Tuesday, April 3, 2018

தமிழக்த்தின் புதிய எம்ஜிஆர் -ஜஸ்டின் துருது (Justin Trudeue )


பேஸ்புக் , வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்களில் கனடிய பிரதமர் ஜஸ்டின் அவர்களை புகழ்ந்து பல்வேறு செய்திகள், புகைப்படங்கள் , மீம்ஸ்கள் வலம்  வந்து கொண்டிருக்கின்றது..இந்தப் புகழ்ச்சிக்கெல்லாம் மிகப் பொருத்தமானவர் தான் ஜஸ்டின் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஏனென்றால் ஜஸ்டின் பிரதமரான பின்னர் தான் வெளிநாடுகளிருந்து குடியேறுபவர்களுக்கு பல் விதமான சலுகைகள் வழங்கினார் . அஅவற்றில் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகின்றேன் . , 1)பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறிவர்கள் மிக பாதுகாப்பாக உணர முடிந்தது .2) கனடாவின் குடியேற்ற விதிகளை எளிமையாக்கியதோடு மட்டுமன்றி , போரால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து அகதிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதித்தார். 3)கனடாவின் அருகில் உள்ள அமெரிக்காவோ குடியேற்ற விதிகளை கடுமையாக்கியதோடு மட்டுமன்றி , அகதிகளை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றியது . அவ்வாறு வெளியேற்றப்பட்ட அகதிகளை கனடா தங்கள் நாட்டுக்குள் வர அனுமதித்தது . இவ்வாறு பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகள் செய்தார்.



 ஜஸ்டினின் மற்றோரு மிகப் பெரும் சாதனை என்பது ,உலகம்  முழுக்கவே முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வேளையில்  , முசுலிம் நாடுகளில் நடக்கும் போர்களாலும் அந்த மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களுக்காக கண்ணீர் விட்டதோடு மட்டுமன்றி தங்கள் நாட்டில் குடியேற வழிவகை செய்தார்.

தமிழர்களுக்கு ஜஸ்டினை எம்ஜியாராக பார்ப்பதற்கு எண்ணற்ற காரணங்கள் உள்ளன. ஜனவரி மாதத்தினை  தமிழ் மாதமாக கொண்டாட கனடா அரசு முடிவெடுத்தது , பொங்கல் விழாவில் நம் பாரம்பரிய வேட்டி சட்டை அணிந்து தமிழனாகவே காட்சி அளித்து , நம் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சுற்றியது, பொங்கல் வாழ்த்தினை கொஞ்சு தமிழில் கூறி நம் தமிழர் உள்ளகங்களை கொள்ளையடித்தது என்று பட்டியல் போடும் அளவுக்கு பலவற்றை செய்த்திருக்கின்றார். ஜஸ்டின் மட்டுமன்றி அவர் மனைவி குழந்தைகள் அனைவருமே தமிழ் மக்களால் கொண்டாடப்படுகின்றனர். ஜஸ்டினின் கடைக்குட்டியின் குறும்புத்தனங்களை பிரதமர் முதல் அனைத்து மக்களும் ரசித்தனர்.



நம்மால் எம்ஜிஆர் அளவுக்கு புகழப்படும் ஜஸ்டினை அவருடைய நாட்டு மக்கள் எப்படி மதிப்பிடுகின்றனர் என்பது தான் மிக முக்கியம் , ஏனெனில் வரும் 2019 தேர்தலில் அந்த மக்கள் தான் ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்க முடியும் . எனவே அவர்களின் மதிப்பீடு என்பது மிக முக்கியம். ம்மால் எம்ஜிஆர் அளவுக்கு புகழப்படும் ஜஸ்டினை அவருடைய நாட்டு மக்கள் எப்படி மதிப்பிடுகின்றனர் என்பது தான் மிக முக்கியம் , ஏனெனில் வரும் 2019 தேர்தலில் அந்த மக்கள் தான் ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்க முடியும் . எனவே அவர்களின் மதிப்பீடு என்பது மிக முக்கியம். 2015ல் மிகப்பெரும் வெற்றியுடன் ஆட்சி அமைத்தவர் .

 வரவிருக்கின்ற 2019  கனடிய பிரதமர் தேர்தல் ஜஸ்டினுக்கு நம்மூர் மோடிக்கு இருக்கும் சவால் போலவே இருக்கும் என பெரும்பாலான கனடிய ஊடகங்கள் கணிக்கின்றன . இருப்பினும் வலுவற்ற எதிரிக்கட்சிகளால் அவர் வெற்றி பெறவே அதிகம் வாய்ப்புள்ளது . அமெரிக்க அதிபர் ஒபாமா இரண்டாம் முறை அதிபராக முக்கியக் காரணமாக அமைந்த வெளிநாட்டுக்குடியேறிகள் (Immigrants) போல , ஜஸ்டினுக்கும் இஸலாமிய நாடுகளிலிருந்து குடியேறிய மக்களின் முழுமையான ஆதரவினால் மீண்டும் வெற்றிவாகை சூடுவார் என்று எதிரிபார்ர்க்கப்படுகின்றது .

நன்றி
செங்கதிரோன்

ஜஸ்டின் குறித்த முந்தைய பதிவு- உலக மக்களின் உள்ளம் கவர்ந்த ஜஸ்டின்