Sunday, June 12, 2016

36 வயதினிலே தமிழர்களுக்கு எதிரானப் படம்:

கலாபவண் மணி இறப்பு குறித்து தீவிர விசாரணை நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். முதலில் அதிக மது குடித்ததால் இறந்தார் என்று சொல்லப்பட்டு பின்பு அது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்குப்பட்டிருக்கின்றது. ஆனால் மலையாளப் பத்திரிக்கைகள் மது அருந்துவதற்கு முன்பு கலாபவன் மணி காய்கறி சாலட் சாப்பிட்டவதாகவும் அந்த காய்கறிகளில் (பூச்ச்சிக் கொல்லி தெள்ளித்தனால்)நச்சுத் தன்மை இருந்ததனால்தான் அவர் இறந்து விட்டதாகக் கூறி தமிழக விவசாயிகள் மீது அந்தப் பழியினை சுமத்த முயற்சித்தார்கள்.


மஞ்சுவாரியார் நடித்து வெளிவந்த how old are you படத்தின் அடிப்படையே காய்கறிகளில் நச்சுத்தன்மை கலந்திருப்பதால் தங்கள் வீட்டிலேயே காய்கறிகளை வளர்க்க வேண்டும் என்ற நேரடியான கருத்தையும் இதன் மூலம் தமிழக விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் வாங்காமல் அவர்கள் வயிற்றில் அடிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை  கொண்டதாகும். இது நான் போகிற போக்கில் இந்தக் குற்றசாட்டை சொல்ல வில்லை, நீங்களே உங்களுக்கு தெரிந்த கேரள நண்பர்களிடம் கேளுங்கள் இதனை ஒப்புக்கொள்வார்கள்.கேரள ஊடகங்கள் தமிழக காய்கறிகள் குறித்து மிக மோசமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன அதன் ஒரு வெளிப்பாடே இந்த how old are you படம்.

ஆனால் சென்னையில் இருக்கும் சூர்யா இந்த அரசியலை புரிந்து கொள்ளாமல் தமிழர்களுக்கு எதிரான ஒரு படத்தினை தன் மனைவி ஜோதிகாவை வைத்து தயாரித்து வெளியிட்டார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெறாததற்கு முக்கியக் காரணமே , படத்தின் அடிநாதமான காய்கறி நச்சுத்தன்மை பிரச்சனை நம் மாநிலத்தில் இல்லை. ஓவ்வொரு தெருக்களையுமே தேடி காய்கறி வண்டிகள் வருகின்றன.ஆகையால் நமக்கு மிக தரமானக் காய்கறிகள் நல்ல விலையில் கிடைக்கின்றன.அப்டி இருக்கும் சூழ்நிலையில் நம் மண்ணுக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு படத்தினை எடுத்ததோடு மட்டுமன்றி , கேரளப் படத்திற்கு இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது கேரளா நம் விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் மீது கூறும் குற்றசாட்டினை அங்கீகரிப்பது போலானதாகி விட்டது.

எனவே தமிழ் திரையுலகை சார்ந்தவர்கள் பிற மாநிலப் படங்களை மொழிமாற்றம் செய்யும் போது  அந்தபடத்திற்குள் ஒளிந்திருக்கும்  நுண்ணரசியலில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

அனைவருக்கும் தெரியும்  கணவன் மனைவி உறவில் கேரளாவுக்கும் தமிழகத்திற்கும் மிகப் பெரும் வேறுபாடுகள் உண்டு. பெண்களை அவர்கள் நடத்தும் விதம் மிக வித்தியாசமானது அதிக ஆணாதிக்கப் போக்கும் , அவர்களுக்கு வெளிநாடு  செல்வது குறித்து அதீத ஆர்வம் ஆண் பெண் இருவருக்குமே இருக்கும்.

இவ்வளவு  குடும்ப அளவில் முரண்பட்ட மற்றும் நம் விவசாயிகளை களங்கப்படுத்தும் பிறமொழிப் படங்களை ஆதரிக்கவே கூடாது.

நன்றி 
செங்கதிரோன்