ற ஆன்மீக நம்பிக்கைகளில் நாட்டமில்லாமல் இருக்கும் என்று நம்பியவர்களுக்கு எம்.ஜி .ஆரின் இந்த நடவடிக்கைகள் வியப்பளித்ததோடு மட்டுமன்றி அவருக்கு அரசியல் ரீதியாக ஆதரவு அளிக்க ஆரம்பித்தனர்.
இவ்வாறு அவரின் சாதனைகளை துறை வாரியாக எழுதிக் கொண்டே போகலாம்.பத்தாண்டுகள் ஒரு நிறைவான ஆட்சியினை அளித்து பொன்மன செம்மல் போன்ற பல பட்டங்களுடன் இந்தியாவின் உயரிய விருதான "பாரத ரத்னாவினையும்" பெற்று அழியாப் புகழடைந்தார் என்றே சொல்லலாம்.
மேலே எம்.ஜி. ஆர். அவர்களின் வாளின் ஒரு முனை செய்த நல்லவற்றை பார்த்தோம். தற்பொழுது மறுமுனை செய்த தீயவைகள் குறித்து பார்ப்போம். பதிவின் நீளம் கருதி இந்தப் பகுதியினை மிக சுருக்கமாகவே எழுதுகின்றேன்.
1. சொத்துக் கணக்கு கேட்டு கட்சியில் இருந்து விலக்கப்பட எம்.ஜி.ஆர் , இந்தியாவில் வருமான வரியினை ஒழுங்காக கட்டாதவர்களில் ஒருவராக இருந்தார்.
2.விடுதலைப் புலிகளுக்கு மிக ஆதரவாக இருந்தது அனைவருக்கும் தெரியும், அந்த அமைப்பின் ஆன்டன் பாலசிங்கம் எம்.ஜி.ஆர். வீட்டின் பாதாள அறையில் பணக் கட்டுகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்ததாகவும் அவற்றில் இருந்தே தங்களுக்கு அவர் உதவி செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.அவை ஊழலில் வந்தப் பணம் என்பதை நான் விளக்கி சொல்ல தேவையில்லை.
3. மது விலக்கு கொண்டு வந்தாலும் கள்ள சாராய ஒழிப்பில் தீவிரமாக செயல்படவில்லை என்ற பரவலான குற்ற சாட்டும் உண்டு. மேலும் மீண்டும் மதுக்கடைகளை திறந்து வைத்து தற்பொழது கல்வி வள்ளலாகத் திகழும் ஜேப்பியார் போன்றோரை பணக்காராக்கிய பெருமை எம்.ஜி.ஆரையே சேரும்.
4. சத்துணவு திட்டம் கொண்டு வந்து கல்விப் புரட்சி ஏற்படுத்தினாலும் மறுபுறம் தனியார் பள்ளிகளுக்கு அதிக அளவில் அனுமதி வழங்கி கல்வியை வியாபாரமாக்க பிள்ளையார் சுழி போட்டவர் எம்.ஜி .ஆரே தான் .
5. பகுத்தறிவு பிரச்சாரமும் தமிழுணர்வும் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். இந்த இரண்டுக்கும் எந்த முக்கியத்துவமும் அளிக்காமல் மக்களை மீண்டும் கற்காலத்திற்கு அழைத்துச் செல்லும் மூடப் பழக்க வழக்கங்கள் தொடர வழி வகை செய்தார்.திராவிட கருத்துக்கள் மற்றும் தமிழரின் தனித்தன்மை குறித்தான பார்வைகளை மழுங்கடிக்கச் செய்ததில் எம்.ஜி .ஆருக்கு முக்கியப் பங்குண்டு.
6. ஏழைகளுக்கு இலவச திட்டங்களை ஒரு பக்கம் செய்து கொண்டு இருந்த வேளையில் நடிகர் நடிகைகள் மற்றும் தன்னுடைய புகழ் பாடிகளுக்கு அரசாங்க மற்றும் புறம்போக்கு சொத்துக்களை தானமாக வழங்கினார்.
7. ஜனநாயக முறையில் நம்பிக்கை அற்ற மனிதராகவே இருந்தார், எந்த ஒரு போராட்டத்தினையும் அமைதி வழியில் தீர்வு காணாமல் காவல் துறையின் துணை கொண்டு அடக்கி ஒடுக்க நினைத்தார்.
இறுதியாக சொல்ல விழைவது என்னவென்றால் எப்படி மைக்ரோக்லியா என்ற உயிரினம் நல்லவை கெட்டவை இரண்டையும் ஒரே நேரத்தில் செய்கின்றதோ அதையே தான் எம்.ஜி,ஆரும் செய்தார். அவருக்கு பத்திரிகைகள் புகழ் பாடியதால் இன்றும் பாடிக்கொண்டிருப்பதால் அவரின் மறுபக்கம் சரிவர வெளிக்கொணரப்படவே இல்லை.
மேலும் அறிந்து கொள்ள வினவின் இந்தப் பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
இந்த நீண்ட நெடிய இந்தப் பதிவினை வாசித்த உங்களுக்கு மிக்க நன்றி,மீண்டும் ஒரு பரபரப்பான பதிவுடன் உங்களை சந்திக்கின்றேன்.
செங்கதிரோன்
நான் மூளை தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருப்பதால், அதுவும் நான் மேற்சொன்ன உயிரினமான மைக்ரோக்லியாவின் செயல்பாடுகளை மறதி நோய் மற்றும் பக்கவாதம் உண்டாகும் பொது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து சோதனைகள் செய்து வருகின்றேன். இந்த நீண்ட கால ஆராய்ச்சியில் இந்த உயிரினத்திற்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் கண்டுகொண்டேன்.
மேலே உள்ள படத்தில் trophic function எனப்படுவது நல்லது செய்யும் ஒரு கத்தியின் முனையாகவும் , destructive function எனப்படுவது அழிவு செய்யும் ஒரு கத்தி முனையாகவும் மைக்ரோக்லியா செயல்படுகின்றது என்பதனை விளக்குகின்ன்றது.