ருத்ரம்மா தேவி படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது கதை மிகவும் நன்றாக இருக்கின்றதே என்று இணையத்தில் ருத்ரம்மா தேவி குறித்த வரலாற்றினைப் படித்துக் கொண்டிருந்தேன். ருத்ரம்மா குறித்து முன்பே யாரவது படம் எடுத்திருக்கின்றார்களா என்று பார்த்தால் பாக்யராஜ் என்று சொன்னது இணையம் ,அந்தப் படம் ருத்ரா 1991ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான சூப்பர் ஹிட் படம்.
அது எப்படி என்று கேட்கின்றீர்களா விரிவான விளக்கம் படத்துடன் கீழே :
ருத்ரா -கவுதமி , ருத்ரம்மா அனுஷ்கா பெண்ணாகப் பிறந்தவர் ஆண் வேடமிட்டு முன்னவர் பெற்றோரைக் கொன்றவர்களைப் பழிவாங்குவார் ,பின்னவர் நாட்டைக் காப்பாற்றுவார்
ருத்ராவில் பாக்யராஜ் திருடன், ருத்ரம்மா தேவியில் அல்லு அர்ஜூன் திருடன் ஆனால் இருவருமே ருத்ராவுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
சிவதேவ அய்யாவாக பிரகாஷ்ராஜ் ருத்ரம்மாவை, ருத்ரனாக மாற்றுவார், ருத்ராவில் காவல் துறை அதிகாரி லக்ஷ்மி பெண்ணை ஆணாக மாற்றுவார்.
மேல சொன்ன ஒப்புமைகள் போல இன்னும் நிறைய சொல்லலாம் . இந்த ஒப்பு நோக்கில் பாக்யராஜின் திறமையை நாம் உணர்ந்து கொள்ள முடியும் , எப்படி ஒரு வரலாற்று சம்பவமான ருத்ரம்மா தேவியின் வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டு ஒரு அதிரடிப் படத்தினை உருவாக்கி வெற்றி அடைந்திருக்கின்றார் என்பது தான்.
இருப்பினும் இங்கே சொல்ல வந்த விடயம் வேறு என்பதனால் அதை நோக்கி பயணிப்போம். ஆந்திராவில் உள்ள ருத்ரம்மா தேவியின் சரித்திரம் கோயம்புத்தூரில் பிறந்த பாக்யரஜிக்கு தெரிந்த ரகசியம் என்னவென்றால் பாக்யராஜும் ஒரு தெலுங்கர் என்பதால் தான், ஆச்சரியமாக இருக்கின்றதா ஆந்திராவில் நாயுடு சமூகத்தினர் தங்கள் சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களின் பட்டியலில் பாக்யராஜின் புகைப்படத்தினையும் வைத்து இருக்கின்றனர்.
பாக்யராஜும் தன் தாய்மொழிக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக ஆந்திராவைப் பூரிவீகமாகக் கொண்ட ருத்ரம்ம்மா தேவியின் வரலாற்றினை ருத்ராவாக எடுத்து தமிழர்களுக்கு அல்வா கொடுத்து இருக்கின்றார். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இதையெல்லாம் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கின்றது.
நன்றி
செங்கதிரோன்