பிரான்சின் ஒரு சிறு நகரத்தில் ஒரு ஆப்பிரிக்க மருத்துவருக்கு நடந்த இனவெறி சோகத்தை மிக நகைச்சுவையாக விவரிக்கும் படம் தான் மிக சமீபத்தில் வெளிவந்த ஆபிரிக்க மருத்துவர் திரைப்படம்.
உலகமெங்குமே மருத்துவர்கள் கிராமத்தில் பணியாற்ற அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அதே போன்ற ஒரு நிலைதான் தான் பிரான்ஸ் நாட்டில் உள்ள சிறுநகரத்தின் மேயரும் தன கிராமத்திற்கு பணியாற்ற ஒரு மருத்துவரை தேடி கொண்டிருந்தார். அதே நேரத்தில் பிரெஞ் மருத்துவ கல்லூரியில் படிப்பு முடித்த ஆப்பிரிக்க இளைஞனுக்கு அவனுடைய நாட்டின் அதிபருக்கு மருத்துவராக பணியாற்ற வாய்ப்பு கிடைக்கின்றது.ஆனால் அதிபரின் சர்வாதிகாரத்தனமும் ஊழலும் பிடிக்காததால் அந்த வேலையை செய்ய மறுக்கின்றான். அப்பொழுது அந்த தன் நகரத்திற்கு மருத்துவரை தேடும் மேயரை சந்தித்து அந்த வாய்ப்பினை தனக்கு வழங்குமாறு கேட்கின்றார். ஆனால் அவரோ நீ அதுக்கு சரிப்பட மாட்ட என்கின்றார். நான் கருப்பன் என்பதால் தான் மறுக்கின்றீர்களாஎன்று கேட்டு மடக்கி அந்த வாய்ப்பை பெறுகின்றார்.
இதன் பிறகு நடப்பவை அனைத்தும் சோகம் கலந்த நகைச்சுவை. ஏனென்றால் அவரின் மனைவி மற்றும் குழ்நதைகள் தாங்கள் பாரிஸ் நகருக்கு செல்லப் போகிறோம் என்று நினைத்து கனவுக் கோட்டை கட்டுகின்றார்கள். பிரான்ஸ் வந்து இறங்கியபின் தான் தெரிய வருகின்றது , அது எந்த ஒரு ஆடம்பரமுமில்லாத சிறு நகரம் அங்கு தாங்கள் எப்படி வாழப்போகிறோம் என்று திடுக்கின்றார்கள்.
பள்ளிகளில் அந்த மருத்துவரின் குழ்நதைகளுக்கு நடக்கும் இனவெறி தாக்குதல்கள். மருத்துவமனையில் கறுப்பினர் மருத்துவராக இருந்ததால் யாரும் மருத்துவமனைக்கே வரவில்லை.
ஆனால் இந்த இனவெறி தொடர்பான தாக்குதல்கள் மற்றும் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளாததை அவர் மிகப் பெரிய குற்றமாக கருதாமல் அது மக்கள் திடீரென கறுப்பர்களை பார்க்கும் போது இது போன்ற எதிர்வினைகள் வருவது இயல்பான ஒன்று என்றே அந்த மருத்துவர் பார்த்தது தான அவருக்கு பின்னால் வெற்றியைத் தேடி தந்தது.
படத்தின் சிறப்பம்சங்கள்:
1. தன் நாட்டு அதிபருக்கு மருத்துவராக சேவை செய்யும் அறிய வாய்ப்பு கிடைத்தும் அவர் ஊழல்வாதி என்பதால் அதனை மறுக்கும் துணிச்சல்.
2. தன் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த அதிக அக்கறை கொண்ட அவரின் அக்கறையினை பார்க்கும்போது அது நமக்கும் ஒரு உத்வேகத்தினை கொடுக்கின்றது
3. மக்களை தன பக்கம் ஈர்ப்பதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள்
4.முதன் முதலாக பனிபொழிவினை(snow fall) பார்த்து அந்த மொத்தக் குடும்பமும் கொண்டாடும் அந்த தருணம்
5.மற்ற நகரங்களில் வசிக்கும் இந்த ஆபிரிக்க குடும்பத்தின் சொந்தங்கள் வந்து இந்த சிறு நகரத்தின் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு அவர்கள் போடும் ஆட்டம்.
இது உண்மையாக நடந்த சம்பவம் என்பதனால் இந்தப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையினை அமைத்தது அந்த மருத்துவரின் இளைய மகன். தன் அப்பாவின் போராட்ட வாழ்வினை மிக அருமையாக பதிவு செய்த்திருக்கின்றார்.
உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்தப் படத்தினை பார்த்து மகிழுங்கள்
நன்றி
செங்கதிரோன்