அந்தக்
காலத்தில் விமானம் மட்டுமல்ல கருப்புப் பணமும் இருந்தது என்பதனை
உணர்த்தும் படம் தான் நவாப் நாற்காலி. தமிழின் ஆகச்ச்சிறந்த நடிகர்கள்
அனைவரும் நடித்திருந்த படம். புகழ் பெற்ற திரைக்கதை ஆசிரியரான கோமல்
சுவாமிநாதன் அவர்களுடய நாடகம் ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்டது.
1.தன் முதலாளி கொடுத்த
கருப்புப் பணம் இரண்டு லட்சத்தினை கல்கத்தாவில் பறிகொடுத்ததால்
பைத்தியமாகிவிடுவார் வி.ஸ்.ராகவன்.அவரின் மகளான லட்சுமி அந்தப் பணத்தினை
திருடியவனைக் கண்டுபிடிக்க முயலும் போதும் லட்சிய இளைஞான ஜெய் சங்கருடன்
காதல் வயப்பட அவரும் லட்சுமியுடன் இணைந்து அந்தப் பணம் திருடியவனை
கண்டுபிடிப்பார்.
2.பத்துக்
குழந்தைகளுக்கு பெற்றோரான காந்திமதி சகஸ்ரநாமம் அவர்களின் மூத்த மகன்
நாகேஷ். இவர்களின் குடும்ப சொத்தான நாவாப் நாற்காலியை கில்மா பிர்ஞ்ச் படம்
பார்க்க நாகேஷ் எல்லாக் கடையில் விற்று விடுவார். இந்த நாற்காலியை குழந்தை
பாக்கியம் அற்ற விகே ராமசாமி வாங்கி செல்ல அதனை மீட்க சகஸ்ரநாமம் போடும்
திட்டம் இரண்டாம் பகுதி.
ஜெய் சங்கர் கருப்புப் பணத்தினை பதுக்கி வைப்பதாலே இது போன்ற குற்றங்கள்
நடைபெறுகின்றது என்று கூறி அந்தக் காலத்திலேயே கருப்புப் பணத்தின் தீமை
குறித்து எடுத்துக் கூறிய படம்.
வார இறுதியில் ஒரு இரண்டு மணி நேரம் சிரித்து மகிழ்ந்து செலவிட ஒரு அருமையான படம். பார்த்து மகிழுங்கள்.