அறிவியல் அடிப்படையில் அமைந்தவேயே சிறந்தது என்று , ஆதிமனிதன் உணவு முறையான பேலியோவும் , தமிழர்களின் வாழ்வியல் மருத்துவ முறையான சித்த மருத்துவமும் மக்களுக்கு சிறந்த தீர்வினை அளித்துக் கொண்டிருக்கின்றன .
சித்த மருத்துவமும் , பேலியாவும் அறிவியல் அடிப்படையில் நிரூபிக்க இயலாமுடியாவிட்டாலும் , மருத்துவ அடிப்படையில் நிரூபிக்கப்பட்டு வருகின்றது .
அறிவியல் அடிப்படையில் நிரூபித்தல் என்பது ஒரு பொருளை அதன் தண்மை குறித்து ஆய்ந்து , பின்னர் ஆய்வக சோதனைகள் செய்து , இறுதியாக விலங்குகளுக்கு கொடுத்து பரிசோதனை செய்த பின்னர் மனிதர்களுக்கு பயன்படுத்துதல்.
ஆனால் மருத்துவ அடிப்படியில் நிரூபித்தல் என்பது ஆபத்தற்ற மூலிகை அல்லது உண்வுப்பொருட்களை நோயாளிகளுக்கு கொடுத்து அதனால் ஏற்படும் விளைவுகள் அடிப்படையில் அது பயன்பாட்டுக்கு உகந்தது என்று அறிந்து கொள்வது.
மிக சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற பேலியோ மருத்துவ மாநாட்டில் , ஒரு புகழ்பெற்ற மருத்துவர் அளித்த வாக்குமூலம் என்னவென்றால், if clinically proven , why we need to worry about scientific validation- அதாவது மருத்துவ முறையில் நிரூபிக்கப்பட்டு விட்டால் , அறிவியல் மமுறையில் நிரூபிக்க ஏன் போராட வேண்டும்? இதே கருத்தினை தான் பட்டம் பெற்ற சித்த மருத்துவர்களும் பல காலமாக கூறி வருகின்றனர்.
பேலியோவுக்கு ஏற்பட்டிருக்கும் வரவேற்புக்கு மிக முக்கியக் காரணம் அது மக்கள் மொழியில் பேசபப்டுவதும் , அந்தந்த மக்களுக்கு தகுந்தவாறு உணவுமுறைகளை மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய வகையில் மிக எளிதாக இருப்பதும் .
அமெரிக்காவில் இருந்து கொண்டே பேலியோ குறித்து ஒரு புரட்சி ஏற்படுத்திய நியாண்டர் செல்வன் ஆங்கிலத்தில் பீட்டர் விடாமல் அனைவருக்கும் புரியக்கூடிய எளிய தமிழில் முன்னெடுத்தால் தான் லட்சக்கணக்கான மக்களை மிக எளிதா சென்றடைய முடிந்தது
அறிவியல் முன்னேற்றம் உச்சியில் இருக்கும் இச்சமயத்தில் உலகில் நிருபிக்கப்பட்ட மருத்துவம், நிரூபிக்கப்படாத மருத்துவ முறைகளுக்கிடையியேயான வாதமுமும் அதிகரித்து வருகின்றது.
அறிவியல் ஆய்வுகளுமே பேலியோ மற்றும் சித்த மருத்துவம் குறித்து மிக குறைவாகவே நடைபெற்று இருக்கின்றன . ஏனென்றால் நவீன மருத்துவம் குறித்த ஆய்வுகளுக்கு பயன்படுத்தும் பணத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கே மாற்று மருத்துவ முறைகளுக்கும் பேலியாவுக்கும் ஒதுக்கப்படுகின்றத.
இறுதியாக , நவீன மருத்துவத்தின் அவசியம் என்பது நோய் வந்த பின்னர் தான், பேலியோ , சித்த மருத்துவம் போன்ற வாழ்வியல் முறைகள் நோய் வாராமல் தடுக்க பயன்படும்.
நன்றி
செங்கதிரோன்