இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான குணங்கள் பல உண்டு. உணவு வகைகளில் காரம் அதிகம் சேர்த்து சாப்பிடுவது, பண விவகாரங்களில் மிகவும் கஞ்சத்தனமாக நடந்து கொள்வது என்று ஏராளமாக சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றுள் வெளிநாட்டுப் பெண்கள் குறித்து இந்திய செய்திஊடகங்களும் திரைப்படங்களும் ஏற்படுத்தி இருக்கின்ற மாயத் தோற்றம் குறித்து தான் இந்தப் பதிவு.
வெளிநாட்டுக்கு சென்று வந்த ஒவ்வொரு இந்திய ஆணும் கன்னி கழிந்து விட்டதாகவே அனைவரும் நம்புகிறனர்.வெளி நாடு செல்லும் ஆண்களும் இதைப் போன்ற அதீதமான கற்பனைகளுடன் தான் செல்கின்றனர். காந்தி அவர்கள் வெளி நாடு செல்லும் போது தன் அன்னைக்கு செய்த சாத்தியங்களில் பெண்கள் தொடர்பான சத்தியத்தையும் செய்து கொடுத்தார். அந்தளவுக்கு அங்கே பெண்கள் சுகம் மிக மலிவாக கிடைப்பதாக ஒரு பிம்பம் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. அது எந்தளவுக்கு உண்மை எனபததைப் பார்ப்போம்.
ஹாலிவுட் படங்கள் மற்றும் போர்நொ படங்களில் காண்பிக்கப்படும் காட்சிகளை மட்டும் கருத்தில் கொண்டே வெளிநாட்டுப் பெண்களை பற்றி ஒரு முன் முடிவுக்கு நாம் வந்து விடுகின்றோம். இங்கே நிலவும் பாலியல் வறட்சியினாலும் காட்டுப்பட்டியான சமூக அமைப்பினாலும் நம் நாட்டுப் பெண்களை அவர்களுடன் ஒப்பிட்டு வெளிநாட்டுப்பெண்கள் அனைவரும் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று ஆணித்த்ததரமாக நம்புகின்றோம்.
முதலாவதாக அவர்களின் ஆடை அணியும் விதத்தை வைத்து தான் இந்த விமர்சனகள் அதிகம் வைக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் என்ன மாதிரியான உடை அணிய வேண்டும் என்பதனை அப்பெண்ணின் பெற்றோர்கள், சகோதரர்கள் , மாமனார் அல்லது மாமியார் மற்றும் மிக முக்கியமாக கணவனோ தான் தீர்மானைக்கின்றார்கள். இப்படியான எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி அவர்களுக்கான உடையினை அவர்களே தேர்வு செய்கின்றனர். தாங்கள் உடை அணிவது மற்றவர்களுக்கு தான் பார்க்க அழகாக தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் உடை அணிவதாக அவர்களே ஒப்புக் கொள்கின்றனர். இங்குள்ள மேலை நாட்டு ஆண்களும் அவர்கள் அது போல உடை அணிவதைத்தான் விரும்புகின்றனர். ஆண்களுமே கோடை காலங்களில் மேல் சட்டை இல்லாமல் வெற்றுடம்புடன் ஆனந்தமாகத் திரிவதைக் காணலாம். மேலும் இங்கு சின்ன பெண் குழந்தை முதல் கிழவி வரை கவுன் மட்டுமே அணிந்து கொண்டிருப்பர். நம்மூர் போல உடை என்பது வயதுக்கு ஏற்றவாறு எந்த மாற்றமும் அடையாது. எனவே உடை அணியும் பழக்கத்தினை வைத்து அவர்களின் குணத்தினை மதிப்பீடு செய்யும் இந்திய மனம் வெளிநாடுகளில் பொருந்தவே பொருந்தாது. குறிப்பிடத்தக்க மற்றோர் செய்தி பெண் மருத்துவர்களுமே அரை குறை ஆடைகளைத்தான் அணிந்திருப்பார்கள். முதல் முதலாக நான் மருத்துவரைப் பார்க்க சென்ற போது அம்மருத்துவர் அணிந்திருந்த உடையைப் பார்த்தவுடன் நான் என்னுடய நோய் பற்றி சரிவர சொல்லாமல் திரும்பி வந்து விட்டேன். ஆனால் இந்த நான்கு வருடங்களில் அது கொஞ்ச கொஞ்சமாக சரியாகி விட்டது.
இரண்டாவதாக பொது இடங்களில் அவர்கள் பேசும் விதத்தினை வைத்து மதிப்பீடு செய்கின்றார்கள்.நம்மூரில் இரட்டை அர்த்த ஜோக்குகளை அதிகம் பெண்கள் தங்கள் பெண் நண்பர்களுடனும் , ஆண்கள் தங்கள் நண்பர்களுடனும் அல்லது காதலியிடமோ மட்டும் தான் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் இங்கே நிலமை தலைகிழானது, போது இடங்களிலும் , வேலை செய்யும் இடங்களிலும் மிக இயல்பாக ஆண் பெண் வித்தியாசமின்றி ஜோக்குகளை பறிமாறிக் கொள்வது வழக்கம். அதுவும் பார்ட்டிகளில் இது மிக அதிகமாக நடக்கும். என் வாழ்வில் நடந்த ஒன்றையும் குறிப்பிடுகின்றேன் . ஒரு வீட்டில் நடந்த பார்ட்டியில் குழந்தை அழுது கொண்டே இருந்தது. அக்குழந்தையின் தாய் வரவில்லை தந்தை மட்டுமே வந்திருந்தார். என் தோழி ஒருத்தி எல்லோரும் இருக்கும் அவ்விடத்தில் தன் மார்பகத்தை சுட்டி இதில் பால் இல்லை இருந்திருந்தால் கொடுத்திருப்பேன் என்று சொல்லி சத்தமாக சிரிக்க அனைவரும் கைதட்டி சிரிக்கின்றனர். எனவே பாலியியல் குறித்து மிக வெளிப்படையாகவே போது இடங்களில் பேசுகின்றனர். பெண்ணின் அங்க வர்ணனைகளை அவளுக்குத் தெரிந்த நண்பர்கள் சொல்லும் போது ஒரு சிரிப்புடன் கடந்து விடுகின்றனர். அதை அவர்கள் அழகை ரசிக்கும் தன்மை என்று மட்டுமே பார்க்கின்றனர். ஓட்டல்களில் நாம் பார்க்கும் பெண் மிக அழகாக இருப்பின் நாம் சென்று நீங்கள் மிக அழகு என்று சொன்னால் thanks என்று சொல்லி சிரிப்பார்கள், அதே நம்மூரில் நடந்தால் செருப்படி தான் கிடைக்கும்.
மேற்சொன்ன இரண்டு செய்திகளில் இருந்து வெளிநாட்டுப் பெண்கள் அனைவரும் மிக யோக்கியமானவர்கள் என்பதை நான் நிறுவ முயலவில்லை. ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் நகரில் போது இடங்களில் பெண்கள் ஆண்களை கூவி கூவி அழைப்பதையும் காண முடியும். சனிக்கிழமை இரவுகளில் அவர்கள் அணிந்து செல்லும் உடைகளைப் பார்த்தால் நம் உணர்வுகளைக் கட்டுப் படுத்தவே முடியாது. அதே போல கடற்கரைகளில் மிக மிக கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு மிக அங்கும் இங்கும் படுத்துக் கொண்டிருப்பார்கள். எனவே ஆண் வெகு சுலபமாக பெண்ணை நோக்கி ஈர்க்கப் படுகின்றான். பாலுணர்வு எனபதை பசி உணர்வு போல அந்த உணர்வு ஏற்படும்
போது அதனை தீர்த்துக் கொள்கின்றனர். அதை ஒரு வாழ்வியல் சார்ந்த ஒன்றாகப் பார்ப்பதில்லை. சனிக்கிழமை இரவுகளிலும் கொண்டாட்ட காலங்களிலும் மிக மகிழ்ச்சியாக இந்த பாலியியல் உணர்வை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த செயல் தான் நமக்கு மிக அருவருப்பாகவும் அந்தப் பெண்களை விபசாரிகள் என்று எண்ணுவதற்கு காரணமாக அமைகின்றது.
வெளிநாடுகளிலும் நம்மூர் போலவே குடும்ப அமைப்புகள் மிக வலுவாக இருக்கின்றது என்பதனை கேட்க நம்புவதற்கு கடினமாகத் தான் இருக்கும். ஆனால் அது தான் உண்மை. நம்மூர் வழக்கப்படி பெண்ணை காதலிப்பது என்பதன் அர்த்தமே அவளை திருமணம் செய்து கொள்வதற்கான முதல் படி, மேலை நாட்டில் குறைந்தது இரண்டு மூன்று வருடம் காதலிப்பார்கள் அதற்குப் பிறகு தான் திருமணம் என்ற பந்தததிற்குள் நுழைவதைப் பற்றி யோசிப்பார்கள். அதனாலேயே இங்கே திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
வெளிநாடுகளில் இருக்கும் strip club (ஆடை அவிழ்த்து ஆடும் கூடம்) மற்றும் பெண்களின் உடை ,பழக்க வாழ்க்கங்கள் கொண்டு மட்டும் அப்பெண்ணின் குணத்தினை தீர்மானிக்க முடியாது. அவர்கள் தான் யாரோடு உறவு கொள்ள வேண்டும் எனபதனை தான் தான் முடிவு செய்ய வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதனை மேல் நாட்டு ஆண்கள் நன்கு உணர்ந்திருப்பதால் தான் இங்கே கற்பழிப்பு சம்பவங்கள் நடப்பது குறைவாக இருக்கிறது. மாறாக வெளிநாட்டுப் பெண்களை அதிகம் கற்பழிப்புக்கு உள்ளாவது அதிகம் இந்தியாவில் நடப்பதற்கான காரணமே நாம் அவர்கள் விபசாரிகளைப் போன்றவர்கள் என்ற பொது புத்தி தான். மேலே குறிப்பிட்ட உதாரணங்களிலிருந்து அவர்கள் பற்றிய ஒரு பொய்யான பிம்பத்தில் இருந்து நாம் வெளியே வருவோம் என்றும் நம்புகிறேன்.
இந்தியாவில் விபசாரத்தினை சட்டப்பூர்வமாக்க இந்திய அரசு முயற்சி செய்வது அபாயகரமான விளைவுகளை உண்டாக்கும். கற்பழிப்புகள் வாடிக்கை நிகழ்வாக இருக்கும் நிலையில் இனி கற்பழிக்கும் ஆண்கள் கற்பழிக்கப்பட்ட அப்பெண் விபசாரி என்று தப்பித்துக் கொள்ள வழிவகுக்கும். மேலை நாடுகளில் அனைத்துத் துறைகளிலுமே பெண்கள் ஆண்களுக்கு நிகரான அளவில் பணிபுரிகின்றனர். ஆனால் நாம் நாட்டில் பெண்கள் பல துறைகளில் நுழைய முடியாத அளவிற்கு ஆண் ஆதிக்கம் உள்ளது. எனவே ஏழைப் பெண்களையும் தனித்து வாழும் பெண்களையும் கட்டாயமாக விபசாரத்திற்கு தள்ளும் விபரீதம் நிகழும்.
இந்தியாவில் விபசாரத்தினை சட்டப்பூர்வமாக்க இந்திய அரசு முயற்சி செய்வது அபாயகரமான விளைவுகளை உண்டாக்கும். கற்பழிப்புகள் வாடிக்கை நிகழ்வாக இருக்கும் நிலையில் இனி கற்பழிக்கும் ஆண்கள் கற்பழிக்கப்பட்ட அப்பெண் விபசாரி என்று தப்பித்துக் கொள்ள வழிவகுக்கும். மேலை நாடுகளில் அனைத்துத் துறைகளிலுமே பெண்கள் ஆண்களுக்கு நிகரான அளவில் பணிபுரிகின்றனர். ஆனால் நாம் நாட்டில் பெண்கள் பல துறைகளில் நுழைய முடியாத அளவிற்கு ஆண் ஆதிக்கம் உள்ளது. எனவே ஏழைப் பெண்களையும் தனித்து வாழும் பெண்களையும் கட்டாயமாக விபசாரத்திற்கு தள்ளும் விபரீதம் நிகழும்.