Thursday, April 16, 2020

புத்தருடன் 55 மணி நேரம்;


ந்த 2019ம் வருடத்தில் சொல்லிக் கொள்கின்ற மாதிரி, மனதுக்கு நிறைவான சம்பவம் , புத்தர் குறித்த ஆவணப்படத்தினை Netflixல் பார்த்துதான். 

பள்ளியில் புத்தர் குறித்த பாடம் இன்றும் நினைவில் இருக்கின்றது (தமிழ் வழிக்ல்கல்வியின் சிறப்பமசம் ). மனைவி மகனை விட்டு விட்டு தனியாக ஆன்மீகபயணம் மேற்கொண்டார் . அந்த சிறு வயதிலேயே எனக்கு புத்தரின் மனைவியும் மகனும் எப்படிப்பட்ட துன்பத்திற்கு ஆளாகியிருப்பார்கள் என்று தோன்றியது. புத்தரின் கோட்பாடுகளும் அந்த வயதில் முழுவதுமாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஒரு வருடத்திற்குப் பிறகு netflixல் நுழைந்து போது வழக்கமாக பார்க்கும் மாஃபியாக்கள் தொடரை பார்க்காமல் புதிதாக ஏதாவது பார்க்கலாம் என்று தேடியபோது கிடைத்தது தான் புத்தர் பற்றிய தொடர். இந்த தொடரில் புத்தரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து நிகழ்வுகளும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

புத்தர் பிறந்தவுடன் முனிவர்கள் இவர் மிக்கப்பெறும் யோகியாக வருவார் என்று கணித்த காரணத்தால் , அவ்வாறு நடக்காமல் இருப்பதற்காக அவனுடைய தந்தை நகரம் முழுதும் வயதானவர்கள் நோயாளிகள் ,ஊனமுற்றவர்களை அப்புறப்படுத்தி அவர்களை தன மகன் புத்தர் பர்ர்க்கதவாறு தனி இடத்தில் தங்க வைத்தார். புத்தர் ஆன்மீகத்தை நோக்கி செல்லாதவாறு அவர் எடுத்த அனைத்து முயற்சிகளுமே தோல்வி அடைந்தன.

மற்ற அனைவரையும் விட புத்தரின் மனைவி அடைந்த துயரம் மிக அதிகம் .அனால் அவர் அதை தன கணவரின் எண்ணம் நிறைவேறுவதற்காக பொறுத்துக்கொண்டார். புத்தரின் மனைவியாக நடித்த பெண் காஜல் ஜெயின் மிக சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். தமிழ் சினிமா ஏன் அவரைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று தெரியவில்லை.

புத்தரின் கொள்கைகளை உலக மக்கள் பின்பற்றயதோடு மட்டுமல்லாமல் அவரின் ஒட்டு மொத்தக்குடும்பமே துறவி பாதையினை தேர்ந்தெடுத்தார்கள் . அதில் மிக குறிப்பிடத்தக்கவர்கள் அவருடைய வளர்ப்பு அம்மா , மற்றும் தம்பி ஆனந்தா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
நன்றி 
செங்கதிரோன் 


No comments: