இந்த நூற்றாண்டின் நம்பிக்கைக்குரிய தலைவராக உருவெடுத்துள்ள கேஜ்ரிவாலின் உரைகளையும் பேட்டிகளையும் கேட்க ஆர்வம் மிகுந்த தென்னிந்தியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகின்றது.
கட்சி ஆரம்பிக்கும் முன்னர் ஆங்கிலத்தில்பேசிக் கொண்டிருந்தவர், ஆம் ஆத்மி ஆரம்பித்த பின்னர் இந்தியில் மட்டுமே பேசுகின்றார்.
என.டி.டிவி யில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் இந்தியயில் மட்டுமே பதிலளிப்பதனை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கின்றார்.
இந்த பழக்கம் ஆங்கிலமே தெரியாத வட இந்தியர்களுக்கு சரியான ஓன்றாக இருக்கலாம். ஆனால் தேசிய அளவிலானசெய்திகளை அறிந்து கொள்ள ஆர்வமுடையவ்ர்களுக்கு கேஜ்ரிவாலின் கருத்துகளை அவருடைய பேட்டியின் வாயிலாக அறிந்து கொள்ள பெரும் தடையாக இந்தி மொழி விளங்குகின்றது.
நமக்கு இருக்கும் வேலைப் பளுவுக்கிடையில் புதிதாக ஓரு மொழியினைக் கற்றுக் கொள்ள நேரமோ பொறுமையோ இல்லை.
ஆங்கில ஊடகங்களில் விவாத நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் அனைவரும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுகின்றனர். ஆங்கிலமே தெரியாத ஓரு சிலர் மட்டுமே இந்தியில் பேசுகினறனர். இந்நிலையில் நன்கு ஆங்கிலம் தெரிந்த கெஜ்ரிவால் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலம் இந்தியில் மட்டும் பதிலளிப்ப்து என்று தீவிரமாக இருக்கின்றார்