Thursday, April 16, 2020

சினிமா திண்ணை;


சினிமாவுக்குப் பின்னுள்ள செய்திகளை (நடிகர்களின் சம்பளம், அடுத்த படம் போன்ற பல) தெரிந்து கொள்வதில் அனைவருக்குமே ஆர்வம் அதிகம். சினிமா குறித்து சின்ன செய்தியாவது இல்லமல் எந்த பத்திரிக்கையும் வெளிவரவே முடியாத நிலைதான் உள்ளது. youtube சேனல் பிரபலமாகிவிட்ட இந்த சூழலில் பத்திரிக்கைகளில் பணிபுரியும் சினிமா பத்திரிக்கையாளர்கள் மூன்று பேர் சேர்ந்து ஒரு youtube சேனல் தொடங்கி சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பினைப் பெற்றிருக்கின்றனர்.

பிஸ்மி , அந்தணன் , சக்திவேல் இந்த மூவரும் சேர்ந்து நடத்தும் "வலைப்பேச்சு" என்ற சேனல் சினிமா தொடர்பான சேனல்களில் முன்னணி இடத்தில் உள்ளது. இந்த வெற்றிக்குக் காரணம் தனிப்பட்ட திறமைகளும் , அவர்களின் நீண்ட நெடிய அனுபவம் மற்றும் நகைச்சுவையான பேச்சும் முக்கியக் காரணங்கள்.


இந்த சேனலில் புதிதாக எடுக்கப்படும் சினிமா குறித்த சுவாரஸ்யமான செய்திகள் , கேள்வி பதில் நிகழ்ச்சியில் பழைய நடிகர்கள் படங்கள் குறித்த செய்திகள் ,வெளிவந்த படங்களின் வசூல் நிலவரங்கள் மற்றும் சினிமாவில் உள்ள முக்கிய நபர்களின் பேட்டிகள் என்று பல்வேறு பகுதிகள் உள்ளன.

இந்த சேனலை அனைவரும் விரும்பி பார்ப்பதற்கு காரணம் மிக துல்லியமான சினிமா செய்திகள் , ஆக்கபூர்வமான விமர்சனங்கள் என்று பல்வேறு சிறப்பம்சங்கள். இதை விட மிக மிக முக்கியமானது தினமும் தவறாமல் ஒரு காணொளியினை (வீடியோ) வெளியிட்டு விடுவார்கள்.தற்போது இரண்டு லட்சம் சந்தாதாரர்கள் என்ற இலக்கினை எட்டி சாதனைப் படைத்திருக்கின்றனர்.

இந்த சேனல் குறித்து சில விமர்சங்களும் உள்ளன. அரசியல் குறித்த இவர்களின் நிலைப்பாடு (நாம் தமிழர் கட்சி ஆதரவு) சில நடிகர்கள் குறித்த தனிப்பட்ட விமர்சனம் என இந்த மூவரின் சுய சார்பினை சினமா ரசிகர்கள் விரும்புவதில்லை.

ஆனாலும் தற்போதைய நிலையில் சினிமா குறித்த அறிந்து கொள்வதற்கு உள்ள மிக சரியான ஒரு சேனல் இந்த வலைப்பேச்சு என்பது மட்டும் 100% உண்மை. பலருக்கும் இந்த சேனல் குறித்து முன்பே தெரிந்திருக்கலாம் , தெரியாதவர்கள் கண்டிப்பாக youtubeல் வலைப்பேச்சு சேனலைப் பாருங்கள்.
நன்றி 
செங்கதிரோன்

No comments: