முந்தையப் பாகத்தில் கைபழக்கம் குறித்த ஒரு தெளிவான விளக்கங்களை அளித்திருந்தேன். சீக்கிரம் வெளிவருதல் என்பது உலகம் வெப்பமாதல் போல இதுவும் ஒரு உலகளாவியப் பிரச்சனை தான், ஏனெனில் மேற்குலகமும் இந்தப் பிரச்சனையில் அதிகம் கவனம் செலுத்திவருகின்றது.
இருப்பினும் இது ஒன்றும் அபாயகரமான ஒரு நோய் அல்ல , மிக மிக எளிதாக சரி செய்யக் கூடிய ஒன்றுதான். சரி செய்ய வேண்டுமென்றால் முதலில் இந்த சீக்கிரம் வெளியேறுதல் ஏன் எதற்காக நிகழ்கின்றது என்பதனையும் தெரிந்து கொள்வது சரியாக இருக்கும்.
காரணங்கள் :
1. பதட்டம், பயம் - இவை இரண்டும் கலவிக்கு முன் அனைவருக்குமே இருக்கக் கூடிய ஒன்று. இது தவிர்க்க முடியவே முடியாததாகத் தோன்றினாலும் , காலப் போக்கில் சரி செய்யக் கூடியது .
2.இரண்டாவது மிக முக்கியமானது,மிக அதிகமான பாலியல் காணொளிகள் பார்ப்பதானால் உண்மையாகவே கலவி என்பது என்ன என்பதற்கான அர்த்தத்தினை தவறாகப் புரிந்து கொள்வதால் ஏற்படும் விபரீதம் .
3. பொறுமையின்மை , கலவி என்பது பகிர்ந்துண்ணும் உணவு போல என்று காமசூத்ரா குறிப்பிடுகின்றது , எனவே அந்த எண்ணம் இல்லாமல் மனைவியை ஒரு பொருளாகப் பாவித்து நடப்பதானால் அது ஒரு சம்பிரதாயமான நிகழவாகவே நடந்து முடிந்து விடுகின்றது.
4. சொல்லித் தெரிவதில்லைக் காமக் கலை என்று சொல்லியே ஒரு தலை முறை பாழடிக்கப் பட்டு விட்டது. இங்கே இளைஞர்களுக்கு டிஜிட்டல் இந்தியாவை விட மிக முக்கியமானது பாலியல் குறித்த தெளிவானப் பார்வை . சொல்லித் தெரிய வேண்டியது காமக் கலை(இந்தத் தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருக்கின்றேன்) என்ற உண்மையினை ஊடகங்களாவது உரக்க சொல்ல வேண்டும்.
தீர்வுகள் :
1.பயத்தினைப் போக்குவது எளிது. நிறைய ஆலோசனைகள் இருப்பினும் மிக எளிதானவை மனதினை மிக மிக அமைதியாக வைத்திருப்பது மிக முக்கியமான ஒன்று . அலுவலகப் பிரச்சனை, கடன் பிரச்சனை, சொந்தப் பிரச்சனை இவை போல பல பிரச்சனைகள் இல்லாமல் மறந்திருக்க வேண்டும்.
2. தேகப்பயிற்சி மற்றும் யோகப் பயிற்சி இவை இரண்டும் உள்ளம் உடல் மற்றும் உள்ளத்தினை உறுதியாக்கக் கூடியவை .மிக மிக எளிதானப் பயிற்சிகளே போதுமானவை. பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியினை என்னுடயை நோயாளிகளுக்கு செய்ய சொன்னதில் அதன் பின்னர் சிக்கரம் வெளிவருதல் வெகுவாக சரியனாதாக உறுதிபடுத்தி இருக்கின்றனர் .
3. ஒரு வேலையை திட்டமிடுவதற்கு முன்னர் எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்கின்றீர்களோ அதே போல இதிலும் ஒரு திட்டமிடல் அவசியம் ,அதாவது எங்கு தொடங்கி எங்கு முடிப்பது என்ற சிந்தனை இதற்குத்தான் சொல்லித் தெரிய வேண்டியது காமக் கலை என்று குறிப்பிட்டேன்.
இங்கே குறிபிட்டுள்ள காரணங்களும் அவற்றின் தீர்வுகளும் உங்கள் அனைவருக்கும் சீக்கிரம் வெளிவருதல் குறித்த ஒரு தெளிவினை உண்டாக்கி இருக்கும் என்று எண்ணுகின்றேன்.இது முழுக்க முழுக்க மருத்துவ அடிப்படையில் எழுதப்பட்ட பதிவு.மேலும் உங்களுக்கு தெளிவு பெற வேண்டி இருப்பின் முதலில் உங்கள் மனைவியிடம் பேசுங்கள் , தயக்கம் தேவையில்லை , அடுத்து கட்டமாக நல்ல மன நல ஆலோசகரை அணுகினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.தொலைக்காட்சிகளில் வரும் பாலியல் குறித்த போலி சித்த மருத்துவர்களின் அருளுரைகளைப் பார்ப்பதினை அறவே தவிருங்கள்.
நன்றி
செங்கதிரோன்
பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+ -பாகம் :2
சேலம் சிவராஜ் வைத்தியரும் பாலியல் நிபுணர் நாராயண ரெட்டியும் : இரு துருவங்கள்
பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+
பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+ -பாகம் :2
சேலம் சிவராஜ் வைத்தியரும் பாலியல் நிபுணர் நாராயண ரெட்டியும் : இரு துருவங்கள்
பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+