சினிமா
ரசிகர்கள். அரசியல் தொண்டர்கள் போல பதிவர்களுக்கும் பல தனித்தன்மைகள்
உள்ளன. அதனை பதிவர் வியாதி அல்லது blogger syndrome என்றும் அழைக்கலாம்.
உள்ளூர்
அரசியல்,சினமா, வியாபாரம் தொடங்கி உலக அரங்கில் நடக்கும் சினமா ,அரசியல்
பற்றி பல்வேறு செய்திகளை மற்ற பதிவுகளை படிப்பதன் மூலம் தெரிந்து
வைத்த்திருப்பதனால் பதிவுலகில் இயங்காத மற்றவர்களை முட்டாள்கள் அல்லது
உலக விஷயங்களில் ஞானம் இல்லாதவர்கள் என்று நினைப்பதில் தொடங்கும் இந்த
நோய் பல தளங்களிலும் இதே கருத்தினை கொண்டிருக்கும் நோய் முற்றிய நிலை
அடையவும் கார்ணமாக் அமைகின்றது.
முதலில்
சினிமாவில் இருந்தே தொடங்குவோம். உலகப்பட பதிவர்கள் ஜாக்கி முதல்
கருந்தேள் வரை அனைவரின் பதிவுகளையும் விடாமல் படித்ததானால் தமிழ் சினமா
குப்பை என்ற முடிவுக்கு வந்தது. மலையாள சினிமாவும் ஈரானிய சினிமாவும்
மட்டுமே உலகில் மனிதன் பார்க்கத் தகுந்த படங்கள் என்ற முத்த்திரையே
குத்தி விட்டனர். ஆனால் நிஜம் வேறு மாதிரியா உள்ளது. என்னுடன் பணியாற்றும்
ஈரானிய நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் பாலிவுட் சினிமா பற்றி சிலாகித்து கூறும் போது தான் தெரிந்தது, நாம் நினத்த்துக் கொண்டிருப்பது போல அவர்கள் தங்களது சினிமா மட்டுமே உலகில் உயர்ந்தது என்ற எண்ணம் கொண்டிருக்கவில்லை என்பதும் fantasy படங்கள் அவர்கள் மிகவும் ரசிக்கின்றார்கள் என்பதும் விளங்கியது.
ஈரானிய நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் பாலிவுட் சினிமா பற்றி சிலாகித்து கூறும் போது தான் தெரிந்தது, நாம் நினத்த்துக் கொண்டிருப்பது போல அவர்கள் தங்களது சினிமா மட்டுமே உலகில் உயர்ந்தது என்ற எண்ணம் கொண்டிருக்கவில்லை என்பதும் fantasy படங்கள் அவர்கள் மிகவும் ரசிக்கின்றார்கள் என்பதும் விளங்கியது.
மலையாள
மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதனை விரிவாக் சொல்ல வேண்டியதில்லை.
விஜை கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் போது தவிரி விழுந்த சேட்டனின்
செயல் மூலம் தமிழ் சினிமாவே அவர்களின் முதல் சாய்ஸ் ஆக உள்ளது எனபதனை
விளங்கிக் கொள்ளலாம். தமிழ் சினிமா மட்டுமன்றி தமிழ் தொலைக்காட்சிகளையும்
அவர்கள் விரும்பி பார்ப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலக்கிய
உலகம் அரசியல் அரங்கைத்தை விட மிக மோசமாக உள்ளது. ஏகப்பட்ட கோஷ்டிகள் ,
தினம் ஒரு பிரச்சனை ,தனி மனித தாக்குதல் என்று பல பிரச்ச்னைகள் இருப்பதால்
நாம் தினமும் பிசியாக இருக்க உதவுகின்றது. இவை அனைத்தும் இருந்தாலும் நாம் சிந்தனைத் தெளிவடைய எழுத்தாளர்களின் பல முக்கியப் பதிவுகள் காரணம்.
அரசியலைப்
பொருத்தவரை பதிவர்கள் அனைவரும் சினிமாவைப் போலன்றி ஒவ்வொருவருமே தனித்தனி
அடையாளங்களைக் கொண்டு குழுவாக இயங்கி வருகிறனர். இதில் எனக்குத் தெரிந்து
மூன்றே அணிகள் தான் உள்ளன. ஒன்று திராவிட அரசியல் நிலைப்பாட்டைக்
கொண்டவர்கள் (உ-ம் லக்கி யுவகிருஷ்ணா, இரண்டாவது திராவிட அரசியல்
நிலப்பட்டினை முழுவதும் நிராகரிப்பவர்கள் உ-ம். திருமுருகன் காந்தி ,மூன்றாவது
இடது சாரிகள் அதாவது பாரதிய ஜனதா மற்றும் அதிமுக வை ஆதரிப்பவர்கள்.(உ-ம் பத்ரி)
இப்படி பலதரப்பட்ட பதிவுகளை படித்து மண்டை வீங்கி மற்ற மனிதர்களில் இருந்து
விலகி வெறிரு கிரக வாசிகள் போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் மேற்கூறிய
அனைத்தும் உங்கள் மத்திலும் இருந்தால் நீங்களும் பதிவர் நோயால்
தாக்கப்பட்டிருக்கலாம். இந்த நோய்க்கு காலம் தான் மிக சரியான மருந்து.