Saturday, June 25, 2016

இசை உலகின் தேவதைகள் : கிறிஸ்டினா பெர்ரி (Christina Perri )


ஒரே பாடலில் அதுவும் முதன் முதலாக வெளியான பாடலில் உலகப் புகழ் பெற்றவர்கள் சிலரே , அவர்களில் ஒருவர்தான் கிறிஸ்டினா. பென்சில்வேனியாவில் பிறந்த இவர், தன் சகோதரர்களைப் போல இசையில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. கிதார் மற்றும் பியானோ வாசிக்கக் கற்றுக் கொண்டார்.


21ம் வயதில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் வந்து தனது இசைப்பயணத்தினை ஆரம்பித்தார். அனைவரையும் போல இவருக்கும் ஆரம்பகாலம் மிக கடுமையான ஒன்றாக அமைந்தது. இருப்பினும் 2010ம் ஆண்டு அமெரிக்காவின் புகழ் பெற்ற நிகழ்ச்சியான so you think you can dance என்ற நிகழ்ச்சியில் இவரின் jar of hearts என்ற பாடல் இடம் பெற்றது. பாடலைக் கேட்ட அரங்கமே அதிர்ந்தது.அடுத்த சில நாட்களில் இந்தப் பாடல் உலகம் முழுதும் சென்றடைந்தது. பல மில்லியன் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. அப்பாடலைக் கேட்க நீங்களும் ஆர்வமாக இருப்பீர்கள் , உங்கள் குழாய் இணைப்பினைக்  கீழே கொடுத்துள்ளேன் கேட்டு பார்த்து மகிழுங்கள்.

அதற்கடுத்து இரண்டு இசைத்தொகுப்புகளை வெளியிட்டார். 2012ம் ஆண்டு அவரின் திறமையை நிரூபிக்க இன்னொரு வாய்ப்பு கிட்டியது. மிகப் பிரபலமான காதல் படமான Twilight saga; Breaking Dawn படத்தில் இவரின் A Thousand  years  பாடல் இடம் பெற்றது. இது முந்தைய jar of hearts ன் சாதனையை முறியடித்து தாறு மாறாக வெற்றி பெற்றது. எனக்கும் இந்தப் பாடலின் மூலம் தான் கிறிஸ்டினா பற்றித் தெரியும்.அந்தப் பாடலின் இணைப்பு கீழே உள்ளது.


புகழின் உச்சிக்கே சென்ற இவர் நான்காண்டு இடைவெளிக்குப் பின்னர் கடந்த மாதம் முதல் அடுத்த இசைத்தொகுப்பினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்.அவரின் பாடலைக் கேட்க உலகம் முழுதும் உள்ள அவரின் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். மேல உள்ள பாடல்களைக் கேட்ட பிறகு நீங்களும் கிறிஸ்டினாவின் ரசிகராக மாறிவிடுவீர்கள்.

நன்றி 
செங்கதிரோன் 

விஜயகாந்த் வழியில் விஷால்:

தென் மாவட்டத்தில் பிறந்த விஜயகாந்துக்கு அங்கே செலவாக்கு இல்லை எனவே வட மாவட்ட இளைஞர்களை தன் வசப்பபடுத்திக் கொண்டார். அதே போல தன் சொந்த மாநிலமான தெலுங்கு சினிமா விஷாலை  உள்ளெ வர தடுத்ததினால் தமிழ் சினிமாவில் தஞ்சம் புகுந்தார். ஆனாலும் இங்கு எந்த விதமான பிடிப்பும் கிடைக்கவில்லை . இப்படியே சென்றால் தன்னுடைய அண்னன்(விக்ரம் கிருஷ்ணா) மாதிரி தானும் சீக்கிரமே சினிமாவிலிருந்து காணாமல் போய்விடுவோம் என்று அஞ்சினார். 



மூன்றே படத்தில் தன்னுடைய மார்க்கெட்டை விஜய் மற்றும் அஜித்துக்கு அடுத்த நிலைக்கு எடுத்து சென்று விட்டார் சிவ கார்த்திகேயன். இதனால் விஜயகாந்த் எப்படி வட மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் உள்ள  வன்னியர்களை வளைத்து மிகப் பெரும் வெற்றி அடைந்தாரோ அதே வழியில் செல்ல நினைத்தார். இது போன்ற ஒரு சூழலில் தான் விஷாலுக்கு தெற்குப் பகுதியில் வாழும் தேவர் இன இளைஞர்களைக் குறிவைத்துப் படம் எடுத்தால் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று கனக்குப் போட்டார். வேறு யாரேனும் கூட இந்த யோசனையை வழங்கி இருக்கக் கூடும். 


முதன் முதலாக சுசீந்திரன் இயக்கத்தில் பாண்டிய நாடு என்று மதுரையை மையமாக வைத்து ஒரு படம் எடுத்து சோதனை முயற்சி செய்தார்.மதுரைக்காரன்டா என்ற வசனத்தை சொன்னதன் மூலம் மந்திரித்து விட்ட கோழியாக மதுரைக்காரர்கள் இவரின் ரசிகராக மாறினர். அதற்கடுத்து சாதிப் பெருமையை பேசும் படங்களை எடுப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த முத்தையாவின் இயக்கத்தில் மருது படம் நடித்து முழு நேர தேவர் அரிதாரம் பூசிக் கொண்டுள்ளார்.

கார்த்தி மற்றும் பிரபு இருவரும் தேவரினத்தை குஷிப்படுத்தும் வகையிலானப் பல படங்களை எடுத்து அவர்களை தங்கள் வசபப்டுத்தி வைத்து இருந்தனர். ஆனால் தற்போது அது போன்று யாரும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த தேவர் இளைஞர்களுக்கு விஷால் தான் இப்போது ஆறுதலாக இருக்கின்றார். பிரபு மற்றும் கார்த்தியின் வாரிசுகள் வளரும் வரை விஷாலுக்கு தென் மாவட்டத்தில் சிறந்த வரவேற்பு கிடைக்கும்.


திரையில் மட்டுமல்ல போது வெளியிலும் விஜயகாந்த் வழியினைப் பின்பற்றி பொதுத் தொண்டு செய்வது , ரசிகர் மன்றங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவது என அண்ணன் விஜயகாந்த் வழியில் சிறப்பாக சென்று கொண்டிருக்கின்றார். அது மட்டுமன்றி தமிழரல்லாதோர் பொறுப்புக்கு வருவதற்கு துவாக உள்ள அமைப்பான தென்னிந்திய திரைப்பட சங்கத்திலும் செயலாளராகி விட்டார். தெலுங்கு நடிகையான ரோகிணி பூவுலகு அமைப்பின் மூலம் விவசாயிகள் சங்கத்திற்கும் விஷாலை அழைத்து சென்று கவுரப்பப்டுத்தி  இருக்கின்றார்.


அடுத்து விஜகாந்த் வழியில் அரசியலை நோக்கி செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே எண்ணுகின்றேன். 

சாதிவெறியும் சினிமா வெறியும் தமிழனின் கண்ணை மறைத்தால் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற நிலை மாறி வந்தாரை ஆள வைக்கும் மாநிலம் என்ற சிறப்பு பெயர் பெற்று விளங்கும்

நன்றி 
செங்கதிரோன்


நடிகர் சங்க தேர்தல் குறித்த பதிவு 

இசை உலகின் தேவதைகள்: பெர்ஜி ( Fergie)


தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னாளில் மிகப்பெரிய பாடகியான பெர்ஜி பற்றி இந்தத் தொடரில் பார்ப்போம். ஆசிரிய பெற்றோருக்கு பிறந்த பெர்ஜி நடிப்பு மற்றும் பாட்டுத் திறமையில் சிறுவயதிலிருந்தே மிகுந்த ஆர்வமுடியவராக இருந்தார். இதனாலேயே தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. 


இசைத் துறையில் நுழைய ஆர்வமுடன் இருந்த போது black eyed peas என்ற இசைக்குழுமம் இவரை தங்கள் அணியில் சேர்த்துக் கொண்டது. அந்த அணியின் மிகப்பெரிய வெற்றிக்கு இவரின் குரல் மிகப் பெரும் பலமாக அமைந்தது. எடுத்துக் காட்டாக கீழே உள்ள Pump it பாடலின் காணொளியைப் பாருங்கள், நிச்சயம் நீங்கள் மெய்மறந்து விடுவீர்கள்.


இந்த இசைக்க குழுமம் வெளியிட்ட இசைத்தொகுப்புகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. இடையில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் நடிக்கவும் செய்தார்.2006ல் தனது சொந்த ஆல்பமான dutchess வெளியிட்டார். பெண்களின் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்த தொகுப்புக்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றது . இதனால் அமெரிக்க இசைத் துறையின் அதிகம் விரும்பப்பட்ட  பெண் பாடகி (Favourite female artist ) விருது கிட்டியது. இந்த தொகுப்பின் சிறந்த மற்றும் எனக்குப் பிடித்த பாடலான Clumsyன் காணொளி இணைப்பைக் கொடுத்திருக்கின்றேன் கண்டு மகிழுங்கள்.



எனக்குப் பிடித்த மற்ற பாடல்கள்.
1.My humps 
2.I gotta feeling 
3.Dont stop the party 

பெர்ஜியின் அழகில் மட்டுமல்ல குரலிலும் நீங்கள் மயங்கி இன்பமாக இந்த வார விடுமுறையைக் கொண்டாடுங்கள்.


நன்றி 
செங்கதிரோன்