கத்துக்குட்டி படத்தின் ஒரே நோக்கம் மீத்தேன் திட்டம் ஆபத்து குறித்த விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்துவதுதான்.நீங்களும் இந்த மீத்தேன் திட்ட ஆபத்து குறித்து பல்வேறு செய்தித்தாள்களில் படித்து இருந்தாலும் அதனை மிக சரியாக காட்சிப்படுத்தி சொல்லும் போது நம் மனதில் சரியாகப் பதியும்.இப்படி நல்ல நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட இப்படத்தில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் சிறப்பில்லாத அம்சங்கள் குறித்த சின்ன பதிவு.
சிறப்பம்சங்கள்:
1.படத்தில் அனைவருமே மிக மிக சிறப்பாக நடித்திருக்கின்றனர்.ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அவர்களுடைய கொடுக்கப்பட்ட பணியினை மிக சிறப்பாக செய்த்ருக்கின்றனர்.
2. அதிக விரசமில்லாத காட்சிகள்
3. ஏகப்பட்ட கருத்துகள் , எறும்புகளை மருந்து வைத்துக் கொல்லாமல் சர்க்கரை வைத்து காப்பது, கைபேசி கோபுரங்களின் தீமை குறித்து அழகான கதாநாயகியின் விளக்கம்.
4. கதாநாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் பிரபல நடிகை துளசியின் சிறப்பான பங்களிப்பு.பாரதிராஜாவின் தம்பி நரேனின் அப்பா வேடத்திற்கு மிக சரியாக பொருந்தி இருக்கின்றார்.
5.மாவட்டமாக வரும் அரசியல்வாதியின் நடவடிக்கைகள் நிஜ அரசியல்வாதிகளின் உண்மையான முகத்தை பிரதிபலிப்பதாக இருக்கின்றது.
6. கடைசியாக சொன்னாலும் இது தான் முதன்மையானது : மீத்தேன் திட்ட பாதிப்பு குறித்த அனிமேஷன் காட்சிகள் உங்கள் மனதை விட்டு நீங்கவே நீங்காது. மிக சுருக்கமாகவும் அதே நேரத்தில் மீத்தேன் பாதிப்பு குறித்த பின் விளைவுகள் குறித்த செய்திகள் மிக சிறப்பாக காட்சிப்படுத்த்பட்டிருக்கின்றன
சிறப்பில்லாத அம்சங்கள்
1. குடி குடி என்று படம் முழுவதும் குடித்துக் கொண்டே இருக்கின்றார்கள்.
2.கதாநாயகனுக்கு ஏன் அப்படி ஒரு பரட்டை தலை , மற்றும் மோசமான தாடியுடனான தோற்றம் என்று தெரியவில்லை.
3. சூரி அவர்கள் முதல் பாதியில் வ.வா.சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது போலவே நடிக்கின்றார் ,இரண்டாம் பாதியில் கேடி பில்லாகில்லாடி ரங்கா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது போல ஒரு நடிப்பு. வெகு சில இடங்களில் நம்மை புன்முறுவல் பூக்க வைக்கின்றார்.
4.படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே பல படத்தில் பார்த்து போல ஒரு அமைப்பு இருக்கின்றது
5. மிக முக்கியமான குறையாக நான் எண்ணுவது படத்தொகுப்பு : ஒரு சில காட்சிகள் கோர்வையாக அமைக்கபடாமல் இருப்பது போல தோன்றுகின்றது
படத்தின் இயக்குனர் சரவணன் |
இணையத்தில் தற்பொழுது கிடைப்பதால் கண்டிப்பாக நீங்கள் வார விடுமுறையில் பார்க்க ஏற்ற படம் இது. இந்தப் படம் தொடர்புடைய அனைவரையும் வாழ்த்துவோம்.
நன்றி
செங்கதிரோன்