Sunday, November 15, 2015

லிவின்டுகதரை(Live-in together) தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் விக்ரமன்

மணிரத்தினத்தின் படமான ஓ காதல் கண்மணி தான் லிவிங் டுகதர் குறித்த முதல் தமிழ் படம் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் 1990ம் ஆண்டு வெளிவந்த புது வசந்தம் படம் தான் முதன் முதலில் லிவிங் டுகதர் குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்துக்கு விக்ரமன் அவர்கள் அறிமுகப்படுத்தி விட்டார்.

புதுவசந்தம் படத்தில் சொன்ன லிவிங் டுகதர் என்பது மூன்று  ஆண்களுடன் ஒரு பெண் ஒரே வீட்டில் தங்கி இருப்பது, இதே போன்ற ஒரு சூழ்நிலையினை 90களில் கற்பனை கூட செய்ய இயலாது. விக்ரமன் மிக தைரியமாக அந்தகே கதையினை தன் முதல் படத்திலேயே எடுத்து மிகப்பெரிய வெற்றி கண்டவர்.இப்பொழுது மிக தீவிரமாக செயல்படும் கலாச்சார காவலர்கள் அப்பொழுது செயல்பட்டிருந்தால் இது போன்ற ஒரு நவீனப் பார்வை கண்ட கதைகள் தொடர்ந்து வருவது தடுக்கப்பட்டிருக்கும்இருக்கும்.இது மட்டுமல்லாது விக்ரமன் அவர்கள் இதே போன்ற மிக வித்தியாசமான கதைகள் கொண்ட பல படங்களை எடுத்தவர். அவருக்கு மணிரத்தனம் பாலசந்தர் ,பாரதி ராஜா போன்றோரின் வரிசையில் அவருக்கான இடத்தினை நாம் வழங்கி இருக்க வேண்டும். ஏனோ சினிமா விமர்சகர்களும் அவரின் பங்களிப்பினை சரியாக பாராட்டவில்லை.


விக்ரமனின் லிவிங் டுகதர் கதையும் மணிரத்னத்தின்  லிவிங் டுகதர் கதையும் வெவ்வேறு திசையிலானது. முதலாவது எந்த ஒரு மன உடல் ஈர்ப்ப்பும் இல்லாமல் இந்த மூன்று ஆண்களும் அந்தப் பெண்ணுடன் வாழ்வர்,இரண்டாவதில் முழுக்க முழுக்க உடல் ஈர்ப்பிலான லிவிங் டுகதர். இந்த லிவிங் டுகதர் வெளிநாட்டில் இருந்து நாம் கற்றுக் கொண்ட வாழ்க்கை முறையாக இருப்பினும் , உணமையிலேயே அங்கே லிவிங் டுகதர் என்பது மிக மிக வித்தியாசமானது.


வயது என்பது லிவிங் டுகதருக்கு அங்கே தடையே இல்லை , 20பது வயது முதல் 80 வயது வரை எப்பொழுது வேண்டுமானாலும் லிவிங் டுகதர் வாழ்க்கை தொடங்கும். இதிலிருந்து தெரிய வேண்டியது உடல் மட்டுமே இங்கே முதன்மையானது அல்ல , இரண்டு உள்ளங்களுக்குமான சரியான புரிதல் தான் மிக முக்கியமானது . அதைத்தான் my soul met  என்று குறிப்பிடுகின்றனர்.

மிக மிக தெளிவான எல்லையினை தங்களுக்குள் வகுத்தே லிவிங் டுகதர் வாழ்க்கையினை தொடங்குகின்றனர்.அதாவது இந்த வாழ்க்கையில் இருவரும் இணைத்து வாழும் இடம் , உணவு ஆகியவற்றுக்கு தனித்தனியே தான் செலவு செய்வர். உணவகங்களுக்கு சென்றாலும் அவ அவருக்கான தொகையினையும் தனியாகவே செலுத்துவர். இந்த காலகட்டத்தில் அவர்கள் இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பபட்டு விட்டாலும் நம்பிக்கை அதிகரித்து விட்டாலும் திருமணத்திற்கான முடிவினை எடுப்பார்கள் . ஆனாலும் இந்த முடிவினை சில மாதங்களிலோ அல்லது ஓராண்டிலோ எடுப்பதில்லை. குறைந்தது இரண்டு வருடம் முதல் ஐந்தாண்டு வரை கூட லிவிங் டுகதர் வாழ்க்கைக்குப் பின்னரே திருமணம் குறித்து சிந்திப்பார்கள். 

தமிழ்நாட்டில் அந்தக் காலம் முதலே லிவிங் டுகதர் மிகப் பிரபலம் , அரசியலில் முதல்வர்களில் முக்கால்வாசி பேர் லிவிங் டுகதரில் வாழ்ந்தாக கிசுகிசு உலாவந்தன. சினிமாவிலும் அதே தான் அனைத்து முன்னனி நடிகர் நடிகைகள் லிவிங் டுகதர் வாழக்கையின வாழ்ந்து காட்டியவ்ர்கள் தான்.சீரியல் நடிகை லாதா ராவும் அவர் கணவர் ராஜ்கமலும் கூட தாங்கள் லிவிங் டுகதரில் வாழ்வதாக பத்திரிக்கைகளுக்கு பேட்டி  அளித்து பரபரப்பினை ஏற்படுத்தினர். சென்னையில் பொறியியல்  கல்லூரிகள் அதிகரித்த பின்னர் அங்கு படித்த பணக்கார மாணவ மாணவிகளும் இந்த வாழ்க்கையினை வாழ ஆரம்பித்தனர்.இன்னும் சற்று மிகவும் பின்னோக்கிப் போனால்  லிவிங் டுகதருக்கான ஆதாரம் தொல்காப்பியத்திலேயே இருப்பத்தாக இலக்கியவாதிகள் குறிப்பிடுகின்றனர், நாம் இந்துவாக மதம் மாறிய பின்னர் அதையெல்லாம் மறந்து விட்டோம்  என்று நினைக்கின்றேன்.


நம்  ஊரில் இந்த லிவிங் டுகதர்  வாழ்வானது மிக மோசமான ஒன்றாக கலாச்சார காவலர்களால்  கருதப்படுவதால் வெளியில் சொல்ல தயங்குகின்றனர்.இதற்கு  கமல் தான் மிக மிக சிறந்த எடுத்துகாட்டு சரிகாவுடன் வாழ்ந்த வாழ்க்கையில் தனது இரண்டு பெண் பிள்ளைகளையும் தாலி கட்டாமலே  பெற்றுக் கொண்டவர் , தற்பொழுது கௌதமியுடனான  வாழும் வாழ்க்கையினை மட்டும் மிக மிக ரகசியமாக வைத்திருந்து மிக சமீபத்தில்தான் அது பற்றி வெளிப்படையாக ஒப்புக் கொள்ள ஆரம்பித்து இருக்கின்றார். 

முடிவாக சொல்ல விழைவது லிவிங் மேல்நாட்டுக் கலாசாரத்தினை நாம் பின்பற்றுவதில் தவறில்லை இருப்பினும்  அவற்றை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு பின்பற்றினால் தான் சிறப்பாக இருக்கும். எனவே சினிமாவில் மணிரத்னம் போன்றவர்கள் காண்பிக்கும் லிவிங் டுகதர் என்பது போலியான ஒன்றுதான்.

நன்றி 
செங்கதிரோன் 

அடுத்த பதிவு : சரோஜா தேவி புத்தகத்தின் தோற்றமும் மறைவும்