தன் சாதி மானம் காக்க போராடிய வீரன் போல தன்னைக் காண்பித்துக் கொள்ளும் யுவராஜ் உண்மையிலே வீரரா? தன சாதிப் பெண்களை பிறர் தூக்கி சென்று விடாமல் தடுப்பது தான் தன்னுடைய தலையாயப் பணி என்றால் இவர் சாதி சார்ந்த ஆண்கள் பிற சாதி, மதம் சார்ந்த பெண்ணைக் காதலித்து மணந்தால் அனைத்து துவாரங்களையும் மூடி அமைதி காப்பது ஏனோ ?
ஜோதிகா கோயம்புத்தூர் மாப்பிள்ளையான சூர்யாவை திருமணம் செய்து கொண்டதிலிருந்தே தெரிய வந்திருக்கும் , யுவராஜ் வம்சம் சார்ந்தவராகத்தான் இருப்பபார் என்று, அதுவும் சூர்யா யுவராஜ் தொடர்புடைய சமூகம் சார்ந்தவர் என்பதனை அவர் தந்தை சிவக்குமார் தீரன் சின்னமலை குறித்து முகப் புத்தகத்தில் பதிவு எழுதி பிரச்சனைக்கு உள்ளானதில் இருந்து தெள்ளத் தெளிவாக உணர முடியும்.
நடுத்தரக் குடும்பம் சார்ந்த இரு வெவ்வேறு சாதியினர் காதலிக்கும் போது அவர்களிடம் சென்று தன் வீரத்தைக் காண்பிக்கும் யுவராஜ் தன் குலக் கொழுந்துகளான சூர்யாவிடம் தகராறு செய்யும் தைரியம் இருக்கின்றதா ? அப்படி செய்தால் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே காவல் துறை நடவடிக்கை எடுத்திருக்கும் . நடுத்தரக் குடும்பங்களை குறிவைத்து அவர்களை தாக்கினால் காவல் துறை பல மாதங்கள் கழித்தும் பிடிக்க முடியவில்லை.
தமிழகத்தின் அனைத்தத் தரப்பினருக்கும் பிடித்த ஒரு ஜோடி சூர்யா -ஜோதிகா இந்த இரு அழான உள்ளங்கள் இணைந்திருக்க சாதி தடையாக முதலில் இருந்தாலும் பின்னர் அவற்றை முறியடித்து தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். இதே போன்ற சுதந்திரம் அனைத்து தரப்பினருக்கும் வேண்டும் , அந்த சுதந்திரத்தில் இது போன்ற அல்லு சில்லுகள் நுழைவது தடுப்பது முதலில் அரசாங்கத்தின் கடமை , இரண்டாவது மக்களும் வெறுமென பெயருக்குப் பின் ஜாதிப் பெயரை எடுத்து விட்டதனால் மட்டும் மாற்றம் வந்து விடாது, தங்களின் மனத்திலிருந்தும் இந்த சாதிதீயை அகற்ற வேண்டும் .

உயர் சாதி ஆண் எந்த சாதி மதப் பெண்ணையும் இழுத்துக் கொண்டு வரலாம், அதையெல்லாம் தங்கள் குலப் பெருமை ,மண்ணாங்கட்டி என்று வாழ்த்தும் இந்த சாதிவெறிக் கும்பல், தாழ்ந்த சாதி என்று முத்திரை குத்தப் பட்ட ஒருவன் , மற்ற சாதிப் பெண் மேல் ஆசைப்பட்டால் அவர்களைத் துன்புறுத்துவது எந்த வகையில் நியாயம் ?
பண்பட்ட தமிழ் சமூகம் இது போன்ற அறிவிலிகளை ஆதரிக்கவேக் கூடாது . சமூக முன்னேற்றத்திற்கு இது எள்ளவும் நன்மை பயக்காது நண்பர்களே , சிந்தித்து செயல்படுங்கள் .
நன்றி
செங்கதிரோன்
இந்தப் பதிவு தொடர்புடைய மற்றொரு விரிவானப் பதிவு விரைவில் வரவிருக்கின்றது .
கை கூடாத காதல் திருமணம் : நடிகர் திலகம் சிவாஜி முதல் இளவரசன் வரை