Friday, April 29, 2016

நடிகர் சங்கத் தேர்தல் ஒரு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்:

காதல் பிரச்சனை , சொத்து பிரச்சனை , வாரிசு பிரச்சனை ,பங்காளி பிரச்சனை என ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு சேர்த்து நடந்த தேர்தல் தான் நடிகர் சங்கத் தேர்தல். ஊர் ரெண்டு பட்டாக் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்ற பழமொழி தலைகீழாகி கூத்தாடிகள் ரெண்டு பட்டா ஊருக்கேக் கொண்டாட்டம் என்ற நிலையாக தேர்தல் முடியும் வரை தமிழக மக்கள் அனைவரும் தங்கள் சொந்தப் பிரச்சனையை மறந்து நடிகர் சங்கப் பிரச்சனையில் மூழ்கிவிட்டனர்.

காலையில் ஒரு குழு மற்றோருக் குழுவைத் திட்ட மாலையில் அந்தக் குழு  அவர்களை பதிலுக்குத் திட்ட , மக்கள் இவை இரண்டையும் கண்டு களித்தனர்.இந்த முழுப் பிரச்சனைக்கும் மூலக் காரணமாக சொல்லப்பட்ட நபர் வரலட்சுமி சரத்குமார்.என்னதான் வண்டு முருகன் தொடந்து இதற்காகப் போராடி வந்தாலும் விஷால் களத்தில் குதித்த பிறகு தான் இந்த தேர்தல் வேகம் பிடித்தது.


வரலட்சுமிக்காக ஏன் விஷால் இறங்கினர் என்பதனை ஒரு கற்பனைக் கதை மூலம் பார்ப்போம்:
 தன அப்பா சரத்குமாருடன் ராதிகா வீட்டில் வசித்து வந்த வரலட்சுமி ஒரு நாள்  இரவு தன்  அறையில் படு சத்தமாகப் பாட்டைப் போட்டு நடனம் ஆட , ராதிகாவின் மகள் ரேயான் கோபமாகி அவரைப் பாட்டை நிறுத்த சொல்கிறார்.  அதிக சத்தத்தினால் தன் தோழியுடன் தொலைபேசியில் பேச முடியவில்லை என்று அவர் கோபப்பட இருவருக்கும் தகராறு அதிகமாக ,அந்த நேரத்தில் படப்பிடிப்பு முடிந்து அசதியாக வந்த ராதிகா, தாய் பாசத்தினால் ரேயானுக்கு பரிந்து பேச சண்டை ராதிகாவுக்கும் வரலட்சுமிக்கும் முற்ற , ஒரு கட்டத்தில் வரலட்சுமியிடம் என் வீட்டை விட்டு வெளியே போ என்கின்றார். 



 அழுது கொண்டே அணிந்திருந்த இரவு உடையுடன் வெளியேறுகின்றார், தன் சோகத்தைப் பகிர்ந்து கொள்ள நண்பன் விஷாலைத் தேடி செல்கின்றார். தன் ஆருயிர் தோழியின் அழுகையின் காரணம்தெரிந்தவுடன்  விஷால் துடிதுடித்துப் போகின்றார். இருப்பினும் அவர் தந்தை சரத்திடம் முறையிடச் சொல்கின்றார் . ஆனால் சரத்தோ இந்தப் பிரச்சனை குறித்து ராதிகா மூலம் முன்பே அறிந்திருந்ததால் தன அன்பு மகளையே கண்டிக்கின்றார். இதனைக் கேட்ட விஷால் கோபத்தின் உச்சிக்கே சென்று இவர்களின் கொட்டத்தை நான் அடக்குகின்றேன் என்று சபதம் எடுக்கின்றார் . அதனால் இதனை பாஞ்சாலி சபதம் போல் வரலட்சுமி சபதம் என்று கூறலாம்.(இந்தக் கதை புனைவாக இருந்தாலும் உண்மையாக நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று உங்களுக்கும் தெரியும் )

பலிகடா சிம்பு:
இந்த நடிகர் சங்க விவகாரத்தில் பலிகடா ஆனது நம்ம சிம்பு தான் , ஏக வசனத்தில் எதிரணியினரைத் திட்டி தன்னை தரம் தாழ்த்திக் கொண்டதோடு மட்டுமன்றி , தேர்தலிலும் தோற்று பரிதாப நிலைக்குப் போனார்.

ரெண்டுகெட்டான் பாக்யராஜ் :
அடுத்து பாக்யராஜ் , முதல் நாள் பாண்டவர் அணி கூட்டத்தில் கலந்து கொண்டவர் , அடுத்த நாள் ராதிகாவுடன் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் உட்கார்ந்திருந்ததை பார்த்து அவர் குடுமபம் மட்டுமல்ல , தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களுமே அதிர்ச்சி அடைந்தனர்.

என்னடா நடக்குது:
ஆச்சர்யமூட்டும் செய்தி ஒன்று என்னவென்றால் கஸ்தூரி ராஜா இயக்கி பல ஆண்டுகளாக வெளிவராமல் இருக்கும் படத்தின் நாயகன் உதயா இந்தத் தேர்தலில் போட்டியிட்டது தான். இவர் இயக்குனர் ஏ.எல் .விஜயின் சகோதரர். சினிமாவிலே நடிக்காத ஒருவர் எப்படி நடிகர் சங்கத்தில் போட்டியிட்டார்  என்று தெரியவில்லை. வெற்றியும் பெற்றார் என்பதுதான் காலக் கொடுமை.

மோசமானவங்களிலேயே முக்கியமானவங்க இவுங்க :
தொலைக்காட்சிகளில் தேர்தல் குறித்த விவாதங்களில் அரசியல் வாதிகளின் சண்டையை மிஞ்சும் அளவுக்கு இவர்களின் சண்டை மிக மிக தரம் தாழ்ந்ததாக இருந்ததைப் பார்த்தவர்கள் அரசியல்வாதிகளின் அருமையை உணர்ந்தனர்.


தொடரும் பெயர் அரசியல் :
நடிகர் சங்கத்தின் பெயர் மீண்டும் அரசியலானது. ரஜினி தமிழ் நடிகர் சங்கம் என்று சொல்ல , கமல் உலக நாயகன் என்பதால் உலக நடிகர் சங்கம் என்று சொல்ல , நம்ம தல கவுண்டமணி நடிகர் சங்கம் என்று பெயர் வையுங்கள் என்று  கூறி எல்லோரையும் ஆப் ஆக்கினார். இருப்பினும் வெற்றி பெற்ற பிறகு பொருளார் கார்த்தி . பெயர் மாற்றுவதை  (தமிழ் -தெலுங்கில் நடிப்பதாலோ என்னவோ) விட ஏகபப்ட்ட வேலைகள் உள்ளன என்று கூறி அந்த பிரச்சனையினை திசை திருப்பினார். குழந்தை பிறந்தால் பெயர் வைப்பது தான் முதலில் நடக்கும், அதன் பிறகு தான் மற்றவை. பிற மாநிலங்களில் அந்த அந்த மொழிகளைக் கொண்டு பெயர் இருக்க இங்கு மட்டும் ஏன் தென்னிந்திய என்ற பெயர் இருக்க வேண்டும் ? தெலுங்கர்களுக்கு எதிராகக் கம்பு சுற்றும் சீமான் தான் சார்ந்த துறையில் நடக்கும் இந்த அநீதிக்கு எதிராக வாய் திறக்க மறுப்பது ஏன்? 

தூக்கி அடீச்சுடுவன் பாத்துக்க ராதாரவி:

ராதாரவி பற்றிக் கூறாமல் நடிகர் சங்க வரலாறே இல்லை . நடிகர் சங்கத்தைப் பல காலம் பராமரித்து வந்தவர் , இடையில் கொஞ்சம் நிலை தடுமாற அவரின் பங்களிப்பு எல்லாம் வீணாகி அவர் செய்த கெட்டவைகள் அவரை நடிகர் சங்கத்தை விட்டுக் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளி விட்டு விட்டது என்றே சொல்லாம் .தவளையும் தன் வாயால் கெடும் என்றப் பழமொழி இவருக்கு நன்கு பொருந்தும்.

உண்மையான தருமர்: 
பாண்டவர்களில் தருமர் எவ்வளவு நல்லவரோ அவரை விட நல்லவரான நடிகர் சங்கத் தலைவர் நாசர் தான் பாவம் , இவரின் நண்பர்  பத்திரிக்கையாளர் ஞானி சொன்னது போல அப்பழுக்கற்ற மனிதரான இவர் ,கமலின் அன்புக் கட்டளைக்குப் பணிந்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றார் . நடிகர் சங்கத்திற்கு இதுவரை தலைவர்களாக இருந்தவர்களிலேயே இவர் தான் மிக மிக பொருத்தமானவர். 

தமிழ் நாட்டில் நடந்த எல்லாத் தேர்தல்களையும் விட  ,இந்த நடிகர் சங்கத்  தேர்தல் குறித்து  மட்டும் தான் அனைத்து ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிக கவனம் பெற்ற ஒரு தேர்தலாக இருந்தது.


அடுத்து தமிழ் நாடே காத்திருப்பது எதற்காகவென்றால் , நடிகர் சங்கக் கட்டடம் கட்டி அதில் விஷாலுக்கு வரலட்சுமிக்கும் திருமணம் நடக்கையில் இதயம் இனித்தது, கண்கள் பனித்தன என்று விஷாலும் சரத்தும் இணைவதைப் பார்ப்பதற்காக தான் என்றால் மிகையில்லை.

முழுப்பதிவையும் பொறுமையாகப் படித்ததற்கு மிக்க நன்றி நண்பர்களே 

செங்கதிரோன் 

நாம் தமிழர் கட்சியும் நண்டு ஜெகனும்:

சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழ் தேசியம் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது தான் திராவிடக் கட்சிகள் , ஆனால் காலப் போக்கில் தேசிய அரசியலில் ஈடுபட்டு தமிழ் தேசியம் கொள்கையை  பரணில் தூக்கி வைத்து விட்டார்கள்.

திராவிடக் கட்சிகளின் கவனம் சமூக நீதி ,அடிப்படை வசதிகள் , கல்வி மற்றும் சுகாதார வசதிகளில் அதிக கவனம் செலுத்தி, மாநில சுயாட்சி குறித்துக் கூட அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. சமஸ்கிருத திணிப்பு எதிர்த்த திராவிட கட்சிகள் ஆங்கில மோகத்தில் இருந்து மக்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனாலேயே தான் தென்னைந்தயாவிலேயே தமிழகத்தில் மட்டும்   தான் பள்ளிகளில் தாய்மொழிக் கட்டாயம் இல்லை என்ற அவல நிலை நிலவி வருகின்றது.

நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை குறித்து அக்கட்சியைச் சேர்ந்த தம்பிகள் முகப் புத்தகம் ,உங்கள் குழாய் (Youtube) என ஒரு இடம் விடாது சிலாகித்து எழுதுகின்றனர்.ஆனால் அரசியல் பார்வையாளர்களிடம் அவர்களின் தெலுங்கு மக்களுக்கு எதிரான எதிர்ப்பு தான் அதிகம் விமர்சிக்கபடுகின்றது. 

தெலுங்கர்கள் சீமானுக்கெதிராக வழக்கு


உண்மையிலே தமிழகத்தில் தெலுங்கர்களின் ஆதிக்கம் இருக்கின்றதா?
தமிழுக்கு அடுத்து அதிகம்  பேசும் மொழியாகத் தெலுங்கு தான் இருக்கின்றது. அதுவும் வெறும் 5%தான், அவர்களின் எண்ணிக்கையும் இதே அளவில் தான் இருக்கும் அல்லது கூடுதலாக 5-10% அதிகமாக  இருக்கும். அளவில் குறைந்த இந்த எண்ணிக்கையைக் கண்து ஏன் சிமான் பயப்படுகின்றார். அவர்கள் சொல்லும் காரணம் என்னவென்று எனக்கு முழுமையாகத் தெரியாது .


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கனக்ஷன் நிகழ்ச்சி பார்க்கும் போது தான் தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கர்கள் தமிழ் மொழி குறித்து எவ்வளவு அலட்சியத்துடன் இருக்கின்றனர் என்பது தெரிய வந்தது.இந்த இணைப்பில் உள்ள நிகழ்ச்சியினைப் பார்த்தால் தமிழகத்தில் வாழும்  தெலுங்கு பேசும் மக்களின் தமிழ் குறித்து அவர்களின் அறியாமை நன்கு விளங்கும்.




இந்த நிகழ்ச்சியில்  படங்களை இணைத்து சொல்லப்படும்  சொல் விளையாட்டு  என்பதனால் ஒரு சில தமிழகத்துக்கே உரித்தான கலாச்சார சொற்கள் வரும். (உ-ம் :தொன்னை , இலக்கியம் சார்ந்த சிலப்பதிகாரம் போன்ற சொற்கள்  மற்றும் தமிழகத்தின் பழம்பெரும் தலைவர்கள் அண்ணா ,காமராஜர் )

நான் பார்த்தவரையில் தமிழைத் தாய் மொழியாக கொண்டிராதவர்கள் இருப்பினும் தமிழகத்தில் பல காலம் வாழ்ந்தாலும் இது தமிழ் சார்ந்த சொற்களை அறியதவர்களாக இருக்கின்றனர்.இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்களில், தமிழினைத் தாய் மொழியாகக் கொண்டிராதவர்கள் தமிழை பள்ளியில் ஒரு பாடமாக படித்திருந்தாலே எளிதில் விடை சொல்ல முடியும். இதன் பின்னிருக்கும் நுண்ணரசியல் என்னவென்றால் , பிற மொழியினைத் தாய் மொழியாகக் கொண்டுள்ளவர்கள் அதுவும் குறிப்பாக மேல் மத்தியத் தர வர்க்கத்தினர் , தமிழ் மொழியின் அவசியத்தை உணரவே  இல்லை

தமிழையேப் படிக்காகத்தால் , தமிழகத்தின் சிறப்புக்களையோ , நம் மண்ணிற்கோ உரித்தான தலையைப் பிரச்சனைகள் குறித்தோ எந்த வித அடிப்படையும் தெரியாமல் வாழ்கின்றனர். 

இப்படிப்பட்டவர்களுக்கு, சீமான் தமிழின் பெருமை குறித்துப் பேசும்போதோ அல்லது தமிழகத்தின் தலையாயப் பிரச்சனைகள் குறித்து உணர்ச்சிப் பொங்க பேசினால் நகைச்சுவையாகத் தெரிகின்றது. சீமான் குறித்து பல்வேறு விமர்சனங்கள் நமக்கு உண்டென்றாலும் இது போன்ற பிறமொழிக்காரர்கள்  அவரை கிண்டல் செய்யும் போது நாம் அமைதியாக மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிராமல் தமிழகத்தின் பெருமைகளை எடுத்துக் கூறி அவர்களின் தவறினை நல்வழியில் உணர்த்த முயல வேண்டும்.

கனெக்ஷன் நிகழ்ச்சி நடத்தும் ஜெகனும் தெலுங்கர் என்பதுதான் இதில் கவனிக்கவேண்டிய அம்சம்  தமிழ் தொலைக்கட்சிகளில் தொகுப்பாளர்களில் எத்தனை பேர் தமிழ் மக்கள் என்று கணக்கெடுத்தால் மிகுந்த ஏமாற்றத்தினை ஏற்படுத்தும் என்பது திண்ணம். 

தீர்வுகள்:
1. முதலில் தமிழினைக் கல்விக் கூடங்களில் கட்டாயப் பாடமாக்க வேண்டும்.
2. உயர்சாதிகள் மற்றும் மாற்று மொழிகாரர்கள் தமிழுணர்வின்றி , தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தவிர்த்து மற்றப் பாடங்களை முதன்மையான மொழியாக பயிற்றுவிப்பதை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். தமிழ் உயர்ந்தால் தான் நம் வாழ்வு உயரும். 
3. பிற மொழிக்காரர்கள் நம் மாநிலத்தில் அகதிகள் போலோ அல்லது இதனைத் தங்கள் தற்காலிக வசிப்பிடமாகவோ தான் கருதுவார்கள். ஆனால் இது உங்களின் சொந்த மண்.இம்மண்ணின் சிறப்பை மற்றவருக்கு உன்ரத்த நம் மொழியின் அருமையை அடுத்த தலைமுறைக்கு உணர்த்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
4. சீமானின் கருத்துகளையும் முழுமையாக நாம் ஏற்றுக் கொள்ளவியலாது ஏனென்றால் , ஈழத்தமிழர்கள் பிற நாடுகளில் மிக முக்கியப் பதிவிகளில் வகிக்கின்றனர். 

அயல்மொழிக்கரர்கள் இம்மண்ணிற்கே உரித்தான பண்புகளை உள்வாங்கி அதற்கேற்றவாறு நடப்பின் சீமான் போறோர்கள் கூச்சல் குறையும்.

நன்றி 

செங்கதிரோன்