Friday, April 4, 2014

Bad boy bubby 18+ படம்

1993ல் வெளிவந்த இத்திரைப்படத்தினை இரண்டாம் முறையாக நேற்று  பார்த்தவுடன் இதனைப் பற்றி சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதே இப்பதிவன் நோக்கம்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் பார்த்த போது இதனை ஒரு மேட்டர் படம் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால்  நேற்று IMDBல் அதிக ரேட்டிங் செய்யப்பட்ட படங்களின் இந்தப் படத்தின் பெயரைக் கண்டவுடன் அப்படியே shock ஆயிட்டேன். அங்கே படம் பற்றி எழுதியிருக்கும் விமர்சனங்களில் இப்படத்தினைக் காவியம்என்றும், மிக மிக அரிதானப் படைப்பு என்று பெரும்பாலானோர் எழுதியதைக் கருத்தில் கொண்டு மீண்டும்  இப்படத்தினைப் பார்த்தேன்.



படத்தின் கதை பிறந்ததிலிருந்து முப்பது வருடங்களாக வீட்டில் அடைக்கப்பட்டு வளர்ந்த ஒருவன் அதிலிருந்து மீண்டு வந்து வெளி உலகில் அவன் செய்யும் அட்டகாசங்களின் தொகுப்பே இப்படம்.

படம் முழுக்க நகைச்சுவையும் காமக் காட்சிகளும் நிரம்பி இருக்கிறது. இரண்டாம் முறைப் பார்க்கின்ற போது காமக் காட்சிகள் எவையும் திணிக்கப்பட்டவையாகத் தெரியவில்லை. எனவே இப்படத்தினை நம் வயதின் வெவ்வேறான கால கட்டத்தில் பார்க்கும் போது படத்தில் சொல்ல வரும் செய்தியினை உணர முடியும்.

எச்சரிக்கை;  இப்படத்தினை குடும்பத்துடனோ அல்லது பொது இடத்தில் உட்கார்ந்தோ பார்க்க முடியாது என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் அதையும் மீறி பார்த்தால் தர்ம அடி தான் விழும் என்பதை கவனித்தல் கொள்ளுங்கள்.