Thursday, April 16, 2020

snow வியாபாரம்:

தமிழில் இதுவரை மிக மிக சிலர் மட்டுமே இதைப் பற்றி எழுதி இருப்பார்கள். இந்தியாவின் காஷ்மீர் மற்றும் வெளிநாடுகளில் பல் இடங்களில் குளிர்காலங்களில் பனிப்பொழிவு ஏற்படும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த பனிப்பொழிவை நம்பி மிகப்பெரும் வியாபாரம் நடப்பது அனைவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. எனவே அது குறித்து ஒரு சிறிய அறிமுகம்.


1.மக்கள் பனிபொழிவு ஆரம்பிக்கும் ஒரு மாதம் முன்பே ஜெர்கின், பூட்ஸ் , கையுறை போன்றவற்றை வாங்க ஆரம்பித்து விடுவார்கள்.

2. பனிபொழிவு (snowfall) காலங்களில் அனைத்து வீடுகளுக்கும் முன் வாசலில் ஒரு வெள்ளை நிற பிளாஸ்டிக்கினால் பந்தல் போல அமைத்து விடுவார்கள் . அப்படி அமைக்கவில்லை என்றால் வீட்டிற்குள்ளேயே நுழையவோ அல்லது வெளியே வர முடியாத அளவுக்கு snow வீட்டு வாசலை முழ்கடித்து விடும்.


3. கார் போன்ற அனைத்து வாகனங்களும் குளிர் கால சக்கரம் (winter tyre ) மாற்றுவது கட்டாயம். எனவே அனைத்து மெக்கானிக் கடைகளும் நல்ல ஒரு வியாபாரம் நடக்கும். 


4. பனிபடர்ந்த (snow ) சாலையை அப்புறப்படுத்துதல்: வெப்பநிலையை முன்கூட்டியே அறியும் வசதி வந்து விட்டதால் பனிப்பொழிவு ஏற்படும் முன்னரே அனைத்து சாலைகளிலும் உப்புக்களை மற்றும் சிறு கற்களை தூவி விடுவார்கள் . இதனால் snow விரைவில் கரையும் அதோடு மணல்கற்கள் வாகனங்கள் வழுக்கி செல்லாமல் சீராக செல்ல உதவும். இவ்வளவு செய்தும் பனிப்பொழிவு சாலையை முழுக்க ஆக்கிரமித்து மிகப் பெரும் போக்குவரத்து நெரிசலை உண்டாக்கும். இதை தவிர்ப்பது தான் சவாலான வேலை . ஏனெனில் நாடு முழுவ்தும் உள்ள சாலைகள் இப்படி பனியினால் மூடப்பட்டிருக்கும். எனேவ மிகப்பெரிய அளவில் இதனை அகற்றும் பனி நடக்கும். வெப்பநிலை மிக குறைவாகவே இருப்பதால் பனி கரைவது கடினம். அதனால் அப்படியே இந்த பனியினை அள்ளிக் கொண்டு ,நகரின் வெளியே கொண்டு குவிப்பது வழக்கம். 

5. பனிப்பொழிவு சாலைகள் மட்டுமன்றி வீடுகள், மிகப்பெரும் கட்டிடங்களின் மேற்பகுதியில் பெருமளவு தேங்கி விடும். இதனை அகற்றுவதிக்கென்று தனி துறை இருக்கின்றது . அவர்களுடன் நாம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டால் கேக்கை வெட்டுவது போல நம் வீட்டு மாடியில் இருக்கும் snowவினை வெட்டி வெட்டி அகற்றி விடுவார்கள்.

மேற் சொன்ன அனைத்தும் மிக சில மட்டுமே. வெயில் காலங்களில் உடல் சார்ந்த தொழிலில் இருப்பவர்கள் அனைவரும் snow அகற்றும் பனியில் கொஞ்சம் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள் . அந்த மகிழ்ச்சிக்கு காரணம் கூடுதலான சம்பளம். 

நன்றி
செங்கதிரோன்

No comments: