Monday, April 18, 2016

பாட்டாளி மக்கள் கட்சியும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியும்:



என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள் மக்களே! இந்த இரண்டுக்கும் தமிழக அரசியலில் மிக குறைவான வெற்றிகளையே தொடக்கத்தில் பெற்று தற்போது முதல்வர் வேட்பாளர் அறிவிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது பாமக , பங்களாதேஷ் அணி தொடக்க காலத்தில் அதிகம் தோல்விகளையே சந்தித்து தற்போது உலக ஜாம்பவான் அணிகளுடன் மிக தைரியமாக போராடி தோற்கின்றது ,வெகு சில நேரங்களில் வெற்றியும் அடைகின்றது .



அடுத்த முக்கிய ஒற்றுமை பாமகவில் இருக்கும் அண்ணன் மாவீரன் காடுவெட்டி குரு  அவர்களும்  பங்களாதேஷ் அணியின் தாஷிக் அகமது என்பவரையும் தொடர்புபடுத்திய செயல் தான்.கடலூரில் நடந்த தேர்தல் கூட்டத்தில் காடுவெட்டி குரு ஜெயலலிதா முன்னிலையில் நீங்கள் ஆணையிடுங்கள் கருணாதியின் தலையினைக் கொய்து வந்து உங்கள் காலடியில் சமர்ப்பிக்கின்றேன் என்று பேசினார் . இந்தப் பேச்சின் மூலம் தான் அவர் பிரபலமானார். அடுத்து பாபா படப் பெட்டியை வைத்து ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்தில் ஆல் தமிழகத்துக்கும் பிரபலமாகிவிட்டார் மாவீரன் குரு . அங்கே பங்களாதேஷில் இரண்டு மூன்று வெற்றிகளை இந்தியாவுடன் ருசித்த பின்னர் அந்நாட்டு ரசிகர்கள் தாங்கள் தான் உலக சாம்பியன் என்று நினைத்துக் கொண்டு ஒரு படத்தினை வெளியிட்டனர் .பங்களாதேஷ் வீரர் தாசிக் அகமது தோனியின் தலையினைத் தன கையில் வைத்திருப்பது போல படத்தினை வெளியிட்டு இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றினர். அது மட்டுமா ஆஸ்தேரிலியாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியின் போது காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற பின் அந்நாட்டு  ரசிகர்கள் பண்ணக் காமெடிக்கு அளவே இல்லை.



தற்கால நிலை:

பாமகவும் சரி பங்களாதேஷ் அணியும் சரி இன்று முன்பிருந்த நிலையை விட மிக முன்னேறிய இடத்தில் இருக்கின்றனர் என்பதனை யாரும் மறுக்கவியலாது.விஜயகாந்த் வருகையால் இழந்த வாக்கு வங்கியினை மீண்டும் தங்களின் அசுர பிரச்சார யுகதியாலும் ,சரியான திட்டமிடலாலும் மீட்டேடுத்திருக்கின்றனர். வரும் தேர்தல் முடிவுகள் கண்டிப்பக அதனை உறுதி செய்யும் . விஜயகாந்த்  மட்டுமன்றி திராவிடக் கட்சிகளுக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் வட  மாவட்டங்களில் காத்திருக்கின்றது .இதனால் பாமகவுக்கு என்ன பலன் என்று தெரியாது ,அன்புமணி முதன்மைப் பெற்ற பின் வன்னியர் என்ற சொல் உச்சரிப்பு குறைந்து விட்டாலும் இடை நிலை சாதி மக்களிடம் பாமக குறித்த வன்முறை கட்சி என்ற முத்திரை அகலவே இல்லை. பீகாரில் லாலு செய்தது போல வட மாவட்டங்களில் மட்டும் அதிக  கவனம் செலுத்தி ஆட்சியில் பங்கு பெற நினைப்பதே சரியான யுக்தி , தமிழகம் முழுவதும் போட்டியிடுவது அதிக கவனச் சிதறலையே உண்டாக்கும் . ஒரு பக்கம் விஜயகாந்த் வளர்ச்சியினை தடுத்தால் மறு முனையில் நாம் தமிழர் உள்ளே வர முயற்சிக்கின்றனர் .தற்போது உள்ள நிலையில் கடைசிக்கு முந்தைய இடம் தான் பாமகவுக்கு கிடைக்கும்.

பங்களாதேஷ் அணியில் முன்பெல்லாம் மொத்த அணியிலும் நன்கு விளையாடுபவர்கள் ஒன்றோ ரெண்டோ தான் ,ஆனால் தற்போதைய நிலையில் ஏறக்குறைய முக்கல்வாசி பேர் நன்கு ஆடுகின்றனர், பவுலிங்கில் கலக்கி வருகின்றனர்.சமீப வருடங்களில் இந்தியாவுடனான போட்டிகளில் மிக சிறப்பாக ஆடி வருகின்றார் , இந்தியாவும் மிக சிரமப்பட்டே அவர்களை வென்று வருகின்றது.

பங்களாதேஷின் கனவு என்றாவது ஒரு நாள் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் , பாமகவின் கனவு தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் இரண்டும் நடக்குமா நடக்கிறதா என்பது நாம் கணிக்க முடியாது .ஒரு இந்த இரண்டு நிகழ்வும் ஒரே காலகட்டத்தில் கூட நடக்கலாம் .பொறுத்திருந்து பார்ப்போம் .

நன்றி 
செங்கதிரோன்