ஹிட்லர் எப்படிஇனவெறியாளராக மாறினார் என்ற கதையுடன் இந்தப் பதிவினை சொன்னால் இந்தத் தலைப்பின் அர்த்தம் நன்கு விளங்கும், ஜெர்மனியில் ஒரு பனிக்கால இரவில் இலவசமாக வழங்கப்படும் சூப்பினை வாங்க நின்றிருந்த ஹிட்லருக்கு அங்கே அதே வரிசையில் யூதர்களையும் கண்டவுடன் எரிச்சல் அதிகமானது, அது எப்படி நம் நாட்டில் இவர்கள் இப்படி சுக போகமாக வாழ்கின்றார்கள் என்று வளர்ந்த அந்தக் கோபம் உலகின் மிக மோசமான இன வெறியனாக அவரை உருவாக்கியது.
அதே போன்ற ஒரு சம்பவம் பத்ரி வாழ்விலும் நிகழ்ந்தது, அமேரிக்கா சென்று படித்து முடித்து விட்டு இந்தியா வந்தவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி , அதுவும் குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் பாது காப்பு சோதனைகளுக்கு காத்திருந்த போது ஏராளமான பழுப்பு மற்றும் கருப்பு முகங்கள், அவர்கள் கையில் விலையுயர்ந்த பைகள், ஆங்கில புத்தகங்கள் மற்றும் தமிழகத்தின் ஒவ்வொரு வட்டார வழக்கு பேச்சுகள் என்று அந்த இடமே ஒரு குட்டி தமிழ் நாடாக மாறியிருப்பதனை கண்டு சொல்லொனா துயரமுற்றார். முழுக்க முழுக்க வெள்ளை நிறத்தவர்களான தனது சொந்தங்களான உயர் சாதியினர் மட்டுமே ஆக்கிரமித்திருந்த இந்த விமான நிலையம் இப்படி மாறிவிட்டதே என்று எண்ணி தூக்கம் இல்லமல் தவித்தார்.இந்த சோகத்தில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக வெளியில் வந்தவர் கள நிலையினை ஆராய்ந்ததில் அனைத்து பிற்பட்ட வகுப்பு இளைஞர்களும் வெகு வேகமாக துடிப்போடு இயங்குகின்றார்கள் என்றும் அவர்கள் தங்களைப் போல பாடத்திட்டத்தில் உள்ளவற்றை மட்டும் படிக்காமல் அதனோடு தொடர்புடையவற்றை தேடி தேடிப் படிப்பதனால் தான் இவ்வளவு சீக்கிரம் இந்த முன்னேற்றம் வர்களுக்கு சாத்தியமானது என்ற உணமையக் கண்டறிந்தார். இப்படியே இவர்கள் வளர்ந்தால் தமிழத்தின் தொன்மைக் களம் போல பல வள்ளுவர், தொல்காப்பியர் போன்றவர்களும் , மருத்துவ மேதைகளான பல சித்தர்களும் , கடல் தாண்டி எகிப்து வரை சென்ற வாணிகர்களும் , சோழர், சேர , பாண்டியர் போன்ற வீரர்களும் உருவாகி விட்டால் தங்கள் உயர் சாதி என்னாவது என்று எண்ணத் தொடங்கினார்.(இது ஒரு கற்பனை சம்பவம் -உணமையாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்)
இதனை முறியடிக்க என்ன செய்வது என்று யோசித்தபோது , இங்கே பிற்படுத்தப் பட்டவர்கள் எந்தளவுக்கு முன்னேறினாலும் சாதியால் பிளவு பட்டிருப்பதை பார்த்தவுடன் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, தன்னுடைய முன்னோர்கள் உருவாக்கி வர்ணசிரமத்தினை பாதுக்காக்கும் வகையில் நடக்கும் இந்த சாதி சண்டையே இவர்களை வீழ்த்த சரியான உக்தி என்று கண்டறிந்து போட்ட மாறுவேடம் தான் தலித்.
பிற்படுத்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தினையும் தலித்துகளின் ஏழ்மை நிலையினையும் இணைத்து இவர்கள் இருவரிடமும் சண்டையை மூட்டி தன உயர் சாதி மக்கள் அதன் மூலம் முன்னேற்றம் அடைய இந்த மாறுவேடம் மிக சரியாகப் பொருந்தியது.ஆனாலும் அந்த வேடத்தினைக் கூட சரியாகப் போடாமல் காரியத்திலே கண்ணாக இருக்கும் இந்த ஆரியக் கூத்தாடி , தலித் தாக்கப்பட்டாலும் எரித்துக் கொல்லப்பட்டாலும் மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளை மென்று கொண்டிருக்கும் இவர் , ஒரே ஒரு அர்ச்சகர் தாக்கப்பட்ட விவகாரத்திற்காக அனைத்து வகையான ஊடகங்களிலும் தன் கண்டனத்தைப் பதிவு செய்கின்றார்.
இந்தப் பதிவின் நோக்கம் தனிப்பட்ட முறையில் பத்ரியை தாக்கும் எண்ணமல்ல, நன்கு படித்த பிற்பட்ட சமூகம் சாதிப் பெருமைகளை புறம் தள்ளி , சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் இணைந்து வாழ்வதற்கான ஒரு நல்லதொரு சூழலினை தமிழகத்தில் உருவாக்குவதற்கான விழிப்புணர்வுக் கட்டுரை.
பின் குறிப்பு : பத்ரி எந்த ஒரு பாரம்பரியக் குடுமப் பினபுலமும் இல்லாமல் தானாகவே தனக்கான இடத்தினை தமிழ் சமூகத்தில் உருவாகியது பாராட்டுக்குரியது .
அடுத்தப் பதிவில்
இரண்டாவது போட்டியாளர் :கிஷோர் -முஸ்லிம் வேடம்
No comments:
Post a Comment